உன் கரம் தழுவிய நிமிடத்தினும்,
உன் துப்பட்டா வருடிய ஸ்பரிசமே இனிக்கிறது.
நீ சூடும் மல்லிகை மணத்தினும்,
உன் மூச்சுக்காற்றே பிடிக்கிறது.
பிரிந்திருந்த பல நாட்களினும்,
பிரியும் அந்த ஒரு நொடியே அதிகம் வலிக்கிறது.
நீ பேசும் பல ஏச்சுக்களினும்,
நீ சாதிக்கும் மௌனமே வலிக்கிறது.
தாமரையின் பாடல் வரிகளினும்,
உன் உளறல்களே பிடிக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Nice :))
நன்றிகள் !!
ரொம்ப நல்லா இருக்கு வரிகள் அனைத்தும்!!!
நன்றி:) ரசித்து எழுதிய வரிகள்...
அகம் பற்றியே ரொம்ப எழுதுர. புறம் பற்றி யோசி.எழுது.
good...
Post a Comment