கனவும் அவளும் (பாகம் - இ) - இத்துடன் முற்றும்!

கனவும் அவளும் (பாகம் - அ)
கனவும் அவளும் (பாகம் - ஆ)

திரும்பவும் தேவிக்கு அழைப்பு விடுத்தான் ரவி. பெரிய மழை கொட்டியதால் அழைப்பு கிடைக்கவில்லை. தேவி என்ன நினைத்திருப்பாள் என அவளுடைய மனவோட்டத்தை அறிய ஆவலாய் இருந்தான் ரவி. இதுவே, காயத்ரி தன் முன் நின்று இதை எல்லாம் கேட்டிருந்தாள் என்றால் அவள் முக தோற்றத்திலேயே என்ன நினைத்திருப்பாள் என்பதை ரவி அறிந்திருப்பான். இடையே, ரவிக்கு தான் பேசியது முழுவதையும் அவள் கேட்டிருப்பாளா என்ற சந்தேகம் வந்தது. அத்துடன் துக்கமும் வந்தது.

மறுநாள் காலை விடிந்தது. காயத்ரியிடமிருந்து வந்த 12 தவறிய அழைப்புகளை கண்டு பதறியபடி அவளுக்கு அழைப்பு விடுத்தான் ரவி. சிறிது நேரத்திற்குப்பிறகே அழைப்பு ஏற்கப்பட்டது.

"தேவி...! "

"ரவி, நீ நேத்து சொன்னதெல்லாம் கேட்டேன்.
நைட் லாம் தூங்கவே முடியல...
யோசிச்சு பாத்ததுல,
பெட்டர் நாம ரெண்டு பிரிஞ்சுறது தான் ரெண்டு பேருக்கும் நல்லது...
ஐ'ம் நாட் தி ரைட் சாய்ஸ் பார் யூ"

"தேவி.. என்ன சொல்ற?!!"

"உங்களுக்கு இருக்குற ட்ரீம்ஸ் போல, எனக்கும் நிறைய ட்ரீம்ஸ் இருக்கு....
கை நெறைய சம்பளம் வர்ற மாதிரி செக்யூர்டா ஒரு வேல...
ஷாப்பிங் காம்ப்லக்ஸோட இருக்குற ஒரு அப்பார்ட்மண்ட்ல ஒரு வீடு...
ஜாலியான வீக் என்ட்ஸ்....
இந்த மாதிரி தான் என் லைப் போகணும்னு நான் நெனக்கிறேன்.
அதோட, உங்களோட என்னால சேந்து வாழ முடியும்ன்ற நம்பிக்க எனக்கு இல்ல.
ஆறு மாசமா இப்படி ஒரு வேலைய பண்றத என்கிட்டே இருந்து மறச்சுட்டிங்க .
என்கிட்டே ஒரு வார்த்த கூட கேக்காம
வேலைய விடறதா முடிவு எடுத்துட்டேன்னு சொல்றிங்க...
உங்களோட சேந்து கஷ்டப்பட எனக்கு விருப்பமில்ல...
சின்ன வயசுல நான்கூட தான் எங்க அம்மா கிட்ட ஏரோப்ளேன் ஓட்டப் போறேன்னு சொன்னேன்.
அதுக்காக நா வேலைய விட்டுட்டு ஏரோப்ளேன் ஓட்ட போக முடியுமா?"

இந்தப் பேச்சை எல்லாம் கேட்க கேட்க ரவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... உதடுகள் ஒட்டிக்கொள்ளாவிட்டாலும், வரண்டுவிட்டது. அவை ஒட்டிக்கொண்டதை போலவே தோன்றியது ரவிக்கு.
காயத்ரி மேலும் கூறினாள்.

"ரவி, நான் தான் உங்ககிட்ட முதல ப்ரொபோஸ் பண்ணினேன். வாழ்கைல முதல் தடவ ஐ ஹேவ் மேட் எ ராங் சாய்ஸ்...
சாரி ரவி..."

பிறகு காயத்ரி சற்று வித்யாசமாக பேசினாள்.

"நாம இன்னிக்கு எங்க போக போறோம் ரவி... நம்ம பிளான் என்னனு சீக்கிரம் சொல்லு.... எனி நியூ ப்ளேஸ்?"

ரவிக்கு ஒன்றுமே புரியாதனால் தன் இடது கையால் தலையை சொரிந்து கொண்டே காயத்ரி மேலும் என்ன சொல்கிறாள் என கேட்க கீழே இருந்த தன் வலது கையை எடுத்து காதினருகில் வைத்தப்பின்னும் ஏதும் கேட்காததால், டவர் இருக்கிறதா என பார்த்தான்....
கை ரேகை தான் தெரிந்தது....

இப்போது ரவிக்கு கூடத் தெரியாத ஒன்று நமக்குத் தெரிகிறது...இதுவரை நடந்தது எல்லாம் கனவு தான் எனக் கூட தெரியாமல் தலையணையருகில் இருந்த கைபேசியை எடுத்து காயத்ரியிடம் பேச முற்பட்டான்...

"தேவி... தேவி... "

சில நேரத்திற்குப் பின் தான் ரவி தெளிவுக்கு வந்தான். பின் அவளிடமிருந்து வந்த ஒரு குருஞ்சேதியை வாசித்தான்.

"தேர் வோன்ட் பி நேசசரிலி ஒன்லி ஒன் சுதா மூர்த்தி.. குட் மார்னிங்"
(thr wont b necesarily only 1 sudha murthi... gud morng)

உடனே அவளுக்கு அழைப்பு விடுத்தான் ரவி. காயத்ரி அழைப்பை ஏற்ற உடன்...

"ரொம்ப பெருமையா இருக்கு ரவி....
ரொம்ப பெருமையா இருக்கு.
எனக்கும் சில சமயம் தோணும்,
என்னடா வாழ்க்க இதுனு...
எல்லாரபோலயும் பிறந்தோம், படிச்சோம், வேல பாத்தோம்னு இருக்கோமே....
எதாச்சும் சாதிக்கணும்னு....
ஆனா உடனே அது எல்லாம் சாத்தியப்படாதுன்னு நினப்ப மாத்திக்குவேன்...
ஐ'ம் வெரி ப்ரவுட் டு பி வித் யூ"


ஆனாலும் எனக்கு நம்பிக்கை இல்லை.
ரவியின் கனவில்...
அவன் பகலில் காணும் கனவில் அல்ல...
அவன் இரவில் கண்ட கனவில்...
எது கனவில் நடந்தது ? எது நிஜத்தில் நடந்தது ? என்பதில்...

ஒன்று தான்...

ஓர் பெண்ணைக் கற்பழித்து,
கைவிடும் ஆணும்.
ஓர் ஆணைக் காதலித்து,
கைவிடும் பெண்ணும்.

கனவும் அவளும் (பாகம் - ஆ)

கனவும் அவளும் (பாகம் - அ)

மழையானாலும் பரவாயில்லை என மழை-கவசத்தை அணிந்து கொண்டு விரைவாக தான் நண்பர்களுடன் தங்கியிருக்கும் வீடு நோக்கி வண்டியை விட்டான் ரவி.

பிறகு தன் நண்பர்களோடு சேர்ந்து, கடந்த ஆறு மாதங்களாக ஒரு புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்க செய்துவரும் ஆயத்தப் பணிகளை அரைமனதுடன் தொடர்ந்தான்.
இவையெல்லாம் காயத்ரிக்கு தெரியாது. அவளிடம் காயத்ரி சொல்ல நினைத்ததும் இதுவே.

சிறிது நேரத்திற்கெல்லாம் காயத்ரியிடமிருந்து அழைப்பு வந்தது. சற்று நிதானித்தே அழைப்பை ஏற்றான்.

"என்ன ரவி தூங்கிட்டியா?"

"இல்லடா!"

"அட்டன் பண்றதுக்கு இவ்ளவு நேரமாச்சு?" என்று கோபித்துக்கொண்டாள் காயத்ரி.

பிறகு, "சரி!, இன்னிக்கு ஈவ்னிங் ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்னு சொன்னியே, இப்ப சொல்லு"

"அதுவா? அதுவந்து... ஒண்ணுமில்ல..." இவ்வாறு சமாளிக்க நினைத்துப் பிறகு ஒருவாறு ஆரம்பித்தான்.

"தேவி, எனக்கு நீ ரொம்ப பெரிய ஹெல்ப் பண்ணனும், பண்ணுவியா?"

"என்னடா... ? ஹெல்ப்னுலாம் கேக்குற புதுசா. எனிதிங் சீரியஸ்?"

"யா தேவி!"

"சரி சொல்லு..."

"அதாவது தேவி.... அடுத்த மாசத்துல இருந்து வேலைய விட்டுடலாம்னு இருக்கே"

"என்ன சொல்ற ரவி... ஆர் யு ஜோக்கிங். உனக்கு என்ன பைத்தியமா? லுசாபா நீனு?"

"ஆமா தேவி... நா முடிவெடுத்துட்டேன்.

"நானும், என்னோட காலேஜ் பிரான்சும் சேந்து சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கப் போறோம் ஆறு மாசமா ப்ரிபரேடரி வொர்க்ஸ் பண்ணிட்டு இருகோம். அடுத்து நாங்க போக போற பாத கொஞ்ச கஷ்டமானதா இருக்கும். ஆனா எங்களுக்கு முழு நம்பிக்க இருக்கு. நாங்க எல்லாருமே சொந்த கால்ல நிக்கணும்னு முடிவு பண்ணிடோம். இன்னும் ரெண்டு வருஷம் சமாளிச்சுடோம்னா அடுத்து கெடக்க போற பேர், புகழ், பணம் எல்லாமே நம்ம லைப மாத்திடும்..."
இவ்வாறு சொல்லிவிட்டு, பின்பு பின் வருமாறு தொடர்ந்தான் ரவி.

"இது எல்லாத்துக்கும் மேல எங்க அப்பாவோட ஆச.. எழ பிள்ளைங்க படிகிரதுகு ஒரு ஸ்கூல் ஆரம்பிக்றது நேரவேரிரும்....எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு தேவி... அப்ப என்னக்கு ஒரு பத்து வயசு இருக்கும். 'நா பெருசானது ஒரு கார் வாங்கி உங்களையு அம்மவயு கூட்டிட்டு போவே' அப்ப வெளையாட்டா அப்பா கிட்ட சொன்னது
அப்பாவுக்கும் வயச்சாயிடே போது.. நா சொன்னத செஞ்சு காட்ட வேண்டாமா?
என்ன சொல்ற தேவி...? "
இவ்வாறு சொல்லிமுடிக்கையிலே,
"கிங்.........கிங்...........கிங்..........", அழைப்பு துண்டிப்பானது.

கனவும் அவளும் (பாகம் - இ)

எப்படித் தேட??

எனதருகில் நின்று,
என் கண்களைக் கட்டி,
என் கரத்தைப் பிடித்து,
உன்னையே தேடச் சொல்கிறாயே,
தொலைக்க நினைப்பவனிடம்...

கனவும் அவளும் (பாகம் - அ)

(ஒரு குறுந்தொடர்கதை, பாகம் - அ)
எல்லா வார சனிக்கிழமை போலவே அன்று மாலையும் அவர்கள் கடற்கரைக்கு காற்று வாங்க சென்றிருந்தனர். வானம் சற்று கறுத்து தான் காணப்பட்டது. மழை வரலாம் போல இருந்தது.

அவன் ரவி என்ற ரவிவர்மன். அவள் காயத்ரி என்ற காயத்ரி தேவி. இவர்கள் இருவரும் கடந்த பதினாறு மாதங்களாக காதலித்து வருகின்றனர். சென்ற புதனோடு இவர்கள் இருவரும் சந்தித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. இருவரும் அந்தச் சிறு வளர்ந்துவரும் மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

எல்லா காதலர்கள் போல உண்டேன், உடுத்தினேன் என அவசியமல்லாவற்றை பேசிமுடித்து விட்டு ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்ல வாயெடுத்தான் ரவி. ஏனோ அவனுக்கு இன்று அவளிடம் அந்த விஷயத்தை சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது.

"தேவி, நேத்து ஒரு பார்வட் மெயில் படிச்சே. அதுல நம்ம இன்போசிஸ் நாராயண மூர்த்தி சாரோட ஒய்ப் சுதாவ பத்தி படிச்சேன்"

"ஆமா ரவி, நா கூட படிச்சிருக்கேன். முன்னாலேயே அந்த மெயில் எனக்கு வந்திருக்கு"

"ம்!. ஹவ் க்ரேட் ஷி இஸ், இல்ல ? ஒவ்வரு ஆணோட வெற்றிக்கு பின்னாலயும் ஒரு பொண்ணு இருப்பான்னு சொல்வாங்க. அது மூர்த்தி சார் விசயத்துல எவ்ளவு உண்ம தேவி"

"சரி தா ரவி! இது சாதாரண ஹவுஸ் ஓய்ப்ஸ்கும் அப்ளிகபில்"

"இருகலா தேவி ஆனா அவங்க எல்லாருமே ஒரு ஆண வெற்றி பெற வச்சாங்கன்னு சொல்ல முடியாது"

"அப்டினா சுதா மூர்த்தி போல எல்லா பொண்ணுங்கனால இருக்க முடியாதுன்னு சொல்றியா ரவி?"

"அப்டி இல்ல. அவங்க வாழ்க்கை முறை அதுக்கு ஒதுழக்காது.சுதா மூர்த்தி விசயத்துல அவங்க மூர்த்தி சாருக்ககவும் அவரோட கனவுக்காகவும் எவ்ளவோ த்யாகம் செஞ்சிருக்காங்க. உனக்கு தெரியுமா? , ஷி காட் ஹேர் எம்.டெக் ப்ரம் ஐ.ஐ.எஸ்.சி பங்ளூர் இன் 1975.

'பெண்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம்' ன்னு கண்டிசனோட இருந்த டாட்டா வோட டெல்கோ கம்பனி விளம்பரத்த படிச்சுட்டு கோபத்தோட ஜே.ஆர். டி டாட்டா வுக்கே லெட்டர் எழுதுனாங்கலாம். பின்ன கால் லெட்டர் அனுப்சு அவங்கள டாட்டா வேலைக்கு எடுத்துச்சாம்.

மூர்த்தி சார் இன்போசிஸ் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி அவர விட அதிகம் சம்பாதிச்சுட்டு இருந்தாங்களாம்! பின்ன அந்த வேலைய விட்டுட்டு மூர்த்தி சார்'உடையும் , அவரோட பிரண்ட்ஸ்'உடையும் சேந்து இன்போசிஸ் ஆரம்பிச்சாங்களாம். அவங்க எல்லாருமே ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம். அவங்களாம் அப்ப கஷ்டபட்டதால தா நமக்கு இப்ப இவ்ளவு ஆப்பர்சுனடீஸ்.இந்த மாதிரி நெறைய சொல்லிடே போலாம்."

இவ்வாறு கதை சொல்லிவிட்ட பிறகு ரவி,
"சுதா மூர்த்தி பல பேருக்கு ரோல் மாடலா இருக்கனும்" , என்று கூறிக்கொண்டே காயத்ரியை குறிப்பது போல பார்த்தான்.

பல மாதங்களாக பாரமாக மனதில் வைத்திருந்ததை அன்று காயத்ரியிடம் சொல்லிவிடவேண்டும் என எண்ணியிருந்தான் ரவி.

"தேவி, உன்கிட்ட ஒரு முக்கியமான விசயத்த பத்தி சொல்லணும்"
இவ்வாறு அவன் சொல்லிக்கொண்டே அண்ணார்ந்து வானத்தைப் பார்த்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. எனென்றால், அப்போது மலைச்சாரல் மெல்ல மெல்ல ஆரம்பித்திருந்தது.

"ரவி, இப்ப கேளம்பினாதான் நான் ஹாஸ்டல் போய் சேர முடியும் போல டா, என்ன ட்ராப் பண்ணிட்ரியா?"

பலமுறை இந்த விசயத்தை காயத்ரியிடம் சொல்ல வந்து, சொல்ல முடியாத படி இப்போது ஆகிவிட்டது.

மழையை திட்டி என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டே தன் இருசக்கர வாகனத்தில் காயத்ரியை அவள் தங்கியிருக்கும் விடுதியில் இறக்கிவிட்டான். அப்போது மழை நன்றாக பிடித்துக்கொண்டது.....

கனவும் அவளும் (பாகம் - ஆ)
கனவும் அவளும் (பாகம் - இ)

அதனை விட

உன் கரம் தழுவிய நிமிடத்தினும்,
உன் துப்பட்டா வருடிய ஸ்பரிசமே இனிக்கிறது.

நீ சூடும் மல்லிகை மணத்தினும்,
உன் மூச்சுக்காற்றே பிடிக்கிறது.

பிரிந்திருந்த பல நாட்களினும்,
பிரியும் அந்த ஒரு நொடியே அதிகம் வலிக்கிறது.

நீ பேசும் பல ஏச்சுக்களினும்,
நீ சாதிக்கும் மௌனமே வலிக்கிறது.

தாமரையின் பாடல் வரிகளினும்,
உன் உளறல்களே பிடிக்கிறது.

வேறொன்றும் இல்லை

நான் சொல்வதெல்லாம் உண்மை,
அதைத்தவிர வேறொன்றும் இல்லை...

நான் சிவம்.
அவள் சக்தி.
என்னில் பாதி அவள்,
அதைத்தவிர வேறொன்றும் இல்லை...

அனல் மேலே பனித்துளி

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: சுதா ரகுநாதன்
வரிகள்: தாமரை

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

(அனல் மேலே..)

எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இன் நிலாவின் கறை கறை

(அனல் மேலே..)

சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட

(அனல் மேலே..)

ஒரே கனா

ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்
கனா மெய்யாகும் நாள் வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்

வானே
என் மேலே
சாய்ந்தாலுமே
நான்
மீண்டு காட்டுவேன்

படம்:குரு

சுயம் வரம்

அன்று வெள்ளிக்கிழமை,
சுப முகுர்த்த மாலை வேளை,
அவர்கள் சுயம் வரத்திற்கு
வருகை தந்திருந்தனர்,
தூரத்து தேசத்து (குடி)மன்னர்கள்.
'போதை' எனும் மங்கையை மணப்பதற்கு.

வைர நெஞ்சம்

அவள் வைர நெஞ்சத்தவள்,
எறும்பு ஊறக் கூட கல் தேயுமாம்!

கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..
என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் –
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு ஒ..

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..

யாரோ ? உன் காதலில் வாழ்வது யாரோ ?-
உன் கனவினில் நிறைவது யாரோ ? என் சலனங்கள் தீர்த்திட வாராயோ !?
ஏனோ என் இரவுகள் நீள்வது, ஏனோ ? ஒரு பகல் எனை சுடுவது ஏனோ,?
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ..?
காதல் தர நெஞ்ஜம் காத்துயிருக்கு காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?
இலையை போல் என் இதயம் தவறி விழுது..

பிம்பம்

"அவளைக் காண்பதை தன் தினசரி 'வேலைகளில் ஒன்றாக' வைத்திருந்தான் கார்த்திக்" என்று சொன்னால் அது அபத்தம். பேருந்து நிறுத்தத்தில் மதியை காணாமல் அவனால் வேலைக்குச் செல்ல முடியாது. அவளைக் காணாததனால் அலுவகத்திற்கு விடுப்பு எடுத்ததும் உண்டு.

அவன் பிற ஆண்கள், பெண்களை நோட்டம் விடுவதைப் போல அவளைக் காண்பது கிடையாது. அவன் பார்வையில் காதல்... காதல் மட்டும் தான். அவனுக்கு தன் தாயிடமிருந்து கிடைக்கப் பெறாத ஒன்றை அவளிடமிருந்து கிடைக்கப் போவதாக உறுதியாக இருந்தான்.

இந்திந்த காரணங்களினால் தாம் காதல் வரவேண்டும் என தமிழ் முன்னோர் எவரும் எழுதி வைத்திருக்கவில்லை. அவ்வாறு எழுதி வைத்திருந்தாலும் அவனால் காரணம் கூற இயலாது. எழுதி வைக்காதிருத்தலுக்கு அவர்களையும் நம்மால் குறை கூற இயலாது. பாவம், அவர்களும் அறிந்திருக்க மாட்டார்கள் போல.

பிறக்கும் முன்னே குடிகார தந்தையையும், ஐந்து வயதில் தாயையும் இழந்த அவனுக்கு சாமி கும்பிட கூட எவரும் சொல்லிக் கொடுத்தது கிடையாது.

என்றாவது ஒருநாள் மதியின் அன்பு, பாசம், காதல் கிடைக்கும் என்றிருந்தான், கார்த்திக். இவற்றிற்கும் மேல் ஒன்றுகூட அவன் இறைவனிடம் வேண்டியது இல்லை, அவளைக் கண்ட நாள் முதல் அல்லது அவன் சாமி கும்பிட ஆரம்பித்த நாள் முதல்.

அன்றும், என்றும் போல மதியை கண்டு கொண்டே சாலையை கடக்க முயற்சித்த போது அது நடந்தது. அவன் விழி மூடும் போது, அதன் மணியில் கடைசியாய் பதிந்த பிம்பம் மதியினுடையதாய் தான் இருந்திருக்க வேண்டும்.

அவனுக்காக பதறிய மனம் மதியினுடையதாய் இருந்தது. அவன் தாய் கூட மேல்லோகத்தில் அவனைக் கண்டு இவ்வளவு பதறியிருக்க மாட்டாளோ?.

அன்று இரவு மதியின் தலையணையை அவள் விழி நீர் நனைத்தது. தானும் கொண்டிருந்த வெளிப்படுத்தாத காதலால் தான் அவனுக்கு இந்த கதி என்ற குற்ற உணர்ச்சி அவளை சாகடித்து.

மீண்டும் கண்விழித்த போது அவன் விழியில் விழுந்த பிம்பமும் மதியினுடையதாய் தான் இருந்தது, மறுநாள் காலை மருத்துவமனையில்.

நியூயார்க் நகரம்

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

பேச்செல்லாம் தாலாட்டுப் போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காஃபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமை நிமிஷங்கள் வருஷமானதேனோ?
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ?

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.

நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க
பெயரும் ஆனதென்ன தேனா?
ஜில்லென்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர்காலம் கோடையானதேனோ?
வா அன்பே! நீயும் வந்தால்
செந்தணல் கூடப் பனிக்கட்டிப் போல மாறுமே!

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

பழைய மாமல்லபுரம் சாலை

சிறிய முள் ஒன்பதில் இருந்து பத்தை அடையத் துடித்து கொண்டிருந்தது. பெரிய முள் மூன்றை வருடிக் கொண்டிருந்தது.

'சாய் பாபா மெஸ்' என ஆங்கிலத்தில் எழுதி இருப்பது மின் விளக்கு வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது. ரமேஷ் அன்று அதிகாலை தான் தன் இரண்டு வருட 'ஆன்சைட் பணிகளை முடித்து விட்டு தாயகம் திரும்பியிருந்தான். 'இயர் பீஸ்' காதிலும் நிறுவன அடையாள அட்டை பெல்டிலும் இருப்பது அவன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிவதை உறுதி செய்தது.

ரமேஷ் மெசிர்குள் நுழைந்ததும் அனைவரின் பார்வையும் அவன் பக்கம் திரும்பவில்லை . ஏனெனில் அங்கு குழுமிருந்தவர்கள் அநேகர் அவனது துறையினர் தாம். மெச்சில் கிடைக்கும் உணவுகள் 'ஹோம்லி புட்' ஆக இருக்கும். அதனாலே அந்தப் பகுதியில் 'சாய் பாபா மெஸ்' புகழ்.

தன் பையை இறக்கி வைத்து, கை கழுவி விட்டு இருக்கையில் அமர்ந்தான், ரமேஷ். அவன் அங்கு கண்டது. பெயர் அர்ச்சுன் , பத்து வயது குழந்தைத் தொழிலாளி. அனுபவம் இரண்டு மாதம்.

ரமேஷ் கண் முன்னால் மேஜை துடைக்கபட்டது. தோசை 'ஆர்டர்' செய்யப்பட்டது. அரை மனதுடன் அரை தோசையை உண்டு விட்டு கை கழுவினான். மெதுவாக அர்ச்சுனை நோட்டம் விட்டுகொண்டே மீண்டும் மேசைக்கு வந்து அமர்ந்தான். தன் பையில் இருந்து ஒரு கோப்பை(file) எடுத்தான்.

அதில் தன் 'ஆஃப்ஷோர்' அணியினருக்கு வழங்கியது போக சில 'பாரின் சாக்லேட்' இருந்தன. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகள் பணியாற்றியதற்கு 'போனஸ்' ஆக வாடிக்கையாளர்கள் வழங்கிய 10,000$ க்கான காசோலையும் இருந்தது.

சாக்லேட்'ஐ அர்ச்சுனுக்கு கொடுத்தான். அப்போது அர்ச்சுன் மெஸ் முதலாளியை ஓரக் கண்ணால் பார்த்து, அவர் சம்மதத்தை பெற்றுக் கொண்ட பிறகு சாக்லேட்'ஐ பெற்றான்.

அப்போது ரமேஷ் மகிழ்ந்தான், அர்ஜுனை மகிழ்வித்து. "இந்தக் கோப்பில் இருக்கும் சாக்லேட் மட்டுமல்ல உனக்கு" என்று தனக்குள் சொல்லிக் கொண்டு நடையை கட்டினான் ரமேஷ்.

வித்தவுட்

என்னடா இது வாழ்க்கை, தினமுன் ஒன்று போலவே இருகிறதே என சலித்து இருந்தபோது இன்று காலை நடந்தது இது...

எப்பவும் போல இன்று காலையும் பேருந்தில் ஏறுவதற்கு எஸ்.ஆர்.பி நிறுத்தத்திற்கு வந்தேன். அந்த மிதவைப் பேருந்து நான் சாலையை கடக்கும் வரை காத்திருந்த பொது எனக்கு சந்தேகம் வரவில்லை.

மட மட என காலை அவசரத்தில் சாலையை கடந்து வந்தவுடன் பேருந்தில் ஏறிவிட்டேன். உள்ளே ஏறியவுடன் இரண்டு பரிசோதனையாளர்கள் பயணிகளின் பயணச்சிட்டுகளை சோதனை செய்து கொண்டிருந்தனர்.

என்னைக் கண்டவுடன், என்னிடமும் பயணச்சிட்டு கேட்கப்பட்டது. நான் பேசும் முன்பே என் அருகிலிருந்தவர் பேசிவிட்டார். அப்போது விவாதம் பின்வருமாறு நடைபெற்றது.

அவர்: அவரு இந்த ஸ்டாப்ல தாங்க ஏறுனாரு .

ப.ப: எப்டிங்க ஏறிருப்பாறு, அதான் சூபர்வைசர் கீல நிக்கிரார்ல.

நான்: வெளிய யாரும் இல்லயே.

அதற்குள் பராக்கு பார்க்க சென்றிருந்த வெள்ளை சட்டை அணிந்திருந்த சூபர்வைசர் வாக்குவாதத்தில் கலந்துகொண்டார்.

ப.ப: சார், இந்த ஸ்டாப்ல ஏருனாராம்.. இவரு பாத்தாராம்..

சூ.வ: யாரது..

ப.ப: இவருதான்

சூ.வ: யோவ். உன் வேலைய பாத்துட்டு போயா.

நான்: ஹலோ சார் மரியதையா பேசுங்க... டிக்கெட் செக்கிங்நா வெளிய இருந்து யாரும் ஏறாம பாக்க வேண்டியது தான... இல்ல டோர மூடியிருகலாம்ல...

இவ்வாறு தொடர்ந்த சூடான விவாதம், பிறகு பேருந்து கிளம்ப வேண்டும் என்றபடியால் எப்படியோ முடிவடைந்தது.

இடையில், ஒருவர் "அமைதியா இருங்க சார் பஸ் கெளம்பனும்ல" என்றார்.

"ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்வது கூட தவறு போல, இவனுக்கு உதவப் போய் நான் வாங்கிக் கட்டிக்கொண்டேன்" என அவர்(எனக்கு உதவியவர்) எண்ணியிருப்பார் என நினைத்துக்கொண்டே 'தாங்க்ஸ் பாஸ்' எனக் கூற, அவரோ "உண்மைய சொல்றதுக்கு எதுக்குங்க தாங்க்ஸ் எல்லாம்" எனகூறி ஒரு புன்னகை அழித்தார்.

பேருந்து சென்றுகொண்டிருந்த போதே, இதை எல்லாம் கண்டுகொண்டிருந்த பெண் ஒருத்தி சென்ற வாரம் இதே போல் ஒரு நிகழ்வை தான் கண்டதாகவும், அப்போது எவரும் வேறு எவரும் வாய்திறக்கவில்லை எனவும், தான் சொல்லி எவரும் கேட்கவில்லை எனவும் கூறினாள்.

நல்ல அனுபவமாக இருந்ததாக நினைத்துக்கொண்டேன்.

உனக்கு பிடிச்சிருந்தா…எனக்கும் தான்

தொலைபேசி விடாமல் சிணுங்கியது…. எடுக்க ஆளில்லாமல் அல்ல. அவன் குளியல் அறையிலிருந்து வெளியே வருவதற்கும் மணியடிப்பது நிற்பதற்கும் சரியாய் இருத்தது. இவ்வளவு சீக்கிரம் எழுந்து அவனுக்குப் பழக்கம் இல்லை. அம்மாவின் வற்புறுதலினால் எழுந்தாலும், இன்று திருமணம் என்பதால் உற்சாகமாகிவிட்டான். ஏழு மணிக்குத் திருமணம்.

அவன் கை கடிகார முள் 7।35 எனக் காட்டியது, நேற்று மாலை நிலவரப்படி. பத்து ஆண்டுகளிருக்கும், அவன் பொதுத் தேர்வு எழுத வெறும் கையுடன் செல்வதைக் கண்டு அந்த கடிகாரத்தை அவள் பரிசளித்து. ஆனால் சுவர் கடிகாரம் 4।55 எனக் காட்டியது.

திறந்த மேனியுடன், உடல் முழுக்க நீர் மொட்டுக்களுடன், இடுப்பில் கட்டிய துண்டுடன், தலையைக் கூட காயவிடாமல், சோபாவில் அமர்ந்தான்। இன்று திருமணம் என்றாலும் விழிகள் இரண்டும் அரை நித்திரையில் கரைந்தன.

சில ஞாபகங்கள், சில கொண்டாட்டங்கள், சில துயரங்கள், சில சாதனைகள், சில சோதனைகள், இவ்வாறு பற்சில கண் முன் வந்து சென்றன. கடந்த கால நாட்கள் மொத்தத்தில் இனிமையாகவே தெரிந்தன. குழந்தைப்பருவம், பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம், வாழ்க்கைப்பருவம் ஆகியன அனைத்தும் கடந்து வந்தது அவர்களது பந்தம்.

எதிரெதிர் வீட்டில் குடியிருந்த அவர்கள் இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள்। ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் அவனால் அவளுக்கு அளிக்க முடிந்தது நாளனா ஆரஞ்சு புளிப்பு மிட்டாய் மட்டுமே। இன்றும் கூட அதையே கடைபிடிக்கிறான்। அவனால் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கேக்கை காணமுடிந்தது…॥ ருசிக்கவும் தான்।.

அவர்கள் நெருங்கிப்பழக விதை விதைத்த நிகழ்ச்சி: ஒரே பள்ளியில் படித்த அவர்களுக்கு அன்று பொதுத்தேர்வு। பள்ளிக்கு அவளை விட்டுச்செல்ல வந்த தந்தை, “வாட்சுல மணி சரியா இருக்காமா? ” எனக் கேட்டபோது அவள் நினைவுக்கு வந்தது ‘திருச்செந்தூர் முருகன் கோவில்’ செந்நிற காப்புக்கயிறு மட்டும் கட்டியிருக்கும் அவன் கைகளே।உடனே தந்தையிடம் மன்றாடி, அவர் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை அவனுக்கு பரிசளித்தாள்।இருவரும் படிப்பில் கெட்டி என்றாலும், அவளுக்கு கோவையிலும் அவனுக்கு மதுரையிலும் பட்டம் பயிலும் வாய்ப்பு கிடைத்தது।.

இடவேற்றுமையால் பிரிந்திருந்தாலும் மனவொற்றுமையால் சேர்ந்திருந்தனர். அதற்கு மின்னஞ்சல், தொலைபேசி , செல்போன், கல்லூரிகளுக்கிடையே நடக்கும் போட்டிகள் ஆகியவை உதவின. வாழும் யுக்திகளை இருவரும் பரிமாறிப் பயின்றனர். கல்லூரி வாழ்வில் இருவரும் பண்பட்டனர்.கல்லூரி வளாக நேர்முகத் தேர்வில் இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒரே துறையில் பணியமர்த்தப்பட்டனர். இருவரின் எண்ண்ங்களும், திறமையும், வளர்ச்சியும் ஒன்று போல் இருந்தன……இவ்வாறு ஒவ்வொரு நிகழ்வும் அவன் கண் முன் வந்து சென்ற அந்த தருணத்தில்…. க்ரீங்,க்ரீங்…..க்ரீங்,க்ரீங்….. என திரும்பவும் தொலைபேசி மணி அடித்தது. அது வரை உறவாடிக்கொண்டிருந்த இமைகள் இரண்டும் பிரிக்கப்பட்டன.அவன் ரிசீவரை எடுத்தான்…. ஆம்! அவளே தான். .

"என்னடா… எழுந்துட்டியா?… ".

" ஆமா சத்யா, இப்பதான் குளிச்சேன், … குளிச்சிட்டு சோபால உக்காந்து லேசா கண்ணசந்தே…"

" கிறுக்கா! குளிச்சா தொவட்ட மாட்டியா…. கல்யாணத்துல மூக்கு ஒலுகிட்டு யே பக்கத்துல போஸ் குடுக்க போரடா!! ".

" சரி, இத சொல்ல தான் போன் பன்னியா? "

" இல்ல… நா எடுத்து குடுத்த ட்ரஸ் பிடிச்சிருக்கு தான? "

"அதுக்கு என்ன….. உனக்கு பிடிச்சிருந்தா, எனக்குந் தா!"

"அப்றம்ம்… அப்பா சொன்னாரு… அவரு உள்ள வர்றதுக்கு முன்னாடி தங்க செய்ன் போட்டு வரவேற்பாங்களா"

"பொண்ணோட பெறந்த அண்ணன், தம்பி தான் போடுவாங்க….. அதுக்கு நா முன்னாடி நின்னு செய்ன் போட்டு வரவேற்கனும்…. அவ்லொ தான!… "

" டேய்! மதன்னா, மதன் தான்!…… வெரி குட்.. ஓகே… பய் டா…. சீக்கிரம் ஆறு மணிக்கெள்ளா வந்துறு சரியா…. தோ அவர்ட்ட இருந்து கால் வருது….. பய், கால் யூ லேட்டர்…"

" பய்…. ஹெவ் அ குட் டே "

அவன் மதன் என்ற மதன்குமார். அவள் ஜோதி என்ற சத்யஜோதி. இன்றைய மகிழ்ச்சி எண்ணியைத் தொடக்கிவைத்து ரிசீவரை வைத்தான். மெத்தை மீது அவளுக்கு பிடித்த, அவனுக்கு பொருத்தமான மெரூன் நிற சர்ட்டும், சான்ட்ல் நிற பேண்டும் மஞ்சளிட காத்திருந்தன.

மதனும் ஜோதியும் நண்பர்கள். இதை மனதில் கொண்டு திரும்ப ஒருமுறை இக்கதையை வாசியுங்கள்... என்ன உலகமடா இது!!

சுப்ரமணியபுரம் - கண்கள் இரண்டால்

பல்லவி
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றிக்

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

சரணம் 1
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்

சரணம் 2
கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொல்லாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றிக்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்

சொல் புதிது பொருள் புதிது

ஒன்றாய் மனம் விடாமல் பேசியிருக்கிறோம்...
ஒன்றாய் வெவ்வேறு தட்டில் சாப்பிட்டுயிருகிறோம்...
கடற்கரையிலிருந்து வெகுதூரம் தள்ளி ஒன்றாய் நடந்திருக்கிறோம்...
இவ்வாறுதான் நானும் அவளும்...
ஆனாலும் அவள் இன்று கூறிய சொல் புதிது பொருள் புதிது,
"உன்னோட கொஞ்சம் தனியா பேசனும்"


பிகு:அன்பரே! 'பொருளை' நீங்களே நிரப்புங்கள்!!

அதைத்தவிர

முன்பெல்லாம்,
ஒரு ரூபாயாவது பிச்சை அளித்த மனம்,
இன்று மறுத்து ஏசுகிறது,
"அதைத்தவிர உன்னால்
வேறென்ன செய்யமுடிந்தது?" என்று.

முழுக்கு

காதலுக்கு வருகை அளித்து,
சாதிக்கு முழுக்கு அளிப்போம்,
சமூகம் எனும் வகுப்பறையிலே!

அழகி

வேற்று கிரகத்து பெண்டிரும் அழகாய் இருப்பாள்...
சேலையில்...

இரண்டாம் மணம்

தமிழ்,
தாயாய்,
சகோதரியாய்,
தோழியாய்,
காதலியாய் இருந்தாள்.
இப்போது மனைவியாய் இருக்கிறாள்;

விவாகரத்து தேவையில்லை
இரண்டாம் மணம் புரிய,
தமிழ் எனும்
முதல் மனைவியிடமிருந்து;

வாடிய மலர்

வாடி இருந்த மலரும் அழகாயிருந்தது,
அவள் சூடியமையால்.
அது அழகாய் இருந்தது அவளுக்கு பிடிக்கவில்லை போலும்,
ஏனோ அதை அவள் கலைந்து விட்டாள்

யாரந்த மலர்

நடுவினிலே மஞ்சளும், அதைச்சுற்றி வெண்மையும்
நிறைந்திருந்த அந்த மலரின்
பெயரை அறிய முடியவில்லை;
அதைச் சூடியிருந்த மலரின்
பெயரையும் தான்.

மூன்றாம் காதல்

அவளைப் பார்த்து இன்புற்று,
அவள் சிரிப்பை ரசித்து.
அவள் பேச்சில் மயங்க இருந்த வேளையில்,

"இதற்குப் பெயர் இனக்கவர்ச்சி", என்று
தலையில் குட்டு வைத்தது முதல் காதல்.

"இதற்குப் பெயர் சலனம்", என்று
கன்னத்தில் அறைந்தது இரண்டாம் காதல்.

என் இமைக்குள்

ஆண்கள், பெண்களை இமைகளுக்குள் வைத்துப்
பேணத் தவம் இருந்தாலும்,
அவர்கள், 'உன் கண்களுக்குள் இடம் வேண்டாம் எனக்கு',
எனச் சொல்லி, இரும்பு முலாம் பூசிய பொன்மலரின்
மொட்டுக்குள் இடம் தேடி அழைகின்றனர்.

அவள்

மையிட்ட கருவிழிகளுடன் அவள் அழகாய் சிரித்தாள்,
கண் சிமிட்டி என்னை ரசிக்க வைத்தாள்,
இனிக்க இனிக்க கொஞ்சிப் பேசினாள்,

பேருந்தில், தன் தாய் மடியில் மழலையாய் அவள்....

இரண்டு நிமிடக் காதல்

இரண்டொரு நிமிடத்தில் வரும் காதல்,
ஐந்து நிமிட இன்பத்தை எண்ணியே வருவது;
இரண்டொரு வருடம் நீடித்து காதல் ஆகும்
நட்பை விட அது கேவலமானது.

காதல்

விளக்க முடியாத சிலத் தலைப்புகளில் இதுவும் ஒன்று. எனவே முன்பின் தெரியாத ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்வோம். அது ஈர்ப்பு (attraction) தாம். அதற்கு மேல் வேறு ஏதுமில்லை. சுரப்பி(harmone) செய்யும் களங்கம் என ஒரு கவிஞன் சரியாய்ச் சொன்னான்.

“காதல் என்பது விக்கல், இருமல், கொட்டாவி, நல்லது, கேட்டது, பசி, பட்டினி, பதவி மாதிரி, எப்பவரும், எப்படிவரும் யாராலையும் சொல்லமுடியாது. வராதனாலும் ஏன்னு கேக்க முடியாது, வந்ததாலும் தடுக்க முடியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல சரியா வந்துரும் “, என்று தத்துவம் பேசுவாங்க பலர்.

கடவுள் படைத்த ஆதி மனிதன் ஒரு மலையின் சாரலில் வசித்தான். மழைக்கும், காற்றுக்கும் அவனுக்கு மலைக்குகை அடைக்கலம் தந்தது. வன விருட்சங்கள் அவனுக்குத் தேவையான கனி வர்க்கங்களை உணவாக அளித்தன. காட்டு மிருகங்கள் அவனைக் கண்டு நடுநடுங்கின. வானத்துப் பறவைகளைப் போல் அவன் சுயேச்சையாக ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்தான். ஆயினும் அவனுடைய உள்ளத்தின் உள்ளே ஏதோ ஒரு குறை, - இனந்தெரியாத ஒரு வகைத் தாபம், - இடைவிடாமல் குடிகொண்டிருந்தது. ஏதோ ஒரு காந்த சக்தி அவனைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஓர் அரிய பொருளை, - இது வரை பார்த்தும் அனுபவித்தும் அறியாத இன்பத்தை, - அவனுடைய இதயம் தேடிக் கொண்டிருந்தது. பகலில் அதைப் பற்றிக் கற்பனை செய்தான்; இரவில் அதைப் பற்றிக் கனவு கண்டான்.

“எனக்காகவே படைக்கப்பட்ட அந்த அற்புதப் பொருளை,- கற்பகக் கனியை, - என்னைக் கவர்ந்திழுக்கும் காந்தத்தை, எங்கே காண்பேன்? எப்போது காண்பேன்?” என்று அவன் இதயம் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது. ஆதி மனிதனைப் படைத்த அதே சமயத்தில் இறைவன் ஆதி ஸ்திரீயையும் படைத்தார். மலையின் மற்றொரு பக்கத்துச் சாரலில் அவள் வசித்து வந்தாள். பசிக்கு உணவும், தாகத்துக்குச் சுனை நீரும், தங்கியிருக்க மலைக்குகையும் அவளுக்கு இருந்தன. வெளிப்படையாகப் பார்த்தால் ஒரு குறையும் இல்லை. ஆனால் உள்ளத்தினுள்ளே ஒரு தீப்பிழம்பு ஜுவாலை விட்டு அவளை எரித்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு சக்தி அவளைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. அச்சக்தி எங்கிருந்து அவளை இழுக்கிறது, எந்தத் திசையை நோக்கி இழுக்கிறது என்பது ஒன்றும் தெரியவில்லை.

ஆதி மனிதனுக்கும் ஆதி ஸ்திரீக்கும் இடையில் ஒரு பெரிய மலை ஓங்கி நின்று ஒருவரையருவர் சந்திக்க முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

வெயிற் காலத்தில் ஒருநாள் இயற்கை நியதி காரணமாகக் காட்டில் தீ மூண்டு நாலாபுறமும் பரவத் தொடங்கியது. மலையைச் சுற்றி நெருப்பு அதிவேகமாகப் பரவி வந்தது. மனிதனும் ஸ்திரீயும் காட்டுக்குள் போனால் ஆபத்துக்குள்ளாவோம் என்று உணர்ந்து மலை மேல் ஏறினார்கள். மலையின் உச்சியில் அவர்கள் ஒருவரையருவர் பார்த்தார்கள். பார்த்த கண்கள் பார்த்தபடி கண் கொட்டாமல் நின்றார்கள். காட்டுத் தீயை மறந்தார்கள். எதற்காக மலை உச்சியில் ஏறினோம் என்பதையும் மறந்தார்கள். பசி தாகங்களை அடியோடு மறந்தார்கள். இத்தனை காலமும் தாங்கள் உயிர் வாழ்ந்ததெல்லாம் இந்த ஒரு சந்திப்புக்காகவே என்பதை உள்ளுணர்வினால் அறிந்தார்கள். தங்களைக் கவர்ந்திழுத்த இனந் தெரியாத சக்தி இதுதான் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். தங்களில் ஒருவரிடம் உள்ள குறையை இன்னொருவரால் இட்டு நிரப்பிப் பூர்த்தி செய்ய முடியும் என்பதை அறிந்தார்கள். இவ்விதம் ஒன்று சேர்ந்து விட்டவர்களை இனிப் பிரிக்கக் கூடிய சக்தி உலகில் வேறொன்றும் கிடையாது என்பதையும் உறுதியாக உணர்ந்தார்கள்.

இந்த அற்புதக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த படைப்புக் கடவுளான பிரம்மதேவர் தாம் ஆரம்பித்த வேலை நல்ல முறையில் தொடங்கி விட்டது என்பதை அறிந்து பரிபூரணத் திருப்தி அடைந்தார்!


(ஆதி : கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ )

இன்றையக் காதல் அகராதியின்படி, காதல் வருகிற அறிகுறியை ஒவ்வொரு இளைஞனும், இளைஞியும் இவ்வாறுதான் ஜீரணிக்கின்றனர்.

இதுத் தொடக்கம் மட்டும் தான். இது குறித்துப் பல கருத்துச் சிதறல்கள் வெளிப்படும். பார்த்தவுடன் காதல், நட்பிற்குப் பின் காதல், திருமணத்திற்குப் பின் காதல். இதில் எது சரியாக இருக்கும்.

முதல் வகையில், பலருக்கு குழப்பம். “அது எப்படிங்க பார்த்தவுடன் வரும்”. இவ்வாறு வரும் காதலை வெளிப்படுத்தும் இளைஞனுக்கு வசைமொழியே எதிரொலி, அவள் சிறந்த பெண்மகளாய் இருந்தால்.

நட்பிற்குப் பின் காதல்: “நா உன்ன பிரண்டா தா நெனச்சேன், என்ன உன் தங்கச்சிய நெனச்சுக்கோ”, இது தான் அநேகப் பெண்களின் பதில். மூன்றாவது ரகம் பற்றிப் பேசுவதற்கு இதுத் தகாத இடம்.

‘ஆணியே புடுங்கவேணாம்’, என்பது போல அல்லவா இருக்கிறது. வேறு எந்தப் பாணியில் தான் காதல் செய்வது. காதல், எவ்வாறு தொடங்கினால் இந்த கன்னியர் ஏற்றுக்கொள்வர்.

மேல் கூறிய வகைகள் போல, மேலும் சில வகைகளும் உண்டு. (எ.கா.) ‘பார்க்காமல் காதல்’. இதை எல்லாம் யார் தான் கண்டுபிடிபார்களோ?

இந்தக் காதலின் வெற்றி, படிப் படியாகவே செல்கிறது. ஒரு பால் , எதிர் பாலரிடம் மையல் கொள்ளுதல் முதற்படி, விண்ணபித்தல் இரண்டாம் படி, எதிர் பாலரிடமிருந்து பச்சைக் கொடி மூன்றாம் படி. சச்சரவு இன்றி திருமணம் வரை செல்லுதல் கடைசி.

எத்தகைய வகையில் காதல் செய்தாலும், இன்றைய இளைஞர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அறிவு, மனம் இதற்கு இடையே நடக்கும் போட்டியில் யார் வெல்கிறாரோ, அதைப் பொறுத்தே அவற்றை இயக்குபவரது வெற்றி, தோல்வி அமையும்.

அறிவு: பிறந்ததில் இருந்து நம்மைச் சுற்றி நடபனவற்றை சேமித்துவைக்கும் பெட்டகம்.

மனம்: அறிவை உபயோகித்து, தனக்கும் பிறருக்கும் தேவையானவற்றை பூர்த்தி செய்வது.

"அறிவிற்கு அதனையும் தெரியும், மனதிற்கு உன்னை மட்டும் தான் தெரியும், இக்கட்டான நேரத்தில் அறிவு சொல்வதை கேட்காதே, மனம் சொல்வதை மட்டும் கேள்" என்றார் விவேகனந்தர்.

அறிவு, பொது விதிகளை மதிப்பது, மனம் விதிகள் அற்றது. அறிவு, புலன்களை அடக்குவது; மனம், சலனப்படுவது; அறிவு, அளவுடையது. மனம், அளவுகள் கடந்தது.

‘சளி பிடித்திருக்கிறது’ என்று எச்சரிப்பது மனம். ‘ஐஸ்கிரீம்’ உண்ண வேண்டும் என்று ஆசைப்படுவது மனம். ஆசைபடுவதற்கு மட்டும் மனம் அல்ல.

புத்தர், "ஆசைகள் அற்ற இடத்தில் துன்பங்கள் அற்றுவிடும்" என்றார். அதே புத்தர், ‘ஆசைப்படாமல் இருபதற்கு ஆசைப்பட்டார்’. ஆசைப்படாமல் இருக்க முடியாது.

ஆசைபடு. சிலர் கூறுவதை போல ‘அத்தனைக்கும் ஆசைப்படு’. ஆசை நிறைவேறினால் மகிழுந்து கொள்.

அந்த மகிழ்ச்சியைத் தவிர வாழ்வில் வேறேன்ன வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆசைக்கு முற்ப்படு.
இப்போது காதலுக்கு வருவோம். முடியுமா? என எண்ணிப்பார். முடியும் என்றால் முற்ப்படு, இல்லாவிடில், அதே முயற்சியில் வாழ்க்கைப் பாதையில் சிலர் கல் போல உறைந்துக்கிடப்பர். உங்களுக்குத் தெரியுமா அவர்கள் நம் வழிகாட்டிகள்.

காதல்… கவர்ச்சி… ஈர்ப்பு… அறிவு… மனம்… ஆசை….. இந்தப் படைப்பின் முதல் வரியை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்

மகிழ்ச்சி(புன்னகை)

நீங்கள் கண் இமைக்கின்ற இந்தத் தருணத்தில் பிறக்கிற குழந்தை, இப்பூமியின் முதல் சுவாசத்தை அனுபவிக்கும் பொது புன்னகைக்கத் தொடங்குகின்றது. அத்தகையச் சிரிப்பை நம்மால் மறுமுறைக்க முடிவதில்லை. இதன் அவசியம் என்ன?

உள்ளம் கனிந்து சிரிக்கும் வேளையில் நாம் உயரப் பறப்பதுவென நினைக்கிறோம் அல்லவா? அவ்வேளையில் இதயத்தில் புதுக்குருதி பாய்கிறது. அமுதம் உண்ணக் கொடுத்தாலும் மனம் மறுக்கிற‌‌து. ஆனால், அது என்ன‌? உள்ள‌ம் க‌னிந்து சிரிப்ப‌து.

உதடுகள் விரிகிறது, முத்துப் பற்கள் தெரிகிறது, கண்ணங்கள் நெளிகிறது. இவை, நாம் இன்றைய தினங்களில் 'சிரிப்பது' என்பதன் செயலாக்கம். உள்ளம் கனிவது, இன்று நம்மில் சிலரில் வெகு சில வேளைகளில் மட்டுமே! நம்மைச் சுற்றி இருப்பவர்கள் சிரிப்பதற்காக, காரணம் கூட தெரியாமல் சிரிபோர் நம்மில் உள்ளர்.

'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்'. மனதால் சிரிக்க வேண்டாம். தோற்றத்தால் மட்டுமே சிரிப்பதனால் நோய் விட்டு போகுமாம். மனதால் சிரித்தால்? ஆனால் அது எப்படி... மனதால் சிரிப்பது?

பேருந்தில், சில்லறை கேட்கும் நடத்துனரிடம் கங்கண‌ம் கட்டுவதை விட, "ஐம்பது காசு இல்லையே ஐயா!" எனக் கூறி நீங்கள் கூறி அளிக்கும் சிறு புன்னகைக்கு மிகக் சரியான எதிரொலி கிடைக்கும். அப்போது அறியலாம் மனதால் மகிழ்வது என்னவென்று!

உணவகத்தில் தாம‌த‌த்திற்க்கு சேவ‌க‌னிட‌ம் கோபித்து என்ன‌ ப‌ய‌ன்? ஒரு 'spl தோசை ' சொல்லியிருந்தேனே என்ப‌தை புன்ன‌கைக் க‌ல‌வ‌யுட‌ன் த‌ரும் போது அவ‌ன் முக‌த்திலும் ஒரு பூரிப்பு. ஆங்கிலத்தில் ' Assertiveness ' என‌க் கூறப்ப‌டுவ‌து இதுவே."

தோசை வேண்டுமானால் தோசை கொணர‌ ஆவண செய்ய‌ வேண்டும். அந்த 'ஆவண‌' ம‌னித‌ர்க்கு ம‌னித‌ர் மாறுப‌டும். செய‌ல்க‌ள் செய்யப்ப‌ட‌ வேண்டுவன(things making things done). செயல்கள் செய்யப்பட்டதா என்பதை விட எங்ஙனம் செய்ய‌ப்ப‌ட்ட‌து என்ப‌தே முக்கிய‌ம்.

ஒரு புத்தகத்தில் படித்தது. அவரது தாயார் 'ICU ' ல். இரவு மணி இர‌ண்டு. செவிலிய‌ர் பதற்றத்துடன் த‌த்த‌ம் வேலைக‌ளை செய்துகொண்டிருந்த‌ன‌ர்.

ம‌ருத்துவ‌ம‌னை சிற்றுண்டிச் சாலையில் அவ‌ர், "ஒரு டீ கொடு பா!" என‌க் கூறி இருப‌து ரூபாய் நோட்டை நீட்டினார். க‌டைக்காரரோ மூன்று ரூபாய் சில்ல‌றையாக கொடுக்கும்ப‌டி கறாராக‌ பேசினார். ப‌ல‌ நேர‌ம் யோசித்தவ‌ர் 'ஆறு டீ கொடு' என்றார்.

க‌டைக்கார‌ரோ ஏழு டீ யாக‌ கொடுத்தார். ஒரு டீயை அருந்திவிட்டு மீத‌த்தை என்ன‌ செய்ய‌லாம் என யோசித்துக் கொண்டிருந்தார். முடிவில் செவிலிய‌ர்க்கு வ‌ழ‌ங்குமாறு முடிவெடுக்க‌ப்ப‌ட்ட‌து. அவ்வாறே வ‌ழங்கப்ப‌ட்ட‌து. அது நேர‌ம் வ‌ரை ம‌யான‌ அமைதி பூண்டிருந்த 'ICU ' அறை த‌ற்போது க‌ளை க‌ட்டியிருந்த‌து. செவிலிய‌ர் முக‌த்தில் புன்ன‌கைக்கான பாவ‌னை, ந‌ன்றி கூறும் தோரனை. எல்லாம் இருப‌து ரூபாய் செய்த மாய‌ம். அவர் தாயின் பார்வையிலும் ஒரு மகிழ்ச்சி தென்பட்டது. அதை க‌ண்ட‌ அவ‌ர் ம‌ன‌ம் நிச்ச‌ய‌ம் நிறைந்திருக்கும்.

எப்போதும், வெகு விலை கொடுத்துப் பெறப்படும் முக மகிழ்ச்சியை விட, விலையில்லாமல் பெற‌ப்படும் மகிழ்ச்சிக்கு மதிப்பு அதிகம். உள்ளம் கனிய மகிழ்ச்சியுருவதற்க்கு இதுவும் ஒரு வழி.

பேருந்தின் அருகில் உள்ளவர் காலினை 'ஷு' வால் நறுக்கென மிதித்து விட்டு ,(வேண்டுமென அல்ல) எதிர்ப்புறமாய் முகம் திருப்பிக்கொண்டீகளானால், மறுமுறை அவர் முகத்தைக் கண்டு மிரண்டுப் போவீர். அதுவே, தெரியாமல் மிதித்த பிறகு, "சாரி சார்" என புன்னகைத்து சொல்லும் பொது....... அடுத்த முறை சோதித்து பாருங்கள்.

சுருக்கமாகச் சொன்னால் மகிழ்வித்து மகிழ்ந்தால் உள்ளம் கனியும். மேலும் பற்பல தருணங்களில் உள்ளம் கனியலாம்.

ஒரு குழந்தை நாளைக்கு நானூறு முறை சிரிக்கிறது, ஆனால் திட மனிதன் 15 முறை தானாம்! என்ன கொடுமை சார்!!! இதற்காக 'லாஃபோதெரபி' என்ற பெயரில் காரணம் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தை இன்று காலை கூட கடற்கரை ஓரமாய் கண்டிருக்கலாம்.

#####

நான் மனதால் மகிழ்ச்சியுற்றதை அறிந்த சில வேளைகள்,

1. +2 கணிதத்தில் பள்ளி முதல் மதிப்பெண் வாங்கியதற்க்கு பதக்கம் வேளை, மேடையிலிருந்து இருக்கை வரை நான் பறந்து வந்ததாகவே தோன்றுகிற‌து .

2. என் தமக்கை திருமணத்திற்க்கு வங்கி கடன் வாங்கும் போது நான் பொறுப்பேற்று கையொப்பமிட்ட வேலை.

3. கல்லூரியில் பல முறை மேடையேறியிருந்தாலும் கல்லூரி முதல்வர் திரு.அபெய்குமாரிடம், அன்பளிப்பு பெற்ற போது.

4. ஆளுமை திறன் வளர்ச்சி வகுப்பில் கடந்த மூன்று நாட்கள்.

5. 'மனிதம்', அழகர் இராமானுஜம் அவர்களை சந்தித்து பேசும் வேளைகளில்.

6. இந்த மக்களிடம் மனித அபிமானம் இன்னும் உயிர்த்திருக்கிறது என்பதை அறியும் வேளைகளில்.

7. எப்போதும் கோபப்படுகிற நான் சில ஆண்டுகளாக பொறுமையை கடைபிடிக்கும் போது.

8. நானும் ஒரு எழுத்தாளன் என எண்ணிக் கொண்டு எழுதும் போது.

9. முதன் முறையாக ஒரு பெண்ணிடம் விண்ணப்பித்த வேளை.

விரதம் ஓய்வு

உண்டிபடியில் கால் எடுத்து வைத்தபோது தான் ஞாபகம் வந்தது, இன்று வெள்ளிகிழமை அல்லவா? அதனால் என்ன?.. ஆம், இன்று நான் உணவு எடுத்துக்கொள்ள மாட்டேன் அல்லவா? ஆனால் நான் ஆத்திகன் அல்லானே? பின் எதற்கு 'விரதம்'?

இது விரதம் அன்று, ஓய்வு!. வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் கடந்து, நான் வாய்வழியாக திணிக்கும் குப்பைகளை பதப்படுத்தி, அதிலிருந்து என் உடம்பிற்குத் தேவையான புரதம், வைட்டமின் முதலானவற்றை பிரித்து எடுத்து, 'நான்' என்ற இயந்திரம் இயங்க உதவுகிறது ஜீரண இயக்கம்.

இதற்கு ஓய்வு அழிக்க வேண்டாமா? சரிதான்! அப்படி என்றால் இன்று இந்த நாக்கின் பாடு திண்டாட்டம் தான். காலை அவசரத்தில் உண்ண மறந்துவிட்டதாக நாக்கிடம் கூறிவிடலாம்.

ஆனால், பத்தரை மணி வாக்கில் ரமேஷ் 'பேண்டரி' செல்ல அழைப்பனே? பின் ஒரு மணிக்கு மதிய உணவு. மூன்று மணி வாக்கில் 'ஜாவா க்ரீன்'. மாலையில், 'நெஸ்கபெ' என சுவையூக்கிகள் நீள்கின்றன. இன்றைய விரதம் கூடியதா எனக்கு ?!?!?


நீங்களாவது முயற்சித்துப் பாருங்கள். சனி, ஞாயிறுகளிலாவது!!