பழைய மாமல்லபுரம் சாலை

சிறிய முள் ஒன்பதில் இருந்து பத்தை அடையத் துடித்து கொண்டிருந்தது. பெரிய முள் மூன்றை வருடிக் கொண்டிருந்தது.

'சாய் பாபா மெஸ்' என ஆங்கிலத்தில் எழுதி இருப்பது மின் விளக்கு வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது. ரமேஷ் அன்று அதிகாலை தான் தன் இரண்டு வருட 'ஆன்சைட் பணிகளை முடித்து விட்டு தாயகம் திரும்பியிருந்தான். 'இயர் பீஸ்' காதிலும் நிறுவன அடையாள அட்டை பெல்டிலும் இருப்பது அவன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிவதை உறுதி செய்தது.

ரமேஷ் மெசிர்குள் நுழைந்ததும் அனைவரின் பார்வையும் அவன் பக்கம் திரும்பவில்லை . ஏனெனில் அங்கு குழுமிருந்தவர்கள் அநேகர் அவனது துறையினர் தாம். மெச்சில் கிடைக்கும் உணவுகள் 'ஹோம்லி புட்' ஆக இருக்கும். அதனாலே அந்தப் பகுதியில் 'சாய் பாபா மெஸ்' புகழ்.

தன் பையை இறக்கி வைத்து, கை கழுவி விட்டு இருக்கையில் அமர்ந்தான், ரமேஷ். அவன் அங்கு கண்டது. பெயர் அர்ச்சுன் , பத்து வயது குழந்தைத் தொழிலாளி. அனுபவம் இரண்டு மாதம்.

ரமேஷ் கண் முன்னால் மேஜை துடைக்கபட்டது. தோசை 'ஆர்டர்' செய்யப்பட்டது. அரை மனதுடன் அரை தோசையை உண்டு விட்டு கை கழுவினான். மெதுவாக அர்ச்சுனை நோட்டம் விட்டுகொண்டே மீண்டும் மேசைக்கு வந்து அமர்ந்தான். தன் பையில் இருந்து ஒரு கோப்பை(file) எடுத்தான்.

அதில் தன் 'ஆஃப்ஷோர்' அணியினருக்கு வழங்கியது போக சில 'பாரின் சாக்லேட்' இருந்தன. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகள் பணியாற்றியதற்கு 'போனஸ்' ஆக வாடிக்கையாளர்கள் வழங்கிய 10,000$ க்கான காசோலையும் இருந்தது.

சாக்லேட்'ஐ அர்ச்சுனுக்கு கொடுத்தான். அப்போது அர்ச்சுன் மெஸ் முதலாளியை ஓரக் கண்ணால் பார்த்து, அவர் சம்மதத்தை பெற்றுக் கொண்ட பிறகு சாக்லேட்'ஐ பெற்றான்.

அப்போது ரமேஷ் மகிழ்ந்தான், அர்ஜுனை மகிழ்வித்து. "இந்தக் கோப்பில் இருக்கும் சாக்லேட் மட்டுமல்ல உனக்கு" என்று தனக்குள் சொல்லிக் கொண்டு நடையை கட்டினான் ரமேஷ்.

No comments: