நியூயார்க் நகரம்

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

பேச்செல்லாம் தாலாட்டுப் போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காஃபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமை நிமிஷங்கள் வருஷமானதேனோ?
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ?

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.

நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க
பெயரும் ஆனதென்ன தேனா?
ஜில்லென்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர்காலம் கோடையானதேனோ?
வா அன்பே! நீயும் வந்தால்
செந்தணல் கூடப் பனிக்கட்டிப் போல மாறுமே!

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

1 comment:

Unknown said...

:-) nalla paadal..!!