நீங்கள் கண் இமைக்கின்ற இந்தத் தருணத்தில் பிறக்கிற குழந்தை, இப்பூமியின் முதல் சுவாசத்தை அனுபவிக்கும் பொது புன்னகைக்கத் தொடங்குகின்றது. அத்தகையச் சிரிப்பை நம்மால் மறுமுறைக்க முடிவதில்லை. இதன் அவசியம் என்ன?
உள்ளம் கனிந்து சிரிக்கும் வேளையில் நாம் உயரப் பறப்பதுவென நினைக்கிறோம் அல்லவா? அவ்வேளையில் இதயத்தில் புதுக்குருதி பாய்கிறது. அமுதம் உண்ணக் கொடுத்தாலும் மனம் மறுக்கிறது. ஆனால், அது என்ன? உள்ளம் கனிந்து சிரிப்பது.
உதடுகள் விரிகிறது, முத்துப் பற்கள் தெரிகிறது, கண்ணங்கள் நெளிகிறது. இவை, நாம் இன்றைய தினங்களில் 'சிரிப்பது' என்பதன் செயலாக்கம். உள்ளம் கனிவது, இன்று நம்மில் சிலரில் வெகு சில வேளைகளில் மட்டுமே! நம்மைச் சுற்றி இருப்பவர்கள் சிரிப்பதற்காக, காரணம் கூட தெரியாமல் சிரிபோர் நம்மில் உள்ளர்.
'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்'. மனதால் சிரிக்க வேண்டாம். தோற்றத்தால் மட்டுமே சிரிப்பதனால் நோய் விட்டு போகுமாம். மனதால் சிரித்தால்? ஆனால் அது எப்படி... மனதால் சிரிப்பது?
பேருந்தில், சில்லறை கேட்கும் நடத்துனரிடம் கங்கணம் கட்டுவதை விட, "ஐம்பது காசு இல்லையே ஐயா!" எனக் கூறி நீங்கள் கூறி அளிக்கும் சிறு புன்னகைக்கு மிகக் சரியான எதிரொலி கிடைக்கும். அப்போது அறியலாம் மனதால் மகிழ்வது என்னவென்று!
உணவகத்தில் தாமதத்திற்க்கு சேவகனிடம் கோபித்து என்ன பயன்? ஒரு 'spl தோசை ' சொல்லியிருந்தேனே என்பதை புன்னகைக் கலவயுடன் தரும் போது அவன் முகத்திலும் ஒரு பூரிப்பு. ஆங்கிலத்தில் ' Assertiveness ' எனக் கூறப்படுவது இதுவே."
தோசை வேண்டுமானால் தோசை கொணர ஆவண செய்ய வேண்டும். அந்த 'ஆவண' மனிதர்க்கு மனிதர் மாறுபடும். செயல்கள் செய்யப்பட வேண்டுவன(things making things done). செயல்கள் செய்யப்பட்டதா என்பதை விட எங்ஙனம் செய்யப்பட்டது என்பதே முக்கியம்.
ஒரு புத்தகத்தில் படித்தது. அவரது தாயார் 'ICU ' ல். இரவு மணி இரண்டு. செவிலியர் பதற்றத்துடன் தத்தம் வேலைகளை செய்துகொண்டிருந்தனர்.
மருத்துவமனை சிற்றுண்டிச் சாலையில் அவர், "ஒரு டீ கொடு பா!" எனக் கூறி இருபது ரூபாய் நோட்டை நீட்டினார். கடைக்காரரோ மூன்று ரூபாய் சில்லறையாக கொடுக்கும்படி கறாராக பேசினார். பல நேரம் யோசித்தவர் 'ஆறு டீ கொடு' என்றார்.
கடைக்காரரோ ஏழு டீ யாக கொடுத்தார். ஒரு டீயை அருந்திவிட்டு மீதத்தை என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தார். முடிவில் செவிலியர்க்கு வழங்குமாறு முடிவெடுக்கப்பட்டது. அவ்வாறே வழங்கப்பட்டது. அது நேரம் வரை மயான அமைதி பூண்டிருந்த 'ICU ' அறை தற்போது களை கட்டியிருந்தது. செவிலியர் முகத்தில் புன்னகைக்கான பாவனை, நன்றி கூறும் தோரனை. எல்லாம் இருபது ரூபாய் செய்த மாயம். அவர் தாயின் பார்வையிலும் ஒரு மகிழ்ச்சி தென்பட்டது. அதை கண்ட அவர் மனம் நிச்சயம் நிறைந்திருக்கும்.
எப்போதும், வெகு விலை கொடுத்துப் பெறப்படும் முக மகிழ்ச்சியை விட, விலையில்லாமல் பெறப்படும் மகிழ்ச்சிக்கு மதிப்பு அதிகம். உள்ளம் கனிய மகிழ்ச்சியுருவதற்க்கு இதுவும் ஒரு வழி.
பேருந்தின் அருகில் உள்ளவர் காலினை 'ஷு' வால் நறுக்கென மிதித்து விட்டு ,(வேண்டுமென அல்ல) எதிர்ப்புறமாய் முகம் திருப்பிக்கொண்டீகளானால், மறுமுறை அவர் முகத்தைக் கண்டு மிரண்டுப் போவீர். அதுவே, தெரியாமல் மிதித்த பிறகு, "சாரி சார்" என புன்னகைத்து சொல்லும் பொது....... அடுத்த முறை சோதித்து பாருங்கள்.
சுருக்கமாகச் சொன்னால் மகிழ்வித்து மகிழ்ந்தால் உள்ளம் கனியும். மேலும் பற்பல தருணங்களில் உள்ளம் கனியலாம்.
ஒரு குழந்தை நாளைக்கு நானூறு முறை சிரிக்கிறது, ஆனால் திட மனிதன் 15 முறை தானாம்! என்ன கொடுமை சார்!!! இதற்காக 'லாஃபோதெரபி' என்ற பெயரில் காரணம் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தை இன்று காலை கூட கடற்கரை ஓரமாய் கண்டிருக்கலாம்.
#####
நான் மனதால் மகிழ்ச்சியுற்றதை அறிந்த சில வேளைகள்,
1. +2 கணிதத்தில் பள்ளி முதல் மதிப்பெண் வாங்கியதற்க்கு பதக்கம் வேளை, மேடையிலிருந்து இருக்கை வரை நான் பறந்து வந்ததாகவே தோன்றுகிறது .
2. என் தமக்கை திருமணத்திற்க்கு வங்கி கடன் வாங்கும் போது நான் பொறுப்பேற்று கையொப்பமிட்ட வேலை.
3. கல்லூரியில் பல முறை மேடையேறியிருந்தாலும் கல்லூரி முதல்வர் திரு.அபெய்குமாரிடம், அன்பளிப்பு பெற்ற போது.
4. ஆளுமை திறன் வளர்ச்சி வகுப்பில் கடந்த மூன்று நாட்கள்.
5. 'மனிதம்', அழகர் இராமானுஜம் அவர்களை சந்தித்து பேசும் வேளைகளில்.
6. இந்த மக்களிடம் மனித அபிமானம் இன்னும் உயிர்த்திருக்கிறது என்பதை அறியும் வேளைகளில்.
7. எப்போதும் கோபப்படுகிற நான் சில ஆண்டுகளாக பொறுமையை கடைபிடிக்கும் போது.
8. நானும் ஒரு எழுத்தாளன் என எண்ணிக் கொண்டு எழுதும் போது.
9. முதன் முறையாக ஒரு பெண்ணிடம் விண்ணப்பித்த வேளை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment