கனவும் அவளும் (பாகம் - அ)
மழையானாலும் பரவாயில்லை என மழை-கவசத்தை அணிந்து கொண்டு விரைவாக தான் நண்பர்களுடன் தங்கியிருக்கும் வீடு நோக்கி வண்டியை விட்டான் ரவி.
பிறகு தன் நண்பர்களோடு சேர்ந்து, கடந்த ஆறு மாதங்களாக ஒரு புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்க செய்துவரும் ஆயத்தப் பணிகளை அரைமனதுடன் தொடர்ந்தான்.
இவையெல்லாம் காயத்ரிக்கு தெரியாது. அவளிடம் காயத்ரி சொல்ல நினைத்ததும் இதுவே.
சிறிது நேரத்திற்கெல்லாம் காயத்ரியிடமிருந்து அழைப்பு வந்தது. சற்று நிதானித்தே அழைப்பை ஏற்றான்.
"என்ன ரவி தூங்கிட்டியா?"
"இல்லடா!"
"அட்டன் பண்றதுக்கு இவ்ளவு நேரமாச்சு?" என்று கோபித்துக்கொண்டாள் காயத்ரி.
பிறகு, "சரி!, இன்னிக்கு ஈவ்னிங் ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்னு சொன்னியே, இப்ப சொல்லு"
"அதுவா? அதுவந்து... ஒண்ணுமில்ல..." இவ்வாறு சமாளிக்க நினைத்துப் பிறகு ஒருவாறு ஆரம்பித்தான்.
"தேவி, எனக்கு நீ ரொம்ப பெரிய ஹெல்ப் பண்ணனும், பண்ணுவியா?"
"என்னடா... ? ஹெல்ப்னுலாம் கேக்குற புதுசா. எனிதிங் சீரியஸ்?"
"யா தேவி!"
"சரி சொல்லு..."
"அதாவது தேவி.... அடுத்த மாசத்துல இருந்து வேலைய விட்டுடலாம்னு இருக்கே"
"என்ன சொல்ற ரவி... ஆர் யு ஜோக்கிங். உனக்கு என்ன பைத்தியமா? லுசாபா நீனு?"
"ஆமா தேவி... நா முடிவெடுத்துட்டேன்.
"நானும், என்னோட காலேஜ் பிரான்சும் சேந்து சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கப் போறோம் ஆறு மாசமா ப்ரிபரேடரி வொர்க்ஸ் பண்ணிட்டு இருகோம். அடுத்து நாங்க போக போற பாத கொஞ்ச கஷ்டமானதா இருக்கும். ஆனா எங்களுக்கு முழு நம்பிக்க இருக்கு. நாங்க எல்லாருமே சொந்த கால்ல நிக்கணும்னு முடிவு பண்ணிடோம். இன்னும் ரெண்டு வருஷம் சமாளிச்சுடோம்னா அடுத்து கெடக்க போற பேர், புகழ், பணம் எல்லாமே நம்ம லைப மாத்திடும்..."
இவ்வாறு சொல்லிவிட்டு, பின்பு பின் வருமாறு தொடர்ந்தான் ரவி.
"இது எல்லாத்துக்கும் மேல எங்க அப்பாவோட ஆச.. எழ பிள்ளைங்க படிகிரதுகு ஒரு ஸ்கூல் ஆரம்பிக்றது நேரவேரிரும்....எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு தேவி... அப்ப என்னக்கு ஒரு பத்து வயசு இருக்கும். 'நா பெருசானது ஒரு கார் வாங்கி உங்களையு அம்மவயு கூட்டிட்டு போவே' அப்ப வெளையாட்டா அப்பா கிட்ட சொன்னது
அப்பாவுக்கும் வயச்சாயிடே போது.. நா சொன்னத செஞ்சு காட்ட வேண்டாமா?
என்ன சொல்ற தேவி...? "
இவ்வாறு சொல்லிமுடிக்கையிலே,
"கிங்.........கிங்...........கிங்..........", அழைப்பு துண்டிப்பானது.
கனவும் அவளும் (பாகம் - இ)
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமை;))
சில இடங்களில் எழுத்து பிழைகளை சரி செய்தால்.....இன்னும் ரொம்ப நல்லா இருக்கும்!
எனக்கும் எழுத்துப்பிழை வரும், சரி செய்து எழுத பழகிட்டு இருக்கிறேன்.
நீங்களும்....கொஞ்சம் முயற்சி பண்ணுங்க.
வாழ்த்துக்கள்!
வேணுமென்றே செய்தது தான்... பேச்சுத் தமிழில் பிழை இருக்கத் தானே செய்யும்.....
மெய்யாலுமே, என் தமிழில் எழுத்துப்பிழை அதிகம் தான்....
இலக்கியத்திலிருந்து வந்தது தான் இலக்கணம் என்ன சொல்லி பிழைத்துக்கொண்டாலும்.... பிழை, பிழை தானே!! :)
Post a Comment