என் காதல் கதை II - ரம்யா

519 டீலக்ஸ் பஸ்... நல்லா ஜம்முனு தான் இருக்கு! மெட்ராஸ் வந்ததுல இருந்து இனிக்கு தான் முதல முதல்ல படம் பாக்க வெளியே வர்றேன். ஈதோ மாயாஜாலாம். மல்டிப்லக்ஸ்னு சொன்னாங்க. எப்டி இருக்கும்னு கேட்டதுக்கு போய் பாருன்னு சொன்னாங்க.

ஸ்டாப் வந்திருச்சு... இறங்கி நடக்கனும் போலேயே!!.. சரி நடப்போம். அட.. நிறையா படத்துல பாத்திருக்கேன்!!..உன்னாலே... உன்னாலே... படத்துல வினய் இந்த தூணுக்குப் பின்னால ஒளிஞ்சு நின்னு தான சதாவோட போன் பேசிட்டு இருப்பான். இப்ப அந்த எடத்துல, கிரீன் சர்ட் போட்ட பையன் ஒருத்தன் நிக்கிறானே...சட்ட கலரப் பாரு.. ராமராஜன் மாதிரி! ரீமேக்க இருக்குமோ? கேட்டா பேசன்னு சொல்லுவானுங்க...போன் பேசிட்டு இருக்கானே!! அந்த பக்கம் அவனோட சதா இருப்பாளோ??

ச்ச நான் பாத்த பாத்துட்டான்! ஐய்யயோ இனிமே வச்ச கண்ணு வாங்காம என்னையே பாக்க போறான். அட ... என்ன பாத்தும் பாக்காதது போல இருக்கான்? நல்ல பையன் போல? இல்லாட்டி நாம அவ்வளோ அழகா இல்லியோ? இல்ல.. இல்ல.. அவன் அவனோட ஆளோட பேசிட்டு இருக்கான்...

ஹும். நாமளும் இப்படி எப்ப பேச போறோமோ? எங்க டா இருக்கே நீ?? எப்ப டா வருவே??

எனக்கும் காலம் வரும்.. டேய் கிரீன் சர்ட் அப்பா வச்சுக்குறேன் உன்ன.... இவன வச்சுக்கிட்டு நாம என்ன பண்ண போறோம்? இவன் தான அல்ரெடி என்கேஜ் ஆய்டான்ல!

ஓகே! மகா டிக்கெட் வாங்கிட்டு வந்துட்டா!! இங்க டிக்கெட் 120 ரூபாயாம்!! எம்மாடியோவ்! ... இதே எங்க ஊர்ல நாங்க மூணு பேர் படத்துக்கு போனா 120 வராது...சென்னை பயங்கர காஸ்ட்லியா தான் இருக்கு!! சரி... உள்ள போவோம்.... அட மெடல் டிடெக்டர்'லாம்? செக்குரிடியோ?

க்கும்... யாரது.. அந்த கிரீன் டி-சர்ட்... நாயே! நீ அக்கா தங்கச்சியோட பொறகால?... அவங்க பின்னால போய் இடிடா...

நான்: ஸ்டுபிட்!!
மகா: என்னடி ஆச்சு...??
நான் : ஒன்னும் இல்ல... வாடி ..

இதுக்குன்னே வரானுங்க... இவனுக்கு போய் சர்டிபிகேட் குடுத்தேனே....ச்ச மூட் அவுட் பண்ணிட்டான்.
.
.
.
.
.
.
[படம் முடிகிறது]
இப்பலாம் எந்த படத்துலயும் 'வணக்கம்' போட மாட்டாங்களா? சரி கெளம்புவோம்...

ச்ச.. படத்துக்கு வந்ததே வெஸ்ட் .. அந்த கிரீன் டி-சர்ட்.... இடிய ட்.. ச்சே...

மகா: என்னடி... படம் எப்டி...
நான் : வாய மூடிட்டு வாடி...

அம்மா! நல்லா தல வலிக்குது...

ம்ம்ச்... இப்ப எவன்........
டேய் நீயே தானாடா...

நான்: பொருக்கி நாயே! சோற தான திங்கிற...

[சட் என கன்னத்தில் ஒரு அரை விட்டதும், மழை காளான் போல சில சமூக சேவகர்கள் டோஸ் விட்டனர்]

நான்: என்னடா மொறக்கிற.. பண்றதையும் பண்ணிட்டு...

[அனைவரும் கலைந்தனர்]

மகா: ஏய்! என்னடி பண்ணிட்ட.. உன் இடுப்ப தொட்டது இவன் இல்லடி.. அதோ பின்னால திரும்பிடே நடக்குற மாதிரி ஓடுறான்ல.. அந்த தொப்பி போட்டவன் தான்...

நான் : அப்ப இவன் அவனோட பிரண்டா இருப்பன். ஒரு கேங்கா தான்'டி வரானுங்க...உள்ள வரும்போது இவன்.. வெளிய போகும் போது அவன்....

மகா : இல்லடி.. இருக்காது!! அங்க பாரு அவன் பேரன்ஸோட படம் பாக்க வந்திருக்கான். எவனா இருந்தாலும் பேரன்ஸோட இருக்கும் போது இப்டி நடந்துக்க மாட்டான். அவங்கள பாத்தா டீசன்ட் ஆனா பேமிலி மாதிரி இருக்கு...

நான் : அப்டியா சொல்ற? ஆமா.. இருக்கலாம்... ஆனா?

மகா: சரி ... சரி... அப்டியே வா. போய்டலாம்...

அட ஆமா!... சாரி கேக்கணுமா??.. நான் பண்ணினது தப்பு தான்... ஆனா சாரி கேட்டு எனக்கு பழக்கம் இல்லியே...

அடடா! அவங்கள கிராஸ் பண்ணிதான் போகனுமா?அங்க நின்னு எவங்க எல்லாரும் என்னையே பாக்றாங்க...

ஐய்யயோ... அந்த அம்மா யாரு... அந்தப் பையனோட அம்மாவ இருக்குமோ?
என்ன நோக்கி வராங்களே!

அம்மா: என்னம்மா?! என் பையன் என்ன தப்பு செஞ்சான். இவ்ளோ பேருக்கு முன்னால அரஞ்சுட்ட....

ஐய்யயோ... இப்டிலாம் எனக்கு நடந்ததே இல்லையே!!

நான்: ஐயோ! சாரிமா! உங்க பையனுக்கு பதிலா வேற ஒரு பையன்ன அடிச்சுட்டேன்.

அம்மா : ம்ம்ம்!! ??

நான் : சாரி! வேற ஒரு பையனுக்கு பதிலா உங்க பையன்ன அடிச்சுட்டேன்.

அம்மா: அடிக்கிறது தான் உன் வேலையா?? எதுக்காக அடிச்சேன்னு சொல்லு.. அதுவும் நாலு பேருக்கு முன்னால...

நான் : அம்மா! நான் உங்கள இதுக்கு முன்னால எங்கயோ பாத்திருக்கேனோ?

அம்மா: பேச்ச மாத்தாத!! சொல்லு என் அடிச்ச என் பையன?? அவன் உன் கையா பிடிச்சு இழுத்திருந்தாலும் நீ பொது எடத்துல வச்சு அவன அடிச்சது தப்பு தான்...

அடடா! அவன அடிச்சது தப்பே இல்ல!!

நான் : அம்மா நீங்க பாக்யலக்ஷ்மி அக்கா'வோட கசின் சிஸ்டர் தான.... என்ன ஞாபகம் இல்லியா?

அம்மா : பாக்யவ உனக்கு எப்டி தெரியும்??!!

[அப்புறம் பாக்ய அக்காவ எனக்கு எப்டி தெரியும்னு சொன்னேன்

இப்படித்தான் என் காதல் கதை ஆரம்பித்தது!!!]

இப்படிக்கு,
ரம்யா

(மீதி கதை வாசகர்கள் கற்பனைக்கு :)

No comments: