தில்லி நகரம் உறங்கும் போது... (பகுதி III )

என்னோட பேக்ல ஏர் இண்டியா  டேக பாத்த மார்ஷல் ஒருத்தர் என்னோட போர்டிங் பாஸ வாங்கி பாத்துட்டு, தற தறனு இழுத்துட்டு போயிட்டார் .உன்கிட்ட கடைசியா ஒரு வார்த்த கூட சொல்ல முடியல. அப்போ நீ கொஞ்சம் கொஞ்சமா சின்னதா தெரிஞ்ச என்னோட கண்ணுக்கு.... தமிழ் சினிமா படம் எபக்ட் போல இருந்தது. கண்ணுக்கு முன்னால ஏதோ கருப்பு புகை வந்து மறைக்கிற மாதிரி இருந்தது கொஞ்சம் கொஞ்சமா... அசையாம நின்ன. கை தூக்கி 'டாட்டா' சொல்ல கூட உனக்கு மனசு வரல.

நாம ரெண்டுபேரும் சேந்து உங்க அப்பவ திட்டினோம் மனசுக்குள்ள. போகப்போறேன். கடைசியா ஒரு போலிஸ்காரர் என்னோட பேக்ல இருக்கற டேகையும் கைல இருங்கற போர்டிங் பாசையும் செக் பண்ணினார். நா அவருக்கு சரியா கோ-ஆபரேட் பண்ணாம திரும்பி நீ இருந்த டைரக்சன பாத்தேன்.

எல்லா கம்யூட் வெஹுகிலும் போயாச்சு. நான் லேட்டா வந்ததால எனக்காக கடைசியா ஒரு ட்ரிப் அடிக்கபோறதா சொன்னான் என்ன இழுத்துட்டு வந்த மார்ஷல். கண்ணாடி வழியா தூரத்துல இருக்கற உன்னோட உருவம் மட்டும் தெரிஞ்சது. உன்னையே பாத்துட்டு இருந்தேன் இல்ல உன்னோட முகத்த மட்டும் பாத்துட்டு இருந்தேன் ... இல்ல .... உன்னோட கண்ண மட்டும் பாத்துட்டு இருந்தேன்... இல்ல ... உன் கண் எண்ட சொல்றத கேக்க ட்ரை பண்ணிட்டு இருந்தேன்.

அதுக்குள்ள, திரும்ப இந்த மார்சல் "சர்! வீ ஷால் மூவ் " அப்டின்னு சொன்னான். வாழ்க்கைல எவ்வளவு பேர மீட் பண்றோம், பலரை மறந்துடறோம்... சிலரை ஞாபகம் வச்சிருக்கோம். ஆனாலும் அவன மறக்க முடியாது என்னால... "ஐ ப்ரே பார் யுவர் சூனர் கம் பேக்" னு சொன்னான் அவன். "நீ வாழ்க"னு அவன பாத்து மனசுல சொல்லிடு வண்டில ஏறினேன்.

A27 aisle சீட். விண்டோ சீட் கிடைச்சிருந்தா நல்ல தான் இருந்திருக்கும். பக்கத்துல ஒரு வயசான தாத்தா. அவருக்கு பக்கத்துல மிடில் சீட்ல ஒரு யங் பாய். இருபது வயசு இருக்கும். காலேஜ் ஸ்டுடன்ட் போல.காதுல ஐபாட், கைல நான் கேள்விபடாத ஒரு இங்க்லீஷ் நாவல். 'தாடி வக்க மாட்டோங்க ஷேவும் பண்ண மாட்டோங்க அப்டின்னு பாடற தாடி. பிளைட் டேக் -ஆப் ஆகி 5 நிமிஷம் இருக்கும்.

இதோ இப்ப கண்ணா மூடறேன். இந்த உலகத்துல உன்னையும் என்னையும் தவிர வேற யாரும் இல்ல. மரம், செடி, கொடி, வானம் , மேகம் , சூரியன் , செல்போன், லேப்டாப்.... இதுங்க கூட எங்க போச்சுனு தெரியல. நீயும் நானும் மட்டும் தான்.

இதுபோல கண்ண மூடின என்ன வரும்.. ப்ளாஷ்பேக் தான் ...


நிஜமாவே நம்ப முடியல.. எனக்குன்னு ஒருத்தி இருக்கா.. எனக்காகன்னு...

நாம ஒரே காலேஜ்ல 4 வருஷம் படிச்சோம். அப்போலாம் வரல. ஒரே கம்பெனில ஒரு வருஷம் வொர்க் பண்ணினோம் அப்பவும் வரல.
காலேஜ்ல பல தடவ உன்ன பாத்திருக்கேன்; சில தடவ பேசிருக்கேன். உன்ன பத்தி உன்னோட பழகாமலே தெரிஞ்சிருக்கேன்.

எங்கேயோ படிச்சிருக்கேன். ஒரு வயசுல பசங்களுக்கு ஒரு விதமான எண்ணம் வரும். தினமும் பாக்குற பல பொண்ணுங்கள்ல சில பொண்ணுங்கள மட்டும் பக்கத்துல வச்சு நெனச்சு பாக்கறது. பொண்ணுங்களுக்கும் இது பொருந்துமாம். இந்த விளையாட்டுல நானும் விதி விலக்கு இல்ல. அது ஏனோ தெரியல உன்ன அப்டி ஒரு தடவ கூட நெனச்சது இல்ல. உன் மேல ஒரு மரியாத இருந்தது. அப்றம், அப்டியே காலேஜ் முடிஞ்சது. ஒரே கம்பெனில ஜாப் ஜாயின் பண்ணினோம்.

ஒரு வருஷம் ஓடிடுச்சு. உன்ன அப்ப அப்ப பாப்பேன். எப்பயாச்சும் பேசுவேன். எனக்கும் ஏதும் தோனியது இல்ல.திடீர்னு ஒரு நாள் கால்ல கட்டோட வந்த. நீ ஒரு மாசமா ஆபிஸ்க்கு வராதது கூட எனக்கு தெரியாது. நாம ரெண்டு பேரும் 'அவ்ளவு' க்ளோசா இருந்தோம். உன்ன அப்டி பாத்த போது ஒரு மாதிரி ஷாக் ஆயிட்டேன், உனக்கு போய் இப்டி ஆகணுமா அப்டின்னு. நாம ரொம்ப மரியாத வச்சிருக்கிறவங்களுக்கு  ஏதாச்சும் கெட்டது  நடந்தா வருத்தப்படுவோம்ல, அது போல இருந்தது.

அப்புறம் ரெண்டு மூணு தடவ உன்ன பாத்தேன். ஒரு தடவ கேபிடேரியால இருக்கும் போது, நீயா வந்து பேசின. "என்ன .. ஒரு சாக்குக்கு கூட என்ன ஆச்சுன்னு கேக்க மாட்டிங்களா?" அப்டின்னு. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. தர்ம சங்கடமா போச்சு. "அப்டி இல்ல, இதே கேள்விய பல பேர் உங்ககிட்ட கேட்டிருப்பாங்க , நீங்களும் பல தடவ கத சொல்லிருப்பிங்க, எதுக்கு அதையே கேக்கணும்னு தான்" அப்டின்னு பதில் சொன்னேன்.
"தேங்க்ஸ்" அப்டின்னு சொன்ன. எதுக்குன்னு கேட்டதுக்கு "பார் யுவர் தாட்ஸ்" அப்டின்னு சொன்ன.

இப்டி தான் பேச ஆரம்பிச்சோம். அதுக்கப்றம் மரியாத குறஞ்சதுனு சொல்ல முடியாது. முன்ன எல்லாம் உன்ன பக்கத்துல வச்சு பாக்க விடாத அந்த 'மரியாத', இப்போ கொஞ்சம் கொஞ்சமா அனுமதி குடுத்துச்சு. 'மரியாத' அனுமதி குடுத்தாலும் நான் அந்த எண்ணத்த  சில நொடிக்கு மேல நீடிக்க விடல.
"போடா.. நீ எங்க .. அவ எங்க ... " அப்டின்னு தான் நெனச்சேன்.

ஒரு நாள் கேபிடேரியா'ல, வழக்கம் போல ஏதேதோ பேசிட்டு இருந்தோம். திடீர்னு கொஞ்சம் சீரியஸ் ஆகி உன்கிட்ட பேச ஆரம்பிச்சேன்.
"ப்ரியா! உன்கிட்ட ஒரு முக்கியமான ஒன்னு பேசணும். ஜஸ்ட் வான்ட் டூ ஷேர் மை தாட். டெல் மீ ஒன் திங், வாட் இப் வி பிளான் டூ கெட் மாரிட்."

இப்டி கேட்டதுக்கு அப்புறம் ஆச்சர்யமா என்ன பாத்த. நான் மேல தொடர்ந்து பேசினேன்.

"எனி வே யுவர் பாரன்ஸ் வில் சர்ச் பார் ய கய். அது ஏன் நானா இருக்க கூடாது. நாம ரெண்டு பேரும்  ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சு இருக்கோம்.
இல்ல ப்ரியா, நான் இன்னும் உன்ன லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணல. அதுக்கு பெர்மிசன் கேக்கறேன். அவ்ளவு தான்.நேத்து நைட் தூங்க போறதுக்கு முன்னால இப்டி தோனுச்சு. அதான் உண்ட உடனே கேக்கறேன்.

ரொம்ப நாள் யோசிச்சு, எப்ப கேக்கலாம்னு நாள் குறிச்சு இத கேக்கல. அப்டி யோசிச்சு, உன்ன மனசுல நினச்சிருந்து, ஒரு வேள நீ வேணாம்னு சொன்னேனா, நாள பின்ன நாம எப்பயும் போல பேசிக்க முடியாது. அதான் உடனே கேட்டுட்டேன். இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவும் இல்ல... ஏன்னா என் மனசுல வேறெதுவும் இல்ல இதத்தவிர.

யோசிச்சு சொல்லு... பலவிசயங்கள் ஒத்துப்போகனும். உங்க வீட்ல என்ன சொல்வாங்க. நல்லா யோசி. இப்ப முடிவெடுத்துட்டு, ச்சே! இவன போய் கட்டிகிட்டோமேனு நீ ஒருதடவ நெனச்சாலும் நீ எடுக்க போற முடிவுக்கு அர்த்தமே இல்லாம போயிடும்."

இப்டி நான் கேட்டதுக்கு நீ சொன்ன பதில்.....

(பகுதி III முற்றும்.... தொடரும்...)

1 comment:

Prabu Raja said...

Story is moving good.
You are writing well man :-)