கனவும் அவளும் (பாகம் - அ)
கனவும் அவளும் (பாகம் - ஆ)
திரும்பவும் தேவிக்கு அழைப்பு விடுத்தான் ரவி. பெரிய மழை கொட்டியதால் அழைப்பு கிடைக்கவில்லை. தேவி என்ன நினைத்திருப்பாள் என அவளுடைய மனவோட்டத்தை அறிய ஆவலாய் இருந்தான் ரவி. இதுவே, காயத்ரி தன் முன் நின்று இதை எல்லாம் கேட்டிருந்தாள் என்றால் அவள் முக தோற்றத்திலேயே என்ன நினைத்திருப்பாள் என்பதை ரவி அறிந்திருப்பான். இடையே, ரவிக்கு தான் பேசியது முழுவதையும் அவள் கேட்டிருப்பாளா என்ற சந்தேகம் வந்தது. அத்துடன் துக்கமும் வந்தது.
மறுநாள் காலை விடிந்தது. காயத்ரியிடமிருந்து வந்த 12 தவறிய அழைப்புகளை கண்டு பதறியபடி அவளுக்கு அழைப்பு விடுத்தான் ரவி. சிறிது நேரத்திற்குப்பிறகே அழைப்பு ஏற்கப்பட்டது.
"தேவி...! "
"ரவி, நீ நேத்து சொன்னதெல்லாம் கேட்டேன்.
நைட் லாம் தூங்கவே முடியல...
யோசிச்சு பாத்ததுல,
பெட்டர் நாம ரெண்டு பிரிஞ்சுறது தான் ரெண்டு பேருக்கும் நல்லது...
ஐ'ம் நாட் தி ரைட் சாய்ஸ் பார் யூ"
"தேவி.. என்ன சொல்ற?!!"
"உங்களுக்கு இருக்குற ட்ரீம்ஸ் போல, எனக்கும் நிறைய ட்ரீம்ஸ் இருக்கு....
கை நெறைய சம்பளம் வர்ற மாதிரி செக்யூர்டா ஒரு வேல...
ஷாப்பிங் காம்ப்லக்ஸோட இருக்குற ஒரு அப்பார்ட்மண்ட்ல ஒரு வீடு...
ஜாலியான வீக் என்ட்ஸ்....
இந்த மாதிரி தான் என் லைப் போகணும்னு நான் நெனக்கிறேன்.
அதோட, உங்களோட என்னால சேந்து வாழ முடியும்ன்ற நம்பிக்க எனக்கு இல்ல.
ஆறு மாசமா இப்படி ஒரு வேலைய பண்றத என்கிட்டே இருந்து மறச்சுட்டிங்க .
என்கிட்டே ஒரு வார்த்த கூட கேக்காம
வேலைய விடறதா முடிவு எடுத்துட்டேன்னு சொல்றிங்க...
உங்களோட சேந்து கஷ்டப்பட எனக்கு விருப்பமில்ல...
சின்ன வயசுல நான்கூட தான் எங்க அம்மா கிட்ட ஏரோப்ளேன் ஓட்டப் போறேன்னு சொன்னேன்.
அதுக்காக நா வேலைய விட்டுட்டு ஏரோப்ளேன் ஓட்ட போக முடியுமா?"
இந்தப் பேச்சை எல்லாம் கேட்க கேட்க ரவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... உதடுகள் ஒட்டிக்கொள்ளாவிட்டாலும், வரண்டுவிட்டது. அவை ஒட்டிக்கொண்டதை போலவே தோன்றியது ரவிக்கு.
காயத்ரி மேலும் கூறினாள்.
"ரவி, நான் தான் உங்ககிட்ட முதல ப்ரொபோஸ் பண்ணினேன். வாழ்கைல முதல் தடவ ஐ ஹேவ் மேட் எ ராங் சாய்ஸ்...
சாரி ரவி..."
பிறகு காயத்ரி சற்று வித்யாசமாக பேசினாள்.
"நாம இன்னிக்கு எங்க போக போறோம் ரவி... நம்ம பிளான் என்னனு சீக்கிரம் சொல்லு.... எனி நியூ ப்ளேஸ்?"
ரவிக்கு ஒன்றுமே புரியாதனால் தன் இடது கையால் தலையை சொரிந்து கொண்டே காயத்ரி மேலும் என்ன சொல்கிறாள் என கேட்க கீழே இருந்த தன் வலது கையை எடுத்து காதினருகில் வைத்தப்பின்னும் ஏதும் கேட்காததால், டவர் இருக்கிறதா என பார்த்தான்....
கை ரேகை தான் தெரிந்தது....
இப்போது ரவிக்கு கூடத் தெரியாத ஒன்று நமக்குத் தெரிகிறது...இதுவரை நடந்தது எல்லாம் கனவு தான் எனக் கூட தெரியாமல் தலையணையருகில் இருந்த கைபேசியை எடுத்து காயத்ரியிடம் பேச முற்பட்டான்...
"தேவி... தேவி... "
சில நேரத்திற்குப் பின் தான் ரவி தெளிவுக்கு வந்தான். பின் அவளிடமிருந்து வந்த ஒரு குருஞ்சேதியை வாசித்தான்.
"தேர் வோன்ட் பி நேசசரிலி ஒன்லி ஒன் சுதா மூர்த்தி.. குட் மார்னிங்"
(thr wont b necesarily only 1 sudha murthi... gud morng)
உடனே அவளுக்கு அழைப்பு விடுத்தான் ரவி. காயத்ரி அழைப்பை ஏற்ற உடன்...
"ரொம்ப பெருமையா இருக்கு ரவி....
ரொம்ப பெருமையா இருக்கு.
எனக்கும் சில சமயம் தோணும்,
என்னடா வாழ்க்க இதுனு...
எல்லாரபோலயும் பிறந்தோம், படிச்சோம், வேல பாத்தோம்னு இருக்கோமே....
எதாச்சும் சாதிக்கணும்னு....
ஆனா உடனே அது எல்லாம் சாத்தியப்படாதுன்னு நினப்ப மாத்திக்குவேன்...
ஐ'ம் வெரி ப்ரவுட் டு பி வித் யூ"
ஆனாலும் எனக்கு நம்பிக்கை இல்லை.
ரவியின் கனவில்...
அவன் பகலில் காணும் கனவில் அல்ல...
அவன் இரவில் கண்ட கனவில்...
எது கனவில் நடந்தது ? எது நிஜத்தில் நடந்தது ? என்பதில்...
3 comments:
good flow...
அப்பாடா! நீங்களாவது படிச்சிங்களே :)
congrats sateesh bro ! Itz nice..
Post a Comment