வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - -பாரதியார்

1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்; அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் வீடுவோம்;பள்ளித்
தலமனைத்தும் கோயில்செய்குவோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். (பாரத)

2. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்;
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம். (பாரத)

3. வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)

4. முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினியே பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)

5. சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டி விளையாடி வருவோம் (பாரத)

6. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துங் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)

7. காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்குநல்லியற்
கன்னடத்துத் தங்கம் அளிப்போம் (பாரத)

8. பட்டினியில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)

9. ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்.
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம் (பாரத)

10. குடைகள்செய் வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

11. மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தில் கண்டுதெளிவோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் (பாரத)

12. காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்லருலை வளர்ப்போம்;
ஒவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய்வோம்;
உலகத் தொழிலனைத்து மூவந்து செய்வோம் (பாரத)

13. சாதி இரண்டொழிய வேறில்லை யென்றேத
மிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர். (பாரத)

3 comments:

Padmini Priya Subramanian said...

Beautiful lines!

Sateesh said...

ya worthy lines to be remembered during the status of nation in dis-unity.

குழலோன் said...

'பள்ளித் தலமனைத்துங் கோயில்செய்கு வோம்' என்று பாரதி எந்தப் பொருளில் சொல்கிறார்? விடை தெரிந்தவர் பகிர்ந்துகொள்ளவும். இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பினால் நன்று. kulaloan@gmail.com