விளக்க முடியாத சிலத் தலைப்புகளில் இதுவும் ஒன்று. எனவே முன்பின் தெரியாத ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்வோம். அது ஈர்ப்பு (attraction) தாம். அதற்கு மேல் வேறு ஏதுமில்லை. சுரப்பி(harmone) செய்யும் களங்கம் என ஒரு கவிஞன் சரியாய்ச் சொன்னான்.
“காதல் என்பது விக்கல், இருமல், கொட்டாவி, நல்லது, கேட்டது, பசி, பட்டினி, பதவி மாதிரி, எப்பவரும், எப்படிவரும் யாராலையும் சொல்லமுடியாது. வராதனாலும் ஏன்னு கேக்க முடியாது, வந்ததாலும் தடுக்க முடியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல சரியா வந்துரும் “, என்று தத்துவம் பேசுவாங்க பலர்.
கடவுள் படைத்த ஆதி மனிதன் ஒரு மலையின் சாரலில் வசித்தான். மழைக்கும், காற்றுக்கும் அவனுக்கு மலைக்குகை அடைக்கலம் தந்தது. வன விருட்சங்கள் அவனுக்குத் தேவையான கனி வர்க்கங்களை உணவாக அளித்தன. காட்டு மிருகங்கள் அவனைக் கண்டு நடுநடுங்கின. வானத்துப் பறவைகளைப் போல் அவன் சுயேச்சையாக ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்தான். ஆயினும் அவனுடைய உள்ளத்தின் உள்ளே ஏதோ ஒரு குறை, - இனந்தெரியாத ஒரு வகைத் தாபம், - இடைவிடாமல் குடிகொண்டிருந்தது. ஏதோ ஒரு காந்த சக்தி அவனைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஓர் அரிய பொருளை, - இது வரை பார்த்தும் அனுபவித்தும் அறியாத இன்பத்தை, - அவனுடைய இதயம் தேடிக் கொண்டிருந்தது. பகலில் அதைப் பற்றிக் கற்பனை செய்தான்; இரவில் அதைப் பற்றிக் கனவு கண்டான்.
“எனக்காகவே படைக்கப்பட்ட அந்த அற்புதப் பொருளை,- கற்பகக் கனியை, - என்னைக் கவர்ந்திழுக்கும் காந்தத்தை, எங்கே காண்பேன்? எப்போது காண்பேன்?” என்று அவன் இதயம் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது. ஆதி மனிதனைப் படைத்த அதே சமயத்தில் இறைவன் ஆதி ஸ்திரீயையும் படைத்தார். மலையின் மற்றொரு பக்கத்துச் சாரலில் அவள் வசித்து வந்தாள். பசிக்கு உணவும், தாகத்துக்குச் சுனை நீரும், தங்கியிருக்க மலைக்குகையும் அவளுக்கு இருந்தன. வெளிப்படையாகப் பார்த்தால் ஒரு குறையும் இல்லை. ஆனால் உள்ளத்தினுள்ளே ஒரு தீப்பிழம்பு ஜுவாலை விட்டு அவளை எரித்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு சக்தி அவளைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. அச்சக்தி எங்கிருந்து அவளை இழுக்கிறது, எந்தத் திசையை நோக்கி இழுக்கிறது என்பது ஒன்றும் தெரியவில்லை.
ஆதி மனிதனுக்கும் ஆதி ஸ்திரீக்கும் இடையில் ஒரு பெரிய மலை ஓங்கி நின்று ஒருவரையருவர் சந்திக்க முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தது.
வெயிற் காலத்தில் ஒருநாள் இயற்கை நியதி காரணமாகக் காட்டில் தீ மூண்டு நாலாபுறமும் பரவத் தொடங்கியது. மலையைச் சுற்றி நெருப்பு அதிவேகமாகப் பரவி வந்தது. மனிதனும் ஸ்திரீயும் காட்டுக்குள் போனால் ஆபத்துக்குள்ளாவோம் என்று உணர்ந்து மலை மேல் ஏறினார்கள். மலையின் உச்சியில் அவர்கள் ஒருவரையருவர் பார்த்தார்கள். பார்த்த கண்கள் பார்த்தபடி கண் கொட்டாமல் நின்றார்கள். காட்டுத் தீயை மறந்தார்கள். எதற்காக மலை உச்சியில் ஏறினோம் என்பதையும் மறந்தார்கள். பசி தாகங்களை அடியோடு மறந்தார்கள். இத்தனை காலமும் தாங்கள் உயிர் வாழ்ந்ததெல்லாம் இந்த ஒரு சந்திப்புக்காகவே என்பதை உள்ளுணர்வினால் அறிந்தார்கள். தங்களைக் கவர்ந்திழுத்த இனந் தெரியாத சக்தி இதுதான் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். தங்களில் ஒருவரிடம் உள்ள குறையை இன்னொருவரால் இட்டு நிரப்பிப் பூர்த்தி செய்ய முடியும் என்பதை அறிந்தார்கள். இவ்விதம் ஒன்று சேர்ந்து விட்டவர்களை இனிப் பிரிக்கக் கூடிய சக்தி உலகில் வேறொன்றும் கிடையாது என்பதையும் உறுதியாக உணர்ந்தார்கள்.
இந்த அற்புதக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த படைப்புக் கடவுளான பிரம்மதேவர் தாம் ஆரம்பித்த வேலை நல்ல முறையில் தொடங்கி விட்டது என்பதை அறிந்து பரிபூரணத் திருப்தி அடைந்தார்!
(ஆதி : கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ )
இன்றையக் காதல் அகராதியின்படி, காதல் வருகிற அறிகுறியை ஒவ்வொரு இளைஞனும், இளைஞியும் இவ்வாறுதான் ஜீரணிக்கின்றனர்.
இதுத் தொடக்கம் மட்டும் தான். இது குறித்துப் பல கருத்துச் சிதறல்கள் வெளிப்படும். பார்த்தவுடன் காதல், நட்பிற்குப் பின் காதல், திருமணத்திற்குப் பின் காதல். இதில் எது சரியாக இருக்கும்.
முதல் வகையில், பலருக்கு குழப்பம். “அது எப்படிங்க பார்த்தவுடன் வரும்”. இவ்வாறு வரும் காதலை வெளிப்படுத்தும் இளைஞனுக்கு வசைமொழியே எதிரொலி, அவள் சிறந்த பெண்மகளாய் இருந்தால்.
நட்பிற்குப் பின் காதல்: “நா உன்ன பிரண்டா தா நெனச்சேன், என்ன உன் தங்கச்சிய நெனச்சுக்கோ”, இது தான் அநேகப் பெண்களின் பதில். மூன்றாவது ரகம் பற்றிப் பேசுவதற்கு இதுத் தகாத இடம்.
‘ஆணியே புடுங்கவேணாம்’, என்பது போல அல்லவா இருக்கிறது. வேறு எந்தப் பாணியில் தான் காதல் செய்வது. காதல், எவ்வாறு தொடங்கினால் இந்த கன்னியர் ஏற்றுக்கொள்வர்.
மேல் கூறிய வகைகள் போல, மேலும் சில வகைகளும் உண்டு. (எ.கா.) ‘பார்க்காமல் காதல்’. இதை எல்லாம் யார் தான் கண்டுபிடிபார்களோ?
இந்தக் காதலின் வெற்றி, படிப் படியாகவே செல்கிறது. ஒரு பால் , எதிர் பாலரிடம் மையல் கொள்ளுதல் முதற்படி, விண்ணபித்தல் இரண்டாம் படி, எதிர் பாலரிடமிருந்து பச்சைக் கொடி மூன்றாம் படி. சச்சரவு இன்றி திருமணம் வரை செல்லுதல் கடைசி.
எத்தகைய வகையில் காதல் செய்தாலும், இன்றைய இளைஞர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அறிவு, மனம் இதற்கு இடையே நடக்கும் போட்டியில் யார் வெல்கிறாரோ, அதைப் பொறுத்தே அவற்றை இயக்குபவரது வெற்றி, தோல்வி அமையும்.
அறிவு: பிறந்ததில் இருந்து நம்மைச் சுற்றி நடபனவற்றை சேமித்துவைக்கும் பெட்டகம்.
மனம்: அறிவை உபயோகித்து, தனக்கும் பிறருக்கும் தேவையானவற்றை பூர்த்தி செய்வது.
"அறிவிற்கு அதனையும் தெரியும், மனதிற்கு உன்னை மட்டும் தான் தெரியும், இக்கட்டான நேரத்தில் அறிவு சொல்வதை கேட்காதே, மனம் சொல்வதை மட்டும் கேள்" என்றார் விவேகனந்தர்.
அறிவு, பொது விதிகளை மதிப்பது, மனம் விதிகள் அற்றது. அறிவு, புலன்களை அடக்குவது; மனம், சலனப்படுவது; அறிவு, அளவுடையது. மனம், அளவுகள் கடந்தது.
‘சளி பிடித்திருக்கிறது’ என்று எச்சரிப்பது மனம். ‘ஐஸ்கிரீம்’ உண்ண வேண்டும் என்று ஆசைப்படுவது மனம். ஆசைபடுவதற்கு மட்டும் மனம் அல்ல.
புத்தர், "ஆசைகள் அற்ற இடத்தில் துன்பங்கள் அற்றுவிடும்" என்றார். அதே புத்தர், ‘ஆசைப்படாமல் இருபதற்கு ஆசைப்பட்டார்’. ஆசைப்படாமல் இருக்க முடியாது.
ஆசைபடு. சிலர் கூறுவதை போல ‘அத்தனைக்கும் ஆசைப்படு’. ஆசை நிறைவேறினால் மகிழுந்து கொள்.
அந்த மகிழ்ச்சியைத் தவிர வாழ்வில் வேறேன்ன வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆசைக்கு முற்ப்படு.
இப்போது காதலுக்கு வருவோம். முடியுமா? என எண்ணிப்பார். முடியும் என்றால் முற்ப்படு, இல்லாவிடில், அதே முயற்சியில் வாழ்க்கைப் பாதையில் சிலர் கல் போல உறைந்துக்கிடப்பர். உங்களுக்குத் தெரியுமா அவர்கள் நம் வழிகாட்டிகள்.
காதல்… கவர்ச்சி… ஈர்ப்பு… அறிவு… மனம்… ஆசை….. இந்தப் படைப்பின் முதல் வரியை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Very well written!!!
Thanks for your visit to my blog & passing on the link to your page.
Did read few of ur short stories......stunned by ur amazing flow of writing.
[will comment on ur stories later]
Keep up your great work!!
My heart filled wishes to you:))
வருகைக்கு நன்றி:)
/stunned by ur amazing flow of writing/
அப்டியா?!!
மெய்யாலுமேவா??!
நம்ப முடியல!!
:)
மிகைப்படுத்தி சொல்லாதிங்க!!!
வாழ்த்துக்கு நன்றி!!
Its really nice :)
Ur writing kept me engrossed.
gud job:)
Thanku Priya!
Post a Comment