தன் தங்கை பவானி காதல் வயப்பட இருக்கிறாள் என்பதை அறிந்த மனோதத்துவ நிபுணராக பயிற்சி எடுத்து வரும் மீனா, அவளுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இது.
.....
.....
.....
உன் வயசுல எதுவுமே தப்பா தெரியாது. அதே சமயம் எது சரின்னும் தெரியாது. எல்லாம் சரி மாதிரி தான் தெரியும். ஒரு மாற்றம் நடக்கிற வயசு. ஒரு குழந்தை தாய் வயித்துல இருந்து வெளிய வர்ற மாதிரி.... பிரசவம் ஒரு க்ரிடிகளான விஷயம். நீயும் இந்த வயசுல அப்டிதான். குழந்தைக்கு பிறந்ததுல இருந்து தடுப்பு ஊசி போடுவாங்க. ஆனா நமக்கு இந்த வயசுல அப்டி ஏதும் இல்ல. நம்மோட கட்டுப்பாடும் பொறுமையும் தான் நமக்கு தடுப்பு வேலி. அதுக்காக பசங்க எல்லாத்தையும் தப்பானவங்கனு சொல்ல வரல. இப்ப நான் சொல்ல போறது பசங்களுக்கும் பொருந்தும்.
சைண்டிபிக்கா பாத்தோம்னா பிசியாலாஜிகால் சேஞ்சஸ் நடக்குற வயசு.இந்த வயசுல இப்டி தான் இருக்கும். ஸ்கூல் படிப்புக்கும் கல்யாணத்துக்கும் இடையில இருக்குற இந்த காலம் தான் நம்மோட எதிர்காலத்த மட்டும் இல்ல வரலாறையும் தீர்மானிக்குது.
இன்னிக்கு காதலிக்கிறவங்க எல்லார்ட்டயும் அவங்க மனசு கிட்டயே பதில் சொல்ல சொல்லி கேட்டுப்பாரு... எதனால லவ் பண்றிங்கனு? அநேக பேர் கிட்ட முதல்ல இது தான் சிக்கிச்சுனு பதில் வரும். காதலிக்க ஆரம்பிச்சதுக்கு முன்னால எத்தன 'மாசம்' ரெண்டுபேருக்கும் பழக்கம் இருக்கும்னு கேட்டுப்பாரு? 'நாள்' கணக்குல தான் பதில் வரும்....
எல்லாமே வேகமா நடந்துடுது. அப்படியே ரொம்ப நாள் பழக்கமா இருந்தாலும் ரெண்டு பேருக்கும் லவ் ப்றதுக்கு தகுதி இருக்கணும். நான் சொல்ற தகுதி காசு பணம் வச்சிருக்குற தகுதி இல்ல. அந்த தகுதி அவங்க வாழ்க்க நடத்துரதுக்கானத் தகுதி. அவங்க செஞ்ச சாதனைய வச்சு தான் அந்தத் தகுதி இருக்கு.
அந்த சாதன செயல் அளவுல இருக்கணும். அத செஞ்சுட்டு அப்பா அம்மாட்ட உரிமையோட கேளுங்க.... உங்களுக்கு முழு சுதந்திரம் குடுப்பாங்க. குடுத்து தான் ஆகணும்.
இனிக்கு லவ் ஒரு கெமிகல் ரியாக்சன் . அதுக்கு வினை-ஊக்கியா தான் இருக்கு இந்த டிவி, சினிமா, மீடியா இத்யாதி எல்லாம்.
கல்யாணத்துக்கு 21 வயசுன்னு சொல்ற மாதிரி, எந்த வயசு காதலுக்குனு சொல்ல முடியாது. இது உடம்பு சம்பந்தப்பட்டது இல்ல; மனசு சம்பந்தப்பட்டது. அந்தப்பக்குவம் வரும் காலம் ஒவ்வொருத்தருக்கும் வேறுபடும். சிலர் எப்பவுமே பக்குவப்படாமலே இருக்கலாம்.
இன்னிக்கு டைவர்ஸ் மட்டும் இல்ல, லவ் ப்றேக்கப்பும் அதிகமா இருக்கு. சிலர் கல்யாணத்துக்கு முன்னாடி, சிலர் கல்யாணத்துக்கு பின்னால. வாழ்க்கைல இறங்கும் போது தான் உண்மை புரிய வரும். ஒரு ஞான உதயம் பிறக்கும். இதுவரைக்கும் எடுத்த முக்கியமான முடிவுகள் எல்லாம் தப்போ'ன்னு ஒரு கேள்வி வரும்.
இன்னிக்கு லவ் பண்ண தயார் ஆறவங்க எத்தன பேர் வாழ தயார் ஆறாங்கனு தெரியல. எதோ பேசுறது... சின்ன வயசு ஞாபகங்கள ஷேர் பண்ணிக்கிறது இது மட்டும் தான் லவ்னு நினகிறாங்க. இது எல்லாம் ஒரு புது உறவோட தொடக்கம் மட்டும் தான். இத மட்டும் தான் உன் வயசுல இருக்குறவங்களுக்கு தெரிய வருது. டிவிலயும் சினிமாலயும் இத மட்டும் தான் காட்றாங்க. இதுக்கும் மேல என்னெனவோ இருக்கு.
இன்னிக்கு வாழ்க்க ஒரு அவசர கதில போய்ட்டு இருக்கு. உன் வயசுல இருகறவங்களும் ஒரு அவசர கதில வாழ்க்கையோட ரொம்பமுக்கியமான பெரிய முக்கியமான முடிவ இப்டிங்கறதுகுள்ள எடுத்திறிங்க. பொறுமை வேணும் .
பிராக்டிகலா ஒன்னு சொல்லட்டா? நீ படிக்கிற காலேஜ்ல நீ பழகற மாதிரி 5 பசங்க இருப்பாங்களா? நாளைக்கு வேலைக்குப் போனா ஒரு 5 பசங்க இருப்பாங்களா? கம்ப்யூடர் க்ளாஸ், பஸ் ஸ்டாப் இங்க எல்லாம் இன்னும் 5 பசங்க இருப்பாங்களா?
இன்னிக்கு லவ் பண்றவங்க ஒவ்வொருத்தரும் இந்த 20 பேர்ல ஒருத்தர தான் நிச்சயம் பண்ணிட்டு இருக்காங்கனு என்னால அடிச்சு சொல்ல முடியும். தாராளமா எல்லார்டையும் பழகு, பசங்கடையும் தான். எல்லாரும் எப்டின்னு புரிஞ்சுக்கோ. பக்குவப்பட்டுக்கோ. அப்பறம் உன்னைக்கான சரியான ஆள தெரிஞ்சுகுவ.
.....
.....
.....
3 comments:
ஜுலை 3 ஆவது வாரம் ஒளிபரப்பப்பட்ட நீயா? நானா? (காதலில் இருப்பவர்கள் vs காதலில் தோற்றவர்கள்) மற்றும் நாடோடிகள் திரைப்படம் என்னை வெகுவாக பாதித்தது. அதன் வெளிப்பாடு தான் இந்தப்பதிவு
காதல் குறித்த என்னுடைய மற்றொரு பதிவு :
http://ithyadhi.blogspot.com/2008/01/blog-post_7685.html
"இன்னிக்கு லவ் பண்ண தயார் ஆறவங்க எத்தன பேர் வாழ தயார் ஆறாங்கனு தெரியல."
"பக்குவம் வரும் காலம் ஒவ்வொருத்தருக்கும் வேறுபடும். சிலர் எப்பவுமே பக்குவப்படாமலே இருக்கலாம்."
"ஒரு அவசர கதில வாழ்க்கையோட ரொம்பமுக்கியமான பெரிய முடிவ இப்டிங்கறதுகுள்ள எடுத்திறிங்க. பொறுமை வேணும் ."
Very true lines.
Nijama vazhrathukana pakkuvam neraya peruku kadaisi varaikum varamale poiduthu.
Some just live together only because they are into commitment and not because of the bonding between hearts.
Its a decision for a lifetime and definitely cant be selected just like that from that 20 as u mentioned!
Gud one!
hmmm.. really nice.....
all should read tis.,,,
Post a Comment