இப்போது எல்லாம் காதல் என்னைக் காதலிக்கிறது !!
தன்னைப் பற்றி கவிதைகள் பல பாடச்சொல்கிறது.
அழகு நயம் பாராட்டச்சொல்கிறது.
ஒரே சீராக, நேரம் தெரியாமல் பேசச்சொல்கிறது.
கரம் பிடித்து ஊர் வலம் வரச் சொல்கிறது.
கனவில் நிதமும் அன்புத்தொல்லைகள் பல செய்கிறது.
'பொடா','லூசா நீனு', 'ஐயடா', 'புருசா' எனச் சொல்லி கொஞ்சுகிறது.
உள்ளங்கையில் மட்டும் ஒரு முத்தம் கேட்கிறது.
இதழ்களை எனதருகே கொணர்ந்து தன் மூச்சை சுவாசிக்கச் சொல்கிறது.
தன் விழி இரண்டையும் நொடி விடாமல் படிக்கச் சொல்கிறது.
'பொறுத்திருடா' எனச்சொல்லி கனவிலும் நினைவிலும்
வந்து வந்து செல்கிறது.
இப்போது எல்லாம் காதலை நான் காதலிக்கிறேன்!!
No comments:
Post a Comment