நீயும் நானும் - ஷாப்பிங் மால்

நம்மை கடந்துச் சென்ற அந்த அழகுச் சிலையைக் கண்ட பிறகு...

என்னையே நினைத்துக்கொண்டே துடித்துக்கொண்டிருக்கும்
உன் இதயம் அனுப்பிவைத்த செங்குருதித் துளிகள் ஊறும்
வீணையாகிய நரம்புகள் செல்லும் உன் கரத்தினை
ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அழுத்தி-விடுத்து
கரும் அருவியாகிய உன் கூந்தலிலிருந்து சிதறிச்சென்ற
சில மயிர்களை ஊதிகொதி விட்டு
செவி மடல்களை முத்தமிடும் பாணியில் கூறினேன்,
"இன்னிக்கு நீ கொஞ்சம் நிறையா ஹோம்வர்க் செய்யணும்"

1 comment:

Deena said...

Good one!