தொலைபேசி விடாமல் சிணுங்கியது…. எடுக்க ஆளில்லாமல் அல்ல. அவன் குளியல் அறையிலிருந்து வெளியே வருவதற்கும் மணியடிப்பது நிற்பதற்கும் சரியாய் இருத்தது. இவ்வளவு சீக்கிரம் எழுந்து அவனுக்குப் பழக்கம் இல்லை. அம்மாவின் வற்புறுதலினால் எழுந்தாலும், இன்று திருமணம் என்பதால் உற்சாகமாகிவிட்டான். ஏழு மணிக்குத் திருமணம்.
அவன் கை கடிகார முள் 7।35 எனக் காட்டியது, நேற்று மாலை நிலவரப்படி. பத்து ஆண்டுகளிருக்கும், அவன் பொதுத் தேர்வு எழுத வெறும் கையுடன் செல்வதைக் கண்டு அந்த கடிகாரத்தை அவள் பரிசளித்து. ஆனால் சுவர் கடிகாரம் 4।55 எனக் காட்டியது.
திறந்த மேனியுடன், உடல் முழுக்க நீர் மொட்டுக்களுடன், இடுப்பில் கட்டிய துண்டுடன், தலையைக் கூட காயவிடாமல், சோபாவில் அமர்ந்தான்। இன்று திருமணம் என்றாலும் விழிகள் இரண்டும் அரை நித்திரையில் கரைந்தன.
சில ஞாபகங்கள், சில கொண்டாட்டங்கள், சில துயரங்கள், சில சாதனைகள், சில சோதனைகள், இவ்வாறு பற்சில கண் முன் வந்து சென்றன. கடந்த கால நாட்கள் மொத்தத்தில் இனிமையாகவே தெரிந்தன. குழந்தைப்பருவம், பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம், வாழ்க்கைப்பருவம் ஆகியன அனைத்தும் கடந்து வந்தது அவர்களது பந்தம்.
எதிரெதிர் வீட்டில் குடியிருந்த அவர்கள் இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள்। ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் அவனால் அவளுக்கு அளிக்க முடிந்தது நாளனா ஆரஞ்சு புளிப்பு மிட்டாய் மட்டுமே। இன்றும் கூட அதையே கடைபிடிக்கிறான்। அவனால் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கேக்கை காணமுடிந்தது…॥ ருசிக்கவும் தான்।.
அவர்கள் நெருங்கிப்பழக விதை விதைத்த நிகழ்ச்சி: ஒரே பள்ளியில் படித்த அவர்களுக்கு அன்று பொதுத்தேர்வு। பள்ளிக்கு அவளை விட்டுச்செல்ல வந்த தந்தை, “வாட்சுல மணி சரியா இருக்காமா? ” எனக் கேட்டபோது அவள் நினைவுக்கு வந்தது ‘திருச்செந்தூர் முருகன் கோவில்’ செந்நிற காப்புக்கயிறு மட்டும் கட்டியிருக்கும் அவன் கைகளே।உடனே தந்தையிடம் மன்றாடி, அவர் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை அவனுக்கு பரிசளித்தாள்।இருவரும் படிப்பில் கெட்டி என்றாலும், அவளுக்கு கோவையிலும் அவனுக்கு மதுரையிலும் பட்டம் பயிலும் வாய்ப்பு கிடைத்தது।.
இடவேற்றுமையால் பிரிந்திருந்தாலும் மனவொற்றுமையால் சேர்ந்திருந்தனர். அதற்கு மின்னஞ்சல், தொலைபேசி , செல்போன், கல்லூரிகளுக்கிடையே நடக்கும் போட்டிகள் ஆகியவை உதவின. வாழும் யுக்திகளை இருவரும் பரிமாறிப் பயின்றனர். கல்லூரி வாழ்வில் இருவரும் பண்பட்டனர்.கல்லூரி வளாக நேர்முகத் தேர்வில் இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒரே துறையில் பணியமர்த்தப்பட்டனர். இருவரின் எண்ண்ங்களும், திறமையும், வளர்ச்சியும் ஒன்று போல் இருந்தன……இவ்வாறு ஒவ்வொரு நிகழ்வும் அவன் கண் முன் வந்து சென்ற அந்த தருணத்தில்…. க்ரீங்,க்ரீங்…..க்ரீங்,க்ரீங்….. என திரும்பவும் தொலைபேசி மணி அடித்தது. அது வரை உறவாடிக்கொண்டிருந்த இமைகள் இரண்டும் பிரிக்கப்பட்டன.அவன் ரிசீவரை எடுத்தான்…. ஆம்! அவளே தான். .
"என்னடா… எழுந்துட்டியா?… ".
" ஆமா சத்யா, இப்பதான் குளிச்சேன், … குளிச்சிட்டு சோபால உக்காந்து லேசா கண்ணசந்தே…"
" கிறுக்கா! குளிச்சா தொவட்ட மாட்டியா…. கல்யாணத்துல மூக்கு ஒலுகிட்டு யே பக்கத்துல போஸ் குடுக்க போரடா!! ".
" சரி, இத சொல்ல தான் போன் பன்னியா? "
" இல்ல… நா எடுத்து குடுத்த ட்ரஸ் பிடிச்சிருக்கு தான? "
"அதுக்கு என்ன….. உனக்கு பிடிச்சிருந்தா, எனக்குந் தா!"
"அப்றம்ம்… அப்பா சொன்னாரு… அவரு உள்ள வர்றதுக்கு முன்னாடி தங்க செய்ன் போட்டு வரவேற்பாங்களா"
"பொண்ணோட பெறந்த அண்ணன், தம்பி தான் போடுவாங்க….. அதுக்கு நா முன்னாடி நின்னு செய்ன் போட்டு வரவேற்கனும்…. அவ்லொ தான!… "
" டேய்! மதன்னா, மதன் தான்!…… வெரி குட்.. ஓகே… பய் டா…. சீக்கிரம் ஆறு மணிக்கெள்ளா வந்துறு சரியா…. தோ அவர்ட்ட இருந்து கால் வருது….. பய், கால் யூ லேட்டர்…"
" பய்…. ஹெவ் அ குட் டே "
அவன் மதன் என்ற மதன்குமார். அவள் ஜோதி என்ற சத்யஜோதி. இன்றைய மகிழ்ச்சி எண்ணியைத் தொடக்கிவைத்து ரிசீவரை வைத்தான். மெத்தை மீது அவளுக்கு பிடித்த, அவனுக்கு பொருத்தமான மெரூன் நிற சர்ட்டும், சான்ட்ல் நிற பேண்டும் மஞ்சளிட காத்திருந்தன.
மதனும் ஜோதியும் நண்பர்கள். இதை மனதில் கொண்டு திரும்ப ஒருமுறை இக்கதையை வாசியுங்கள்... என்ன உலகமடா இது!!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Appdi onnum suspenseaalaamilla. Mudhalla irundhe therinjadhu rendu perum friends dhaannu. nalla ulagam dhaan idhu.
ha ha.. I too agree "Kazhudhai's" comment. Even I had an idea frm first tat tehy were friends only... "Nalla Ulagam dhaan idhu."
Post a Comment