காதல்

விளக்க முடியாத சிலத் தலைப்புகளில் இதுவும் ஒன்று. எனவே முன்பின் தெரியாத ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்வோம். அது ஈர்ப்பு (attraction) தாம். அதற்கு மேல் வேறு ஏதுமில்லை. சுரப்பி(harmone) செய்யும் களங்கம் என ஒரு கவிஞன் சரியாய்ச் சொன்னான்.

“காதல் என்பது விக்கல், இருமல், கொட்டாவி, நல்லது, கேட்டது, பசி, பட்டினி, பதவி மாதிரி, எப்பவரும், எப்படிவரும் யாராலையும் சொல்லமுடியாது. வராதனாலும் ஏன்னு கேக்க முடியாது, வந்ததாலும் தடுக்க முடியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல சரியா வந்துரும் “, என்று தத்துவம் பேசுவாங்க பலர்.

கடவுள் படைத்த ஆதி மனிதன் ஒரு மலையின் சாரலில் வசித்தான். மழைக்கும், காற்றுக்கும் அவனுக்கு மலைக்குகை அடைக்கலம் தந்தது. வன விருட்சங்கள் அவனுக்குத் தேவையான கனி வர்க்கங்களை உணவாக அளித்தன. காட்டு மிருகங்கள் அவனைக் கண்டு நடுநடுங்கின. வானத்துப் பறவைகளைப் போல் அவன் சுயேச்சையாக ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்தான். ஆயினும் அவனுடைய உள்ளத்தின் உள்ளே ஏதோ ஒரு குறை, - இனந்தெரியாத ஒரு வகைத் தாபம், - இடைவிடாமல் குடிகொண்டிருந்தது. ஏதோ ஒரு காந்த சக்தி அவனைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஓர் அரிய பொருளை, - இது வரை பார்த்தும் அனுபவித்தும் அறியாத இன்பத்தை, - அவனுடைய இதயம் தேடிக் கொண்டிருந்தது. பகலில் அதைப் பற்றிக் கற்பனை செய்தான்; இரவில் அதைப் பற்றிக் கனவு கண்டான்.

“எனக்காகவே படைக்கப்பட்ட அந்த அற்புதப் பொருளை,- கற்பகக் கனியை, - என்னைக் கவர்ந்திழுக்கும் காந்தத்தை, எங்கே காண்பேன்? எப்போது காண்பேன்?” என்று அவன் இதயம் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது. ஆதி மனிதனைப் படைத்த அதே சமயத்தில் இறைவன் ஆதி ஸ்திரீயையும் படைத்தார். மலையின் மற்றொரு பக்கத்துச் சாரலில் அவள் வசித்து வந்தாள். பசிக்கு உணவும், தாகத்துக்குச் சுனை நீரும், தங்கியிருக்க மலைக்குகையும் அவளுக்கு இருந்தன. வெளிப்படையாகப் பார்த்தால் ஒரு குறையும் இல்லை. ஆனால் உள்ளத்தினுள்ளே ஒரு தீப்பிழம்பு ஜுவாலை விட்டு அவளை எரித்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு சக்தி அவளைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. அச்சக்தி எங்கிருந்து அவளை இழுக்கிறது, எந்தத் திசையை நோக்கி இழுக்கிறது என்பது ஒன்றும் தெரியவில்லை.

ஆதி மனிதனுக்கும் ஆதி ஸ்திரீக்கும் இடையில் ஒரு பெரிய மலை ஓங்கி நின்று ஒருவரையருவர் சந்திக்க முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

வெயிற் காலத்தில் ஒருநாள் இயற்கை நியதி காரணமாகக் காட்டில் தீ மூண்டு நாலாபுறமும் பரவத் தொடங்கியது. மலையைச் சுற்றி நெருப்பு அதிவேகமாகப் பரவி வந்தது. மனிதனும் ஸ்திரீயும் காட்டுக்குள் போனால் ஆபத்துக்குள்ளாவோம் என்று உணர்ந்து மலை மேல் ஏறினார்கள். மலையின் உச்சியில் அவர்கள் ஒருவரையருவர் பார்த்தார்கள். பார்த்த கண்கள் பார்த்தபடி கண் கொட்டாமல் நின்றார்கள். காட்டுத் தீயை மறந்தார்கள். எதற்காக மலை உச்சியில் ஏறினோம் என்பதையும் மறந்தார்கள். பசி தாகங்களை அடியோடு மறந்தார்கள். இத்தனை காலமும் தாங்கள் உயிர் வாழ்ந்ததெல்லாம் இந்த ஒரு சந்திப்புக்காகவே என்பதை உள்ளுணர்வினால் அறிந்தார்கள். தங்களைக் கவர்ந்திழுத்த இனந் தெரியாத சக்தி இதுதான் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். தங்களில் ஒருவரிடம் உள்ள குறையை இன்னொருவரால் இட்டு நிரப்பிப் பூர்த்தி செய்ய முடியும் என்பதை அறிந்தார்கள். இவ்விதம் ஒன்று சேர்ந்து விட்டவர்களை இனிப் பிரிக்கக் கூடிய சக்தி உலகில் வேறொன்றும் கிடையாது என்பதையும் உறுதியாக உணர்ந்தார்கள்.

இந்த அற்புதக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த படைப்புக் கடவுளான பிரம்மதேவர் தாம் ஆரம்பித்த வேலை நல்ல முறையில் தொடங்கி விட்டது என்பதை அறிந்து பரிபூரணத் திருப்தி அடைந்தார்!


(ஆதி : கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ )

இன்றையக் காதல் அகராதியின்படி, காதல் வருகிற அறிகுறியை ஒவ்வொரு இளைஞனும், இளைஞியும் இவ்வாறுதான் ஜீரணிக்கின்றனர்.

இதுத் தொடக்கம் மட்டும் தான். இது குறித்துப் பல கருத்துச் சிதறல்கள் வெளிப்படும். பார்த்தவுடன் காதல், நட்பிற்குப் பின் காதல், திருமணத்திற்குப் பின் காதல். இதில் எது சரியாக இருக்கும்.

முதல் வகையில், பலருக்கு குழப்பம். “அது எப்படிங்க பார்த்தவுடன் வரும்”. இவ்வாறு வரும் காதலை வெளிப்படுத்தும் இளைஞனுக்கு வசைமொழியே எதிரொலி, அவள் சிறந்த பெண்மகளாய் இருந்தால்.

நட்பிற்குப் பின் காதல்: “நா உன்ன பிரண்டா தா நெனச்சேன், என்ன உன் தங்கச்சிய நெனச்சுக்கோ”, இது தான் அநேகப் பெண்களின் பதில். மூன்றாவது ரகம் பற்றிப் பேசுவதற்கு இதுத் தகாத இடம்.

‘ஆணியே புடுங்கவேணாம்’, என்பது போல அல்லவா இருக்கிறது. வேறு எந்தப் பாணியில் தான் காதல் செய்வது. காதல், எவ்வாறு தொடங்கினால் இந்த கன்னியர் ஏற்றுக்கொள்வர்.

மேல் கூறிய வகைகள் போல, மேலும் சில வகைகளும் உண்டு. (எ.கா.) ‘பார்க்காமல் காதல்’. இதை எல்லாம் யார் தான் கண்டுபிடிபார்களோ?

இந்தக் காதலின் வெற்றி, படிப் படியாகவே செல்கிறது. ஒரு பால் , எதிர் பாலரிடம் மையல் கொள்ளுதல் முதற்படி, விண்ணபித்தல் இரண்டாம் படி, எதிர் பாலரிடமிருந்து பச்சைக் கொடி மூன்றாம் படி. சச்சரவு இன்றி திருமணம் வரை செல்லுதல் கடைசி.

எத்தகைய வகையில் காதல் செய்தாலும், இன்றைய இளைஞர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அறிவு, மனம் இதற்கு இடையே நடக்கும் போட்டியில் யார் வெல்கிறாரோ, அதைப் பொறுத்தே அவற்றை இயக்குபவரது வெற்றி, தோல்வி அமையும்.

அறிவு: பிறந்ததில் இருந்து நம்மைச் சுற்றி நடபனவற்றை சேமித்துவைக்கும் பெட்டகம்.

மனம்: அறிவை உபயோகித்து, தனக்கும் பிறருக்கும் தேவையானவற்றை பூர்த்தி செய்வது.

"அறிவிற்கு அதனையும் தெரியும், மனதிற்கு உன்னை மட்டும் தான் தெரியும், இக்கட்டான நேரத்தில் அறிவு சொல்வதை கேட்காதே, மனம் சொல்வதை மட்டும் கேள்" என்றார் விவேகனந்தர்.

அறிவு, பொது விதிகளை மதிப்பது, மனம் விதிகள் அற்றது. அறிவு, புலன்களை அடக்குவது; மனம், சலனப்படுவது; அறிவு, அளவுடையது. மனம், அளவுகள் கடந்தது.

‘சளி பிடித்திருக்கிறது’ என்று எச்சரிப்பது மனம். ‘ஐஸ்கிரீம்’ உண்ண வேண்டும் என்று ஆசைப்படுவது மனம். ஆசைபடுவதற்கு மட்டும் மனம் அல்ல.

புத்தர், "ஆசைகள் அற்ற இடத்தில் துன்பங்கள் அற்றுவிடும்" என்றார். அதே புத்தர், ‘ஆசைப்படாமல் இருபதற்கு ஆசைப்பட்டார்’. ஆசைப்படாமல் இருக்க முடியாது.

ஆசைபடு. சிலர் கூறுவதை போல ‘அத்தனைக்கும் ஆசைப்படு’. ஆசை நிறைவேறினால் மகிழுந்து கொள்.

அந்த மகிழ்ச்சியைத் தவிர வாழ்வில் வேறேன்ன வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆசைக்கு முற்ப்படு.
இப்போது காதலுக்கு வருவோம். முடியுமா? என எண்ணிப்பார். முடியும் என்றால் முற்ப்படு, இல்லாவிடில், அதே முயற்சியில் வாழ்க்கைப் பாதையில் சிலர் கல் போல உறைந்துக்கிடப்பர். உங்களுக்குத் தெரியுமா அவர்கள் நம் வழிகாட்டிகள்.

காதல்… கவர்ச்சி… ஈர்ப்பு… அறிவு… மனம்… ஆசை….. இந்தப் படைப்பின் முதல் வரியை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்

மகிழ்ச்சி(புன்னகை)

நீங்கள் கண் இமைக்கின்ற இந்தத் தருணத்தில் பிறக்கிற குழந்தை, இப்பூமியின் முதல் சுவாசத்தை அனுபவிக்கும் பொது புன்னகைக்கத் தொடங்குகின்றது. அத்தகையச் சிரிப்பை நம்மால் மறுமுறைக்க முடிவதில்லை. இதன் அவசியம் என்ன?

உள்ளம் கனிந்து சிரிக்கும் வேளையில் நாம் உயரப் பறப்பதுவென நினைக்கிறோம் அல்லவா? அவ்வேளையில் இதயத்தில் புதுக்குருதி பாய்கிறது. அமுதம் உண்ணக் கொடுத்தாலும் மனம் மறுக்கிற‌‌து. ஆனால், அது என்ன‌? உள்ள‌ம் க‌னிந்து சிரிப்ப‌து.

உதடுகள் விரிகிறது, முத்துப் பற்கள் தெரிகிறது, கண்ணங்கள் நெளிகிறது. இவை, நாம் இன்றைய தினங்களில் 'சிரிப்பது' என்பதன் செயலாக்கம். உள்ளம் கனிவது, இன்று நம்மில் சிலரில் வெகு சில வேளைகளில் மட்டுமே! நம்மைச் சுற்றி இருப்பவர்கள் சிரிப்பதற்காக, காரணம் கூட தெரியாமல் சிரிபோர் நம்மில் உள்ளர்.

'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்'. மனதால் சிரிக்க வேண்டாம். தோற்றத்தால் மட்டுமே சிரிப்பதனால் நோய் விட்டு போகுமாம். மனதால் சிரித்தால்? ஆனால் அது எப்படி... மனதால் சிரிப்பது?

பேருந்தில், சில்லறை கேட்கும் நடத்துனரிடம் கங்கண‌ம் கட்டுவதை விட, "ஐம்பது காசு இல்லையே ஐயா!" எனக் கூறி நீங்கள் கூறி அளிக்கும் சிறு புன்னகைக்கு மிகக் சரியான எதிரொலி கிடைக்கும். அப்போது அறியலாம் மனதால் மகிழ்வது என்னவென்று!

உணவகத்தில் தாம‌த‌த்திற்க்கு சேவ‌க‌னிட‌ம் கோபித்து என்ன‌ ப‌ய‌ன்? ஒரு 'spl தோசை ' சொல்லியிருந்தேனே என்ப‌தை புன்ன‌கைக் க‌ல‌வ‌யுட‌ன் த‌ரும் போது அவ‌ன் முக‌த்திலும் ஒரு பூரிப்பு. ஆங்கிலத்தில் ' Assertiveness ' என‌க் கூறப்ப‌டுவ‌து இதுவே."

தோசை வேண்டுமானால் தோசை கொணர‌ ஆவண செய்ய‌ வேண்டும். அந்த 'ஆவண‌' ம‌னித‌ர்க்கு ம‌னித‌ர் மாறுப‌டும். செய‌ல்க‌ள் செய்யப்ப‌ட‌ வேண்டுவன(things making things done). செயல்கள் செய்யப்பட்டதா என்பதை விட எங்ஙனம் செய்ய‌ப்ப‌ட்ட‌து என்ப‌தே முக்கிய‌ம்.

ஒரு புத்தகத்தில் படித்தது. அவரது தாயார் 'ICU ' ல். இரவு மணி இர‌ண்டு. செவிலிய‌ர் பதற்றத்துடன் த‌த்த‌ம் வேலைக‌ளை செய்துகொண்டிருந்த‌ன‌ர்.

ம‌ருத்துவ‌ம‌னை சிற்றுண்டிச் சாலையில் அவ‌ர், "ஒரு டீ கொடு பா!" என‌க் கூறி இருப‌து ரூபாய் நோட்டை நீட்டினார். க‌டைக்காரரோ மூன்று ரூபாய் சில்ல‌றையாக கொடுக்கும்ப‌டி கறாராக‌ பேசினார். ப‌ல‌ நேர‌ம் யோசித்தவ‌ர் 'ஆறு டீ கொடு' என்றார்.

க‌டைக்கார‌ரோ ஏழு டீ யாக‌ கொடுத்தார். ஒரு டீயை அருந்திவிட்டு மீத‌த்தை என்ன‌ செய்ய‌லாம் என யோசித்துக் கொண்டிருந்தார். முடிவில் செவிலிய‌ர்க்கு வ‌ழ‌ங்குமாறு முடிவெடுக்க‌ப்ப‌ட்ட‌து. அவ்வாறே வ‌ழங்கப்ப‌ட்ட‌து. அது நேர‌ம் வ‌ரை ம‌யான‌ அமைதி பூண்டிருந்த 'ICU ' அறை த‌ற்போது க‌ளை க‌ட்டியிருந்த‌து. செவிலிய‌ர் முக‌த்தில் புன்ன‌கைக்கான பாவ‌னை, ந‌ன்றி கூறும் தோரனை. எல்லாம் இருப‌து ரூபாய் செய்த மாய‌ம். அவர் தாயின் பார்வையிலும் ஒரு மகிழ்ச்சி தென்பட்டது. அதை க‌ண்ட‌ அவ‌ர் ம‌ன‌ம் நிச்ச‌ய‌ம் நிறைந்திருக்கும்.

எப்போதும், வெகு விலை கொடுத்துப் பெறப்படும் முக மகிழ்ச்சியை விட, விலையில்லாமல் பெற‌ப்படும் மகிழ்ச்சிக்கு மதிப்பு அதிகம். உள்ளம் கனிய மகிழ்ச்சியுருவதற்க்கு இதுவும் ஒரு வழி.

பேருந்தின் அருகில் உள்ளவர் காலினை 'ஷு' வால் நறுக்கென மிதித்து விட்டு ,(வேண்டுமென அல்ல) எதிர்ப்புறமாய் முகம் திருப்பிக்கொண்டீகளானால், மறுமுறை அவர் முகத்தைக் கண்டு மிரண்டுப் போவீர். அதுவே, தெரியாமல் மிதித்த பிறகு, "சாரி சார்" என புன்னகைத்து சொல்லும் பொது....... அடுத்த முறை சோதித்து பாருங்கள்.

சுருக்கமாகச் சொன்னால் மகிழ்வித்து மகிழ்ந்தால் உள்ளம் கனியும். மேலும் பற்பல தருணங்களில் உள்ளம் கனியலாம்.

ஒரு குழந்தை நாளைக்கு நானூறு முறை சிரிக்கிறது, ஆனால் திட மனிதன் 15 முறை தானாம்! என்ன கொடுமை சார்!!! இதற்காக 'லாஃபோதெரபி' என்ற பெயரில் காரணம் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தை இன்று காலை கூட கடற்கரை ஓரமாய் கண்டிருக்கலாம்.

#####

நான் மனதால் மகிழ்ச்சியுற்றதை அறிந்த சில வேளைகள்,

1. +2 கணிதத்தில் பள்ளி முதல் மதிப்பெண் வாங்கியதற்க்கு பதக்கம் வேளை, மேடையிலிருந்து இருக்கை வரை நான் பறந்து வந்ததாகவே தோன்றுகிற‌து .

2. என் தமக்கை திருமணத்திற்க்கு வங்கி கடன் வாங்கும் போது நான் பொறுப்பேற்று கையொப்பமிட்ட வேலை.

3. கல்லூரியில் பல முறை மேடையேறியிருந்தாலும் கல்லூரி முதல்வர் திரு.அபெய்குமாரிடம், அன்பளிப்பு பெற்ற போது.

4. ஆளுமை திறன் வளர்ச்சி வகுப்பில் கடந்த மூன்று நாட்கள்.

5. 'மனிதம்', அழகர் இராமானுஜம் அவர்களை சந்தித்து பேசும் வேளைகளில்.

6. இந்த மக்களிடம் மனித அபிமானம் இன்னும் உயிர்த்திருக்கிறது என்பதை அறியும் வேளைகளில்.

7. எப்போதும் கோபப்படுகிற நான் சில ஆண்டுகளாக பொறுமையை கடைபிடிக்கும் போது.

8. நானும் ஒரு எழுத்தாளன் என எண்ணிக் கொண்டு எழுதும் போது.

9. முதன் முறையாக ஒரு பெண்ணிடம் விண்ணப்பித்த வேளை.

விரதம் ஓய்வு

உண்டிபடியில் கால் எடுத்து வைத்தபோது தான் ஞாபகம் வந்தது, இன்று வெள்ளிகிழமை அல்லவா? அதனால் என்ன?.. ஆம், இன்று நான் உணவு எடுத்துக்கொள்ள மாட்டேன் அல்லவா? ஆனால் நான் ஆத்திகன் அல்லானே? பின் எதற்கு 'விரதம்'?

இது விரதம் அன்று, ஓய்வு!. வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் கடந்து, நான் வாய்வழியாக திணிக்கும் குப்பைகளை பதப்படுத்தி, அதிலிருந்து என் உடம்பிற்குத் தேவையான புரதம், வைட்டமின் முதலானவற்றை பிரித்து எடுத்து, 'நான்' என்ற இயந்திரம் இயங்க உதவுகிறது ஜீரண இயக்கம்.

இதற்கு ஓய்வு அழிக்க வேண்டாமா? சரிதான்! அப்படி என்றால் இன்று இந்த நாக்கின் பாடு திண்டாட்டம் தான். காலை அவசரத்தில் உண்ண மறந்துவிட்டதாக நாக்கிடம் கூறிவிடலாம்.

ஆனால், பத்தரை மணி வாக்கில் ரமேஷ் 'பேண்டரி' செல்ல அழைப்பனே? பின் ஒரு மணிக்கு மதிய உணவு. மூன்று மணி வாக்கில் 'ஜாவா க்ரீன்'. மாலையில், 'நெஸ்கபெ' என சுவையூக்கிகள் நீள்கின்றன. இன்றைய விரதம் கூடியதா எனக்கு ?!?!?


நீங்களாவது முயற்சித்துப் பாருங்கள். சனி, ஞாயிறுகளிலாவது!!