காமத்து இன்பம்

தன் இமைகளாய் இருக்கலாம் 
அவன் கண்டது.
ஏதோ பார்வையை மறைத்தது. 
என்னவாய் இருக்கும்.

விரல்கள் கண்டான்.
பெருவிரல், மறுவிரல், இரண்டும் 
தன் விரல்களைத் தீண்ட வர.

தானுறங்கிய பஞ்சனையினை 
விட அதி மென்மையாய்.
அவள் முகம் காண மறுக்கிற 
இன்பத்தீண்டல் அது.

அவனின் பிற மூவிரல்களும் ஏங்க,
 அவளின் பிற மூவிரல்களும் 
தொட்டுக்கொண்டன.

அவள் பள்ளங்கள் நுகர்ந்தன, 
அவனது உணர்ச்சி நரம்புகள் 
வழியோடிய ரேகைகள்.

நகக்கண்கள் ஒன்றையொன்று 
காணாது ஏமார்ந்து வருந்தின.
கண்களிருந்தும் கண்ணீர் வரவில்லையே!

நெல்லிக்கனி போல உள்ளங்கை அவளுக்கு, 
பல நாள் நோன்பிருந்து வாடி வதங்கி 
இன்பப்பசியுற்றுக் கட்டியணைத்தது 
அவனது உள்ளங்கையை. 
அவனுடையதோ பலா தோல் போல.

இதுவரை மேலாகத் தொட்டுகொண்டிருந்த
 அவளது விரல்களும் 
அடுத்த நகர்த்தலுக்கு மும்முரமாயின.

அவளது வலக்கையின் பெருவிரலின் தலை 
அவனது இடக்கையின் முதுகின் பின்
சென்று கட்டிப் பிடித்தது.

பிறகு அடுத்த விரல் 
ஆழமான அந்தக் குழியில் விழுந்தது.
பிற விரல்களும் அதுபோல அனுசரணை செய்தன.

இணைந்தக் கைகளாய் உறங்கிக்கிடக்க,
இன்னொரு  கை அவளது இடக்கையை எடுத்து
அவனது கன்னத்தில் பரவச் செய்தது.

இன்னும் அவன் கண்கள் 
விளங்கவில்லை
தூங்கிக்கிடந்தன.