காதல் தேவதையின் தண்டனை

இதுநாள் வரை காதல் என்னைத் தீண்டிவிடாமல் தற்காத்து இருந்தக் குற்றத்திற்காக தண்டிக்கப்பட இருக்கிறேன் நான் .

காதல் தேவதையிடம் என்னைக் காட்டிக்கொடுதுவிட்டார் தபூ சங்கர்.

தீர்ப்பு வழங்கப்பட்டாயிற்று; காதலை காதலிக்க வேண்டுமாம்
காதலி கிடைக்கும் வரை...
காதலி கிடைதப்பிறகு ஆயுள் தண்டனை அரங்கேற்றப்படும்.

தற்போது காதலைக் காதலிக்கிறேன்.

ஆயுள் தண்டனைக்கைதியாய் காதல் தேவதையால் ஆசிர்வதிக்கப்படவுள்ளேன்.

ஆனாலும் நான் தற்போது காதலிக்கிற காதல் என்னை விடுவதாய் இல்லை.

ஆசை - காதல்

சத்குரு என்னை ஆசைக்கு அறிமுகப்படுத்தி
ஆசை வளர்க்க ஆசைப்படு என்றார்.

தபூ சங்கர் என்னை காதலுக்கு அறிமுகப்படுத்தி
காதலை காதலிக்கச் சொன்னார்.

நானோ ஆசையை காதலிக்கிறேன்.
காதலிக்க ஆசைப்படுகிறேன்.

கனவிலே கவிதை எழுதுகிறேன்

கனவிலே கவிதை எழுதுகிறேன்.
பேனா இல்லாமல், காகிதம் இல்லாமல்.
கவிதைக்கு பொய் அழகுதான்.
இந்தக்கவிதையும் அழகுதான்; ஆனால் பொய் இல்லை.

என்னே அருமையானக் கவிதை?!!
என்னால் எழுதப்பட்டதா, இக்கவிதை ?!
எனக்கே உரியதா, இக்கவிதை ?!
என் பெயருக்கு முன்னால் முழுமை பெறுவதா, இக்கவிதை ?!

ஆனால், விடிந்தவுடன் மறந்துவிடுகிறேன் இக்கவிதையை; உன்னை!!
கனவில் மட்டும் தான் வருவயோ ?!!
கவிதை வருவதனால், அதுவும் கனவில் மட்டும் வருவதனால்,
பகலிலும் கனவுகாணத் துணிகிறேன்.

ஆதலால், என் பகல்களைக் கொல்லாதே!
நினைவிலும் வந்துவிடு; முழு மதி காட்டிவிடு!
அச்சில் ஏற்றுவேன் உன்னை,
நம் மண அழைப்பிதழில் கவிதையாய்; உன் பெயர்!.

காதல் என்னை காதலிக்கிறது

இப்போது எல்லாம் காதல் என்னைக் காதலிக்கிறது !!

தன்னைப் பற்றி கவிதைகள் பல பாடச்சொல்கிறது.
அழகு நயம் பாராட்டச்சொல்கிறது.

ஒரே சீராக, நேரம் தெரியாமல் பேசச்சொல்கிறது.
கரம் பிடித்து ஊர் வலம் வரச் சொல்கிறது.

கனவில் நிதமும் அன்புத்தொல்லைகள் பல செய்கிறது.
'பொடா','லூசா நீனு', 'ஐயடா', 'புருசா' எனச் சொல்லி கொஞ்சுகிறது.

உள்ளங்கையில் மட்டும் ஒரு முத்தம் கேட்கிறது.
இதழ்களை எனதருகே கொணர்ந்து தன் மூச்சை சுவாசிக்கச் சொல்கிறது.

தன் விழி இரண்டையும் நொடி விடாமல் படிக்கச் சொல்கிறது.
'பொறுத்திருடா' எனச்சொல்லி கனவிலும் நினைவிலும்
வந்து வந்து செல்கிறது.

இப்போது எல்லாம் காதலை நான் காதலிக்கிறேன்!!