Showing posts with label வாழ்வியல். Show all posts
Showing posts with label வாழ்வியல். Show all posts

நீயும்... நானும்! - கோபிநாத் (Apr 21)

நன்றி : ஆனந்த விகடன்


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம். ஒரு சர்வதேசக் கருத்தரங்கில் கலந்துகொள்ளப் போயிருந்தேன். Dating Harbour என்று ஓர் அழகான இடம். ஒரு பக்கம் படகுகள் சீறும்... மறு பக்கம் ஹோட்டல்களில் கேளிக்கைகள் களைகட்டும்.
நம் ஊர் கோயில் குளத்தில் இருக்கிற படிக்கட்டுகள் மாதிரி அங்கும் படிக்கட்டுகள் நிறைய இருக்கும். ஜோடி ஜோடியாக, குடும்பம் குடும்பமாக நிறையப் பேர் உட்கார்ந்திருப்பார்கள்.
ஒருநாள் மாலை நான்கு மணி இருக்கும் கருத்தரங்குக் கூடத்தில் இருந்து வெளியே வந்து அந்தப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தேன். சரியான குளிர். ஐந்து நிமிடங்கள் இருக்கும், அழகான வெள்ளைக்காரப் பெண் வந்து அமர்ந்தாள். என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். நானும் ஒரு ஹலோ சொன்னேன். இரண்டு நிமிடங்கள்கூட இருக்காது எங்கிருந்தோ ஓடி வந்த ஓர் இளைஞன், என் அருகில் இருந்த பெண்ணை இதழோடு இதழ் பதித்து முத்தமிட்டான். மிக நீண்ட முத்தம். அவளைக் கட்டி அணைத்தான். இருவரும் இறுகத் தழுவிக்கொண்டனர்.
அருகில் நான் இருப்பதையோ, அங்கு நிறையக் கூட்டம் இருப்பதையோ அவன் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அதற்குப் பிறகுதான் கவனித்தேன். நடந்து போகிறவர்கள், அமர்ந்து இருப்பவர்கள் என எல்லாருமே இறுக அணைத்தபடி, தடவிக்கொடுத்தபடி இருந்தார்கள்.
'என்ன ஊருடா இது... விவஸ்தை கெட்டவனுங்க' என்று கோபம் எனக்கு. அரை மணி நேரம் கழித்து கருத்தரங்கில் என்னோடு பங்கேற்ற ஆஸ்திரேலிய நண்பன் வந்தான். அவனிடம், இருந்த கோபத்தை எல்லாம் கொட்டினேன், 'என்ன கலாசாரம் இது? ஆணும் பெண்ணும் இப்படி அணைத்துக்கொண்டு திரிகிறார்கள். இதைப் பார்த்து எங்கள் மக்களும் கெட்டுப்போகிறார்கள்' என்றேன்.
அவன் என்னிடம், 'உங்கள் ஊரில் ஆண், பெண் உறவின் கலாசாரம் என்ன?' என்றான். நான் மௌனமாக இருந்தேன். 'பெண்ணை நேசிப்பதும், அவளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதும் நல்ல கலாசாரம்தானே' என்றான். 'ஆமாம்' என்று தலையாட்டினேன்.

'அதைத்தான் இவர்களும் செய்துகொண்டு இருக்கிறார்கள். இதழோடு இதழ் பதிப்பது முத்தம் பரிமாறுதல் மட்டுமல்ல. வெப்பத்தைப் பரிமாறுதலும்தான். உடல்ரீதியாகத் தன்னைவிட மென்மையான பெண்ணை அணைத்து அவளுக்குத் தடவிக்கொடுத்து வெப்பத்தை அவள் உடலுக்குத் தருகிறான்.' இந்த விஷயத்தை அவன் சொன்ன போது குளிர் நான்கு டிகிரியாக இருந்தது. எனக்கும் உடம்பு நடுங்கியது.
'பெண்களை மட்டுமல்ல... குழந்தைகளையும் அணைத்துக்கொண்டும், தடவிக்கொடுத்துக்கொண்டும் இருப்பதைக் கவனியுங்கள் . இது குளிர்ப் பிரதேசம்... இங்கே அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிற முறை இது. இதை 38 டிகிரி வெப்பத்தில் நீங்கள் செய்தால் அது உங்கள் முட்டாள்தனம். அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது' என்றான். எனக்குப் பொட்டில் அடித்த மாதிரி இருந்தது.
அதென்னவோ தெரியவில்லை. நம்மைவிடப் பலசாலியாக நம்பும் யார் செய்கிற காரியமும் சரி என்றே நமக்குத் தோன்றுகிறது. நம் சொந்த அடையாளம், நம் அபிப்ராயங்கள் எல்லாவற்றையும் தூக்கித் தூர எறிந்துவிட்டு, அடுத்தவருடைய ஷூவுக்குள் அடைந்துகொள்வதில் பேரானந்தம்.
குறைபாடுகளை ஒளித்துவைத்துக்கொண்டு, வெளிப்படுத்துகிற முகமும் பேச்சும் பொய்யானவை. நீங்கள் நீங்களாக வெளிப்படும்போதுதான் ஆரோக்கியமான தோழமை அமைகிறது. அந்த தோழமைக்குள் அழகியல் என்ற அம்சத்தைத் தாண்டி அறிவுப் பகிர்தல் நடக்கிறது.
எதிர்பாலின நட்பு, ஈர்ப்பு தொடர்பானதும்தான் என்றாலும், அடுத்த தலைமுறைக்குள் அதிகமான அறிவுப் பகிர்தல் நடக்க, பாசாங்குகளைக் குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இது ஆண்-பெண் நட்பு குறித்தது மட்டுமல்ல... தேசத்தின் வளர்ச்சி தொடர்பானதும் ஆகும்.
எனக்கு என்னவெல்லாம் தெரியும் பார் என்ற தொனியில் எதிர்பாலின நண்பரோடு அறிவியல், அரசியல், சமூகம், உலக வரலாறு என்று பல்வேறு விஷயங்கள் இப்போதும் பேசப்படுகின்றன. ஆனால், இவை பெரும்பாலும் நான் எவ்வளவு தகவல்கள் தெரிந்துவைத்திருக்கிறேன் பார் என்ற 'நிரூபிக்கும்' தோரணையாகவே நடக்கிறது. இந்த அலங்காரங்களைக் கழற்றிவைத்துவிட்டு 'கருத்துப் பரிமாற்றம்' என்ற அளவில் நடைபெறுவது குறைவுதான்.
பெண் தோழிக்குப் பிடித்த மாதிரி உடை அணிந்துகொள்வது, அருகில் வரும்போது ஆங்கிலம் பேசுவது, பிறந்த நாளுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கித் தருவது, தினமும் காலையில் Good morning Sms அனுப்புவது, ஏதாவது பிரச்னை என்றால், உடனடியாகப் போய் உதவுவது, கவிதைப் புத்தகங்கள் பரிமாறிக்கொள்வது இந்த எல்லாப் பரிவர்த்தனைகளும் அழகானதுதான்.
இந்த ஈர்ப்பு எல்லையைத் தாண்டி, வெறும் சென்ட்டிமென்ட் நட்புறவைத் தாண்டி நீயும், நானும் அறிவுள்ள இரண்டு மூளைகள் என்ற அளவுகோலிலும் நட்பு அளக்கப்பட வேண்டும்.
ஆண்-பெண் தோழமையை இந்தியச் சமூகம் சந்தேகத்தோடுதான் பார்க்கிறது என்பது ஓரளவு உண்மைதான். ஆனால், போலியான எந்த வெளிப்பாடுகளையும் சமூகம் சந்தேகத்தோடுதான் கவனிக்கிறது. உலகம் முழுவதும் அப்படித்தான்.
ஆண்-பெண் தோழமை மிகவும் அற்புதமான, தேசிய விருத்திக்கான ஒரு நட்புறவு. இந்தத் தோழமையில் வெளிப்படுகிற உடல் மொழி, பேச்சு, தொடுதல் இவை அனைத்தும் அந்தத் தோழமை எவ்வளவு யதார்த்தமானது என்பதைச் சொல்லிவிடுகிறது.
இந்தியச் சமூகத்தின் அழுக்குப் படிந்த பழைய கட்டுக்கோப்புகளை நான் உடைக்கிறேன் என்ற மனோபாவத்திலோ, நான் ரொம்ப மாடர்ன் என்ற அளவிலோ, எதிர்பாலினத் தோழமை என்பது ஸ்டேட்டஸ் சிம்பல் என்ற உணர்வோடோ இயங்குகிற தோழமைக்குள் உண்மை இருக்க வாய்ப்பு இல்லை.
இயக்குநர் கரு.பழனியப்பன் 'நீயா... நானா' நிகழ்ச்சியில் ஒரு முறை சொன்னார், 'என் தந்தையிடம் எதையெல்லாம் சொல்ல முடிகிறதோ, அதெல்லாம் சரி. அவரிடம் நான் எதை மறைக்க முயல்கிறேனோ, அது தவறு' என்று.
உங்கள் எதிர்பாலினத் தோழமை குறித்து இயல்பாக உங்கள் வீட்டில் சொல்ல மனசு இடம் கொடுத்தால் அந்த நட்புக்குள் ஈர்ப்பைத் தாண்டிய அறிவுப் பகிர்தல் அவசியம் நடக்கும்.
நாகரிகம், உறவு பேணுதல், வசீகரித்தல், புனைவுகள் இன்றி நடந்துகொள்ளல், தன்மையாகப் பேசுதல், இடங்கண்டு செயல்படுதல் போன்றவற்றை வேறு யாரிடமும் கற்றுக்கொள்ள வேண்டிய நெருக்கடிகள் நமக்கு இல்லை.
அந்தப் பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும் நமக்கு நீண்ட வரலாறு இருக்கிறது.
அற்புதமான ஆண்-பெண் தோழமைஅறிவுப் பகிர்தலோடு நடக்கட்டும்!

தில்லி நகரம் உறங்கும் போது... (பகுதி I )

"நாம பிரிஞ்சு இருந்தா, அவர் ரிலேசன் வில் கைய்ன் பாண்ட் ப்ரியா. இன்னும் ஒன்னர ரெண்டு வருஷம் தான், கண்ண மூடி கண்ண திறக்கறதுக்குள்ள ஓடிடும். நான் எங்க வெளிநாட்டுக்கா போகப் போறேன். தில்லிக்கு தான. நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்.

உனக்கு இங்க நிறையா வேலை இருக்கு. உன்ன நம்பி ஒரு NGO மட்டும் இல்ல, யூ ஆர் டூயிங் சம்திங் பார் தி எர்த். தட்ஸ் வை ஐ லைக் யூ அண்ட் லவ் யூ. பிகாஸ், யூ லவ் அண்ட் கேர் பார் எர்த் லைக் மீ. இதே போல நல்ல ஒரு ஆபர்ச்சுனிட்டி அங்க உனக்கு கிடைக்கும்னு நிச்சயம் சொல்ல முடியாது.

உன்ன கூட்டிட்டு போக எனக்கு ஓகே தான். எங்க அம்மா அப்பாவும் ஓகே சொல்லிட்டாங்க.... நீ இங்க இருந்தா தேன்மொழிய பாத்துக்குவ... அவள அங்க வரைக்கும் கூட்டிட்டு போக முடியாதுனு நீதான சொன்ன.

கார்ல வரும் போது என் தோள்ல சாஞ்சு அழுதுட்டே வந்து என்னையும் டைவர்ட் பண்ணிட்ட.... என் ஷர்ட் ஈரமாற அளவா அழறது. என்னாலையும் அழறத கண்ட்ரோல் பண்ண முடியாம ரெஸ்ட் ரூம் போய் அழுதுட்டு வர்றேன்.

எனக்கு மட்டும் உன்ன பிரிஞ்சு போறதுல இஷ்டமா என்னடா.. சென்னைல என்னோட ப்ரொபைலுக்கு வேலை கிடைக்கல. நீ தான இந்த ஓப்பனிங் பத்தி என்னட சொன்ன... நீ சொல்லாமலேயே இருந்திருக்கலாம்னு தோணுது... அதான் என்னோட மாமனார் நிறையா சம்பாதிச்சு வச்சிருக்கார்ல நான் வேற சம்பாதிக்கனுமானு கேட்டதுக்கு, உத்தியோகம் புருஷ லட்சனம்னு சொல்லிட்ட.

நீ சொன்ன மாதிரி புது கம்பெனில உன்னோட செக் லிஸ்ட் படி கிரீன் இனிசியேடிவ் எடுக்குறேன். முடியாதுனு சொன்னாங்கனா தொடரும் ப்ளைட்ட பிடுச்சு சென்னை வந்து ஒட்டிக்கிறேன் ஓகேவா"

கடைசியா இப்டி சொன்னதுக்கு அப்புறம் தான் ப்ரியா உன் முகத்துல சிரிப்ப பாக்க முடிஞ்சது.

இப்டி பேசிகிட்டே செக்கின் கவ்ண்டர்ல டிக்கட்ட குடுத்து போர்டிங் பாச வாங்கிட்டேன். உன் அப்பா கஸ்டம்ஸ்ல சீனியர் ஆபிசர். அதனால அவரோட இன்ப்ளுயன்ஸ யூஸ் பண்ணி செக்குரிட்டி செக் வரைக்கும் உன்ன அனுப்பிவச்சார். நான் போறது உங்க அப்பாக்கு பிடிக்கலையா பிடிச்சதானு அவருக்கு மட்டும்தான் தெரியும். மனுஷன் எதையுமே வெளி காம்பிச்சுக்க மாட்டார். என்ன வீட்டோட மாப்பிள்ளை ஆகறது தான் அவரோட ஸ்ட்ரேட்டஜி.

ப்ளைட்டுக்கு இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு. அடுத்து செக்யூரிட்டி செக். அப்றம் போர்டிங். ட்ரான்சிட் பே'ல சேர் காலியா இருந்தும் உக்காராம எதிரேதிர்ல நின்னு உன் கண்ண நான் பாத்துட்டு இருந்தேன். என் கண்ண நீ பாத்துட்டு இருந்த. "உன் வலது கையில் பத்து விரல் என் இடது கையில் பத்து விரல்"னு ரெண்டு பெரும் கை கோர்த்து இருந்தோம்.

பத்து நிமிசம் இருக்கும். "எக்ஸ்க்யூஸ்மீ சார், யூ ஆர் கெஸ்ட் ஆப் கிங்க்பிஷர் ?" கோட் ஷர்ட் போட்ட ஒருத்தன் வந்து கேட்டான். அப்ப தான் ரெண்டு பேரும் விழி சுழல்ல இருந்து மீள முடியாம வெளிய வந்தோம். அவன பாத்து நான் முறச்சதுல அவன் நிச்சயம் பயந்திருக்கனும்.

"நோ, ஏர் இண்டியா"னு நீ சொன்னா. அப்றம் அவன் போய்ட்டான்.
உங்க அப்பா கிங்க்பிஷர்'ல புக் பண்ண பாத்தார், நான் தான் ஏர் இண்டியா பெயில் அவுட் ஆயிடுச்சு.. ஏதோ நம்மால முடிஞ்சத செய்வோம்னு சொன்னேன். நீ இன்ஸ்டண்டா அப்ரிசியேட் பண்ணின. நீ எனக்கு கிடைக்க நிறையா குடுத்து வச்சிருப்பேன்னு நினைக்கிறன்.

யூ ஆர் சோ லவ்லி, ப்ரியா. திரும்ப ரெண்டு பெரும் விழி சுழல்ல குதிச்சோம். உன் வலது கன்னத்தில சரிஞ்சு இருந்த ஒத்த முடி'ய என்னோட இடது கை சுண்டு விரலால விளக்கி விட்டேன். "உலகத்தின் கடைசி நாள்... இன்று தானோ என்பது போல்... பேசி பேசி தீர்ந்த பின்னும் ... ஏதோ ஒன்று குறையுதே" அந்த பாட்டுல வர்ற பீளிங்க்ஸ் தான் ரெண்டு பேருக்கும். உன்னோட முகத்த பிக்சல் பை பிக்சலா பாத்தேன்.

ஒரு அஞ்சு நிமிசம் தான் இருக்கும். "அவர் லாஸ்ட் அண்ட் பைனல் போர்டிங் கால் பார் ஏர் இந்தியா IC440 .... " அப்டினு அனவுன்ஸ்மண்ட் வந்தது.

கடைசியா, நீ உன்னோட கண்ணால கேட்டத, நான் என்னோட கண்ணால கேட்டு, என் உதட்டால குடுத்தேன். அதுவும் உன் கன்னத்தில மட்டும் இல்ல... அப்றம் போன்ல நல்லா திட்டின. "ஒரு டீசன்சி வேணாமா... பப்ளிக் ப்ளேஸ்ல இப்டியா... நான் சென்ஸ்... நான் கேட்டா உடனே குத்துடுவியா.. அறிவு வேணாம்... இது இன்னும் சென்னை தான் பிரன்ச் கிஸ் குடுக்கற அளவு முன்னேறல.. " இந்த பொண்ணுங்கள புரிஞ்சுக்கவே முடியாது...

(பகுதி I முற்றும்.... தொடரும்...)

காதலின் இன்றைய உண்மை

நன்றி : http://www.vinavu.com/2010/03/01/vtv/

விடலைப்பருவத்தின் இறுதியில் வரும் முதல் காதல், உயிரியலின் தூண்டுதலே அன்றி அது சமூக உறவுகளில், வாழ்க்கையில் முதிர்ச்சியடைந்த காதலல்ல. முதல் காதலைப் பற்றி பேசவேண்டுமென்றால் அது அனுதாபத்துடன் கிண்டலடிக்கப்பட்டு புரியவைக்கப்பட்டிருக்க வேண்டும். வீட்டிலும், கல்லூரியிலும் தோன்றும் பொய்யான கலக உணர்ச்சிகளை சரியாக திசை மாற்றி தனது வாழ்க்கையின் ஆளுமையை கண்டு பிடிக்கும் வழியில் அந்த முதல் காதல் புன்னகையுடனும், சுய எள்ளலுடனும் உலர்ந்து உதிர்ந்துவிடும்.

...

நடுத்தர வர்க்கம் பொருளாதரத்தில் தனது மேல் வர்க்கத்தைப் பார்த்து கனவு கண்டு விட்டு நிஜத்தில் சாதாரண வாழ்க்கையை சலித்துக் கொண்டே வாழும். இந்த வர்க்கத்தின் பொதுப் பண்பு என்னவென்றால் எதையும் பட்டு பட்டுனு முடிவெடுக்காமல் ஜவ்வாக இழுக்கும். அவ்வகையில் காதல், வீரம், சோகம் எல்லாம் ஜவ்வுதான்.

நடுத்தர வர்க்கம் துணிந்து காதலித்து, காதலின் பிரச்சினைகளை எதிர் கண்டு போராடி வெல்வது அபூர்வம். இதனால் பிரச்சினைகளை விட்டுவிட்டு காதலைப் பற்றிய மயக்கங்கள், அவஸ்தைகள் அதற்கு தேன்தடவிய பர்கராக தாலாட்டி வருடுகிறது. எங்களோடு படம் பார்த்தவர்கள் இந்த ஜவ்வை எவ்வளவு கேலி செய்ய முடியுமோ அவ்வளவு செய்ததுதான் எங்களுக்கு இருந்த ஒரே ஆறுதல்.

சாதியும், மதமும், வர்க்கமும் சேர்ந்து திருமணத்தின் குற்றவியல் சட்டமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நாட்டில் அந்த அசலான பிரச்சினையைப் பற்றி பேசினால்தான் அது காதல் படம். வி.தா.வ யில் கிறித்தவம், இந்து மதம் எல்லாம் ஒரு பேச்சுக்கு வந்து சென்றாலும் படத்தின் இதயம், காதலின் இனிய அவஸ்தையையே பழைய முரளி படங்களுக்கு இணையாக அலுப்பூட்டும் விதத்தில் சுவாசிக்கிறது.

ஆனால் அலைகளின் கடற்கரை வாழ்க்கையில் இல்லாத அமெரிக்கா, அமெரிக்கர்கள் காறித்துப்பிய கென்டகி சிக்கன் கடை, ஷாப்பிங் மால்கள், செல்பேசி, எஸ்.எம்.எஸ், பளீர் சாலையில் பைக் பயணம் இவைதான் இது போன்ற காதல் படங்கள் வந்தடைந்திருக்கும் பரிணாமம். பா வரிசைப் படங்களில் நிலப்பிரபுத்துவ மேன்மையிலிருந்த காதல் இன்று முதலாளித்துவ முன்னேற்றங்களில் வந்து நிற்கிறதே அன்றி இந்தியாவின் காதல் வாழ்க்கையை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உயிராதரமான ஜீவன் இங்கு திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. மேக்கப் இல்லாமல் போராட்டத்தில் உயிர்வாழும் உண்மையான தமிழகக் காதலர்களை சந்திக்க வேண்டுமா? 27.02.10 நக்கீரனின் 24 ஆம் பக்கத்தில் பாருங்கள்.

விடலைப்பருவத்தின் இறுதியில் வரும் முதல் காதல், உயிரியலின் தூண்டுதலே அன்றி அது சமூக உறவுகளில், வாழ்க்கையில் முதிர்ச்சியடைந்த காதலல்ல. முதல் காதலைப் பற்றி பேசவேண்டுமென்றால் அது அனுதாபத்துடன் கிண்டலடிக்கப்பட்டு புரியவைக்கப்பட்டிருக்க வேண்டும். வீட்டிலும், கல்லூரியிலும் தோன்றும் பொய்யான கலக உணர்ச்சிகளை சரியாக திசை மாற்றி தனது வாழ்க்கையின் ஆளுமையை கண்டு பிடிக்கும் வழியில் அந்த முதல் காதல் புன்னகையுடனும், சுய எள்ளலுடனும் உலர்ந்து உதிர்ந்துவிடும்.

குழந்தைகள், காதல் இரண்டும் மனித குலத்தை உடல்ரீதியாகவும், அதனால் இனரீதியாகவும் நேசிக்கவைக்கும் அடிப்படைத் தூண்டுகோல்கள். ஆனால் அவை இரண்டும் அதன் வெளியை சுயம், தனிமை, வீடு என்ற தளைகளிலிருந்து பரந்த சமூக வெளிக்கு நகர்த்தும் போக்கில்தான் புடம் போடப்படுகின்றது.

காதல் ஒரு மனிதனை அதீதமான பலத்துடன் வாழ்க்கையை விருப்பமாக அணுகுவதற்கு தயார் செய்கிறது. காதலின் உதவியால் மனிதன் தனது சுற்றத்தை முன்னர் பார்த்திராத வகையில் அன்புடன் அணுகுகிறான். அவனுக்கு இதுகாறும் சலித்துப்போயிருந்த வாழ்க்கைத் தடைகள் இப்போது தாண்டுவதற்கு எளிதான விசயங்களாக மாறுகின்றன. ஆனால் காதலின் இந்த மகத்துவ ஆயுள் மிகவும் குறுகியது என்பதைப் பலரும் புரிந்து கொள்வதில்லை.

ஒரு ஆணும், பெண்ணும் தமது காதல் உண்மையானதா, பொருத்தமானதா என்பதை தத்தமது சமூக நடவடிக்கைகளிலிருந்தே கண்டுபிடிக்க முடியும். அதை அமெரிக்க, கேரளா லோகேஷன்களோ, அலங்கார உடைகளோ, ரஹ்மானின் உணர்ச்சியைக் கிளறும் இசையிலோ கண்டு தெளிய முடியாது. சரியாகச் சொல்லப்போனால் தமிழ் சினிமா தற்போது உருவாக்கியிருக்கும் இந்த புதிய சினிமா மொழி அதற்கு தடையாகவும் இருக்கிறது. எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்பதை மட்டும் ஒரு பரவச உணர்ச்சியாக எண்ணி எண்ணி இன்பமடையலாம்தான். ஆனால் வாழ்க்கை கோரும் சிக்கல் நமக்கு உணர்த்தும் ஒரே ஒரு யதார்த்தம் கூட இந்த இன்பத்தை வேகமாக முடிவுக்கு கொண்டுவந்து விடும்.

நான் ஆட !

பயிலும் காலம் வரை நான் ஆட ஆட
கிழமைகள் அமைதியாயிருந்தன.
பின்பு, கிழமைகள் ஆட ஆட
நான் அமைதியாயிருக்கிறேன்.