Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

அதுவென்ன செய்யும்

"இம்முறையும் ஓங்கி அழுதேன் ...
கேட்கக் கூடிய தூரத்தில் நீ இல்லை ...
என் தலையணை மட்டுமே அறிந்திருக்கும் இதனை ...
வேறு சாட்சி ஏதும் இல்லை ...
பாவம் அதுவென்ன செய்யும் ...
வெண் விழியிற் செறியும்
நீர் துளிகளை உறுஞ்சுவதைத் தவிர ...
பார்! அதுகூட என் கண்ணீரை
துடைக்க முற்படுகிறது.... "
இவ்வாறு எழுதினான் காதலி இல்லாத
தனியொருவன் தன் டைரியில். 

தில்லி நகரம் உறங்கும் போது... (பகுதி I )

"நாம பிரிஞ்சு இருந்தா, அவர் ரிலேசன் வில் கைய்ன் பாண்ட் ப்ரியா. இன்னும் ஒன்னர ரெண்டு வருஷம் தான், கண்ண மூடி கண்ண திறக்கறதுக்குள்ள ஓடிடும். நான் எங்க வெளிநாட்டுக்கா போகப் போறேன். தில்லிக்கு தான. நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்.

உனக்கு இங்க நிறையா வேலை இருக்கு. உன்ன நம்பி ஒரு NGO மட்டும் இல்ல, யூ ஆர் டூயிங் சம்திங் பார் தி எர்த். தட்ஸ் வை ஐ லைக் யூ அண்ட் லவ் யூ. பிகாஸ், யூ லவ் அண்ட் கேர் பார் எர்த் லைக் மீ. இதே போல நல்ல ஒரு ஆபர்ச்சுனிட்டி அங்க உனக்கு கிடைக்கும்னு நிச்சயம் சொல்ல முடியாது.

உன்ன கூட்டிட்டு போக எனக்கு ஓகே தான். எங்க அம்மா அப்பாவும் ஓகே சொல்லிட்டாங்க.... நீ இங்க இருந்தா தேன்மொழிய பாத்துக்குவ... அவள அங்க வரைக்கும் கூட்டிட்டு போக முடியாதுனு நீதான சொன்ன.

கார்ல வரும் போது என் தோள்ல சாஞ்சு அழுதுட்டே வந்து என்னையும் டைவர்ட் பண்ணிட்ட.... என் ஷர்ட் ஈரமாற அளவா அழறது. என்னாலையும் அழறத கண்ட்ரோல் பண்ண முடியாம ரெஸ்ட் ரூம் போய் அழுதுட்டு வர்றேன்.

எனக்கு மட்டும் உன்ன பிரிஞ்சு போறதுல இஷ்டமா என்னடா.. சென்னைல என்னோட ப்ரொபைலுக்கு வேலை கிடைக்கல. நீ தான இந்த ஓப்பனிங் பத்தி என்னட சொன்ன... நீ சொல்லாமலேயே இருந்திருக்கலாம்னு தோணுது... அதான் என்னோட மாமனார் நிறையா சம்பாதிச்சு வச்சிருக்கார்ல நான் வேற சம்பாதிக்கனுமானு கேட்டதுக்கு, உத்தியோகம் புருஷ லட்சனம்னு சொல்லிட்ட.

நீ சொன்ன மாதிரி புது கம்பெனில உன்னோட செக் லிஸ்ட் படி கிரீன் இனிசியேடிவ் எடுக்குறேன். முடியாதுனு சொன்னாங்கனா தொடரும் ப்ளைட்ட பிடுச்சு சென்னை வந்து ஒட்டிக்கிறேன் ஓகேவா"

கடைசியா இப்டி சொன்னதுக்கு அப்புறம் தான் ப்ரியா உன் முகத்துல சிரிப்ப பாக்க முடிஞ்சது.

இப்டி பேசிகிட்டே செக்கின் கவ்ண்டர்ல டிக்கட்ட குடுத்து போர்டிங் பாச வாங்கிட்டேன். உன் அப்பா கஸ்டம்ஸ்ல சீனியர் ஆபிசர். அதனால அவரோட இன்ப்ளுயன்ஸ யூஸ் பண்ணி செக்குரிட்டி செக் வரைக்கும் உன்ன அனுப்பிவச்சார். நான் போறது உங்க அப்பாக்கு பிடிக்கலையா பிடிச்சதானு அவருக்கு மட்டும்தான் தெரியும். மனுஷன் எதையுமே வெளி காம்பிச்சுக்க மாட்டார். என்ன வீட்டோட மாப்பிள்ளை ஆகறது தான் அவரோட ஸ்ட்ரேட்டஜி.

ப்ளைட்டுக்கு இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு. அடுத்து செக்யூரிட்டி செக். அப்றம் போர்டிங். ட்ரான்சிட் பே'ல சேர் காலியா இருந்தும் உக்காராம எதிரேதிர்ல நின்னு உன் கண்ண நான் பாத்துட்டு இருந்தேன். என் கண்ண நீ பாத்துட்டு இருந்த. "உன் வலது கையில் பத்து விரல் என் இடது கையில் பத்து விரல்"னு ரெண்டு பெரும் கை கோர்த்து இருந்தோம்.

பத்து நிமிசம் இருக்கும். "எக்ஸ்க்யூஸ்மீ சார், யூ ஆர் கெஸ்ட் ஆப் கிங்க்பிஷர் ?" கோட் ஷர்ட் போட்ட ஒருத்தன் வந்து கேட்டான். அப்ப தான் ரெண்டு பேரும் விழி சுழல்ல இருந்து மீள முடியாம வெளிய வந்தோம். அவன பாத்து நான் முறச்சதுல அவன் நிச்சயம் பயந்திருக்கனும்.

"நோ, ஏர் இண்டியா"னு நீ சொன்னா. அப்றம் அவன் போய்ட்டான்.
உங்க அப்பா கிங்க்பிஷர்'ல புக் பண்ண பாத்தார், நான் தான் ஏர் இண்டியா பெயில் அவுட் ஆயிடுச்சு.. ஏதோ நம்மால முடிஞ்சத செய்வோம்னு சொன்னேன். நீ இன்ஸ்டண்டா அப்ரிசியேட் பண்ணின. நீ எனக்கு கிடைக்க நிறையா குடுத்து வச்சிருப்பேன்னு நினைக்கிறன்.

யூ ஆர் சோ லவ்லி, ப்ரியா. திரும்ப ரெண்டு பெரும் விழி சுழல்ல குதிச்சோம். உன் வலது கன்னத்தில சரிஞ்சு இருந்த ஒத்த முடி'ய என்னோட இடது கை சுண்டு விரலால விளக்கி விட்டேன். "உலகத்தின் கடைசி நாள்... இன்று தானோ என்பது போல்... பேசி பேசி தீர்ந்த பின்னும் ... ஏதோ ஒன்று குறையுதே" அந்த பாட்டுல வர்ற பீளிங்க்ஸ் தான் ரெண்டு பேருக்கும். உன்னோட முகத்த பிக்சல் பை பிக்சலா பாத்தேன்.

ஒரு அஞ்சு நிமிசம் தான் இருக்கும். "அவர் லாஸ்ட் அண்ட் பைனல் போர்டிங் கால் பார் ஏர் இந்தியா IC440 .... " அப்டினு அனவுன்ஸ்மண்ட் வந்தது.

கடைசியா, நீ உன்னோட கண்ணால கேட்டத, நான் என்னோட கண்ணால கேட்டு, என் உதட்டால குடுத்தேன். அதுவும் உன் கன்னத்தில மட்டும் இல்ல... அப்றம் போன்ல நல்லா திட்டின. "ஒரு டீசன்சி வேணாமா... பப்ளிக் ப்ளேஸ்ல இப்டியா... நான் சென்ஸ்... நான் கேட்டா உடனே குத்துடுவியா.. அறிவு வேணாம்... இது இன்னும் சென்னை தான் பிரன்ச் கிஸ் குடுக்கற அளவு முன்னேறல.. " இந்த பொண்ணுங்கள புரிஞ்சுக்கவே முடியாது...

(பகுதி I முற்றும்.... தொடரும்...)

காதலின் இன்றைய உண்மை

நன்றி : http://www.vinavu.com/2010/03/01/vtv/

விடலைப்பருவத்தின் இறுதியில் வரும் முதல் காதல், உயிரியலின் தூண்டுதலே அன்றி அது சமூக உறவுகளில், வாழ்க்கையில் முதிர்ச்சியடைந்த காதலல்ல. முதல் காதலைப் பற்றி பேசவேண்டுமென்றால் அது அனுதாபத்துடன் கிண்டலடிக்கப்பட்டு புரியவைக்கப்பட்டிருக்க வேண்டும். வீட்டிலும், கல்லூரியிலும் தோன்றும் பொய்யான கலக உணர்ச்சிகளை சரியாக திசை மாற்றி தனது வாழ்க்கையின் ஆளுமையை கண்டு பிடிக்கும் வழியில் அந்த முதல் காதல் புன்னகையுடனும், சுய எள்ளலுடனும் உலர்ந்து உதிர்ந்துவிடும்.

...

நடுத்தர வர்க்கம் பொருளாதரத்தில் தனது மேல் வர்க்கத்தைப் பார்த்து கனவு கண்டு விட்டு நிஜத்தில் சாதாரண வாழ்க்கையை சலித்துக் கொண்டே வாழும். இந்த வர்க்கத்தின் பொதுப் பண்பு என்னவென்றால் எதையும் பட்டு பட்டுனு முடிவெடுக்காமல் ஜவ்வாக இழுக்கும். அவ்வகையில் காதல், வீரம், சோகம் எல்லாம் ஜவ்வுதான்.

நடுத்தர வர்க்கம் துணிந்து காதலித்து, காதலின் பிரச்சினைகளை எதிர் கண்டு போராடி வெல்வது அபூர்வம். இதனால் பிரச்சினைகளை விட்டுவிட்டு காதலைப் பற்றிய மயக்கங்கள், அவஸ்தைகள் அதற்கு தேன்தடவிய பர்கராக தாலாட்டி வருடுகிறது. எங்களோடு படம் பார்த்தவர்கள் இந்த ஜவ்வை எவ்வளவு கேலி செய்ய முடியுமோ அவ்வளவு செய்ததுதான் எங்களுக்கு இருந்த ஒரே ஆறுதல்.

சாதியும், மதமும், வர்க்கமும் சேர்ந்து திருமணத்தின் குற்றவியல் சட்டமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நாட்டில் அந்த அசலான பிரச்சினையைப் பற்றி பேசினால்தான் அது காதல் படம். வி.தா.வ யில் கிறித்தவம், இந்து மதம் எல்லாம் ஒரு பேச்சுக்கு வந்து சென்றாலும் படத்தின் இதயம், காதலின் இனிய அவஸ்தையையே பழைய முரளி படங்களுக்கு இணையாக அலுப்பூட்டும் விதத்தில் சுவாசிக்கிறது.

ஆனால் அலைகளின் கடற்கரை வாழ்க்கையில் இல்லாத அமெரிக்கா, அமெரிக்கர்கள் காறித்துப்பிய கென்டகி சிக்கன் கடை, ஷாப்பிங் மால்கள், செல்பேசி, எஸ்.எம்.எஸ், பளீர் சாலையில் பைக் பயணம் இவைதான் இது போன்ற காதல் படங்கள் வந்தடைந்திருக்கும் பரிணாமம். பா வரிசைப் படங்களில் நிலப்பிரபுத்துவ மேன்மையிலிருந்த காதல் இன்று முதலாளித்துவ முன்னேற்றங்களில் வந்து நிற்கிறதே அன்றி இந்தியாவின் காதல் வாழ்க்கையை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உயிராதரமான ஜீவன் இங்கு திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. மேக்கப் இல்லாமல் போராட்டத்தில் உயிர்வாழும் உண்மையான தமிழகக் காதலர்களை சந்திக்க வேண்டுமா? 27.02.10 நக்கீரனின் 24 ஆம் பக்கத்தில் பாருங்கள்.

விடலைப்பருவத்தின் இறுதியில் வரும் முதல் காதல், உயிரியலின் தூண்டுதலே அன்றி அது சமூக உறவுகளில், வாழ்க்கையில் முதிர்ச்சியடைந்த காதலல்ல. முதல் காதலைப் பற்றி பேசவேண்டுமென்றால் அது அனுதாபத்துடன் கிண்டலடிக்கப்பட்டு புரியவைக்கப்பட்டிருக்க வேண்டும். வீட்டிலும், கல்லூரியிலும் தோன்றும் பொய்யான கலக உணர்ச்சிகளை சரியாக திசை மாற்றி தனது வாழ்க்கையின் ஆளுமையை கண்டு பிடிக்கும் வழியில் அந்த முதல் காதல் புன்னகையுடனும், சுய எள்ளலுடனும் உலர்ந்து உதிர்ந்துவிடும்.

குழந்தைகள், காதல் இரண்டும் மனித குலத்தை உடல்ரீதியாகவும், அதனால் இனரீதியாகவும் நேசிக்கவைக்கும் அடிப்படைத் தூண்டுகோல்கள். ஆனால் அவை இரண்டும் அதன் வெளியை சுயம், தனிமை, வீடு என்ற தளைகளிலிருந்து பரந்த சமூக வெளிக்கு நகர்த்தும் போக்கில்தான் புடம் போடப்படுகின்றது.

காதல் ஒரு மனிதனை அதீதமான பலத்துடன் வாழ்க்கையை விருப்பமாக அணுகுவதற்கு தயார் செய்கிறது. காதலின் உதவியால் மனிதன் தனது சுற்றத்தை முன்னர் பார்த்திராத வகையில் அன்புடன் அணுகுகிறான். அவனுக்கு இதுகாறும் சலித்துப்போயிருந்த வாழ்க்கைத் தடைகள் இப்போது தாண்டுவதற்கு எளிதான விசயங்களாக மாறுகின்றன. ஆனால் காதலின் இந்த மகத்துவ ஆயுள் மிகவும் குறுகியது என்பதைப் பலரும் புரிந்து கொள்வதில்லை.

ஒரு ஆணும், பெண்ணும் தமது காதல் உண்மையானதா, பொருத்தமானதா என்பதை தத்தமது சமூக நடவடிக்கைகளிலிருந்தே கண்டுபிடிக்க முடியும். அதை அமெரிக்க, கேரளா லோகேஷன்களோ, அலங்கார உடைகளோ, ரஹ்மானின் உணர்ச்சியைக் கிளறும் இசையிலோ கண்டு தெளிய முடியாது. சரியாகச் சொல்லப்போனால் தமிழ் சினிமா தற்போது உருவாக்கியிருக்கும் இந்த புதிய சினிமா மொழி அதற்கு தடையாகவும் இருக்கிறது. எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்பதை மட்டும் ஒரு பரவச உணர்ச்சியாக எண்ணி எண்ணி இன்பமடையலாம்தான். ஆனால் வாழ்க்கை கோரும் சிக்கல் நமக்கு உணர்த்தும் ஒரே ஒரு யதார்த்தம் கூட இந்த இன்பத்தை வேகமாக முடிவுக்கு கொண்டுவந்து விடும்.

என் காதல் கதை II - ரம்யா

519 டீலக்ஸ் பஸ்... நல்லா ஜம்முனு தான் இருக்கு! மெட்ராஸ் வந்ததுல இருந்து இனிக்கு தான் முதல முதல்ல படம் பாக்க வெளியே வர்றேன். ஈதோ மாயாஜாலாம். மல்டிப்லக்ஸ்னு சொன்னாங்க. எப்டி இருக்கும்னு கேட்டதுக்கு போய் பாருன்னு சொன்னாங்க.

ஸ்டாப் வந்திருச்சு... இறங்கி நடக்கனும் போலேயே!!.. சரி நடப்போம். அட.. நிறையா படத்துல பாத்திருக்கேன்!!..உன்னாலே... உன்னாலே... படத்துல வினய் இந்த தூணுக்குப் பின்னால ஒளிஞ்சு நின்னு தான சதாவோட போன் பேசிட்டு இருப்பான். இப்ப அந்த எடத்துல, கிரீன் சர்ட் போட்ட பையன் ஒருத்தன் நிக்கிறானே...சட்ட கலரப் பாரு.. ராமராஜன் மாதிரி! ரீமேக்க இருக்குமோ? கேட்டா பேசன்னு சொல்லுவானுங்க...போன் பேசிட்டு இருக்கானே!! அந்த பக்கம் அவனோட சதா இருப்பாளோ??

ச்ச நான் பாத்த பாத்துட்டான்! ஐய்யயோ இனிமே வச்ச கண்ணு வாங்காம என்னையே பாக்க போறான். அட ... என்ன பாத்தும் பாக்காதது போல இருக்கான்? நல்ல பையன் போல? இல்லாட்டி நாம அவ்வளோ அழகா இல்லியோ? இல்ல.. இல்ல.. அவன் அவனோட ஆளோட பேசிட்டு இருக்கான்...

ஹும். நாமளும் இப்படி எப்ப பேச போறோமோ? எங்க டா இருக்கே நீ?? எப்ப டா வருவே??

எனக்கும் காலம் வரும்.. டேய் கிரீன் சர்ட் அப்பா வச்சுக்குறேன் உன்ன.... இவன வச்சுக்கிட்டு நாம என்ன பண்ண போறோம்? இவன் தான அல்ரெடி என்கேஜ் ஆய்டான்ல!

ஓகே! மகா டிக்கெட் வாங்கிட்டு வந்துட்டா!! இங்க டிக்கெட் 120 ரூபாயாம்!! எம்மாடியோவ்! ... இதே எங்க ஊர்ல நாங்க மூணு பேர் படத்துக்கு போனா 120 வராது...சென்னை பயங்கர காஸ்ட்லியா தான் இருக்கு!! சரி... உள்ள போவோம்.... அட மெடல் டிடெக்டர்'லாம்? செக்குரிடியோ?

க்கும்... யாரது.. அந்த கிரீன் டி-சர்ட்... நாயே! நீ அக்கா தங்கச்சியோட பொறகால?... அவங்க பின்னால போய் இடிடா...

நான்: ஸ்டுபிட்!!
மகா: என்னடி ஆச்சு...??
நான் : ஒன்னும் இல்ல... வாடி ..

இதுக்குன்னே வரானுங்க... இவனுக்கு போய் சர்டிபிகேட் குடுத்தேனே....ச்ச மூட் அவுட் பண்ணிட்டான்.
.
.
.
.
.
.
[படம் முடிகிறது]
இப்பலாம் எந்த படத்துலயும் 'வணக்கம்' போட மாட்டாங்களா? சரி கெளம்புவோம்...

ச்ச.. படத்துக்கு வந்ததே வெஸ்ட் .. அந்த கிரீன் டி-சர்ட்.... இடிய ட்.. ச்சே...

மகா: என்னடி... படம் எப்டி...
நான் : வாய மூடிட்டு வாடி...

அம்மா! நல்லா தல வலிக்குது...

ம்ம்ச்... இப்ப எவன்........
டேய் நீயே தானாடா...

நான்: பொருக்கி நாயே! சோற தான திங்கிற...

[சட் என கன்னத்தில் ஒரு அரை விட்டதும், மழை காளான் போல சில சமூக சேவகர்கள் டோஸ் விட்டனர்]

நான்: என்னடா மொறக்கிற.. பண்றதையும் பண்ணிட்டு...

[அனைவரும் கலைந்தனர்]

மகா: ஏய்! என்னடி பண்ணிட்ட.. உன் இடுப்ப தொட்டது இவன் இல்லடி.. அதோ பின்னால திரும்பிடே நடக்குற மாதிரி ஓடுறான்ல.. அந்த தொப்பி போட்டவன் தான்...

நான் : அப்ப இவன் அவனோட பிரண்டா இருப்பன். ஒரு கேங்கா தான்'டி வரானுங்க...உள்ள வரும்போது இவன்.. வெளிய போகும் போது அவன்....

மகா : இல்லடி.. இருக்காது!! அங்க பாரு அவன் பேரன்ஸோட படம் பாக்க வந்திருக்கான். எவனா இருந்தாலும் பேரன்ஸோட இருக்கும் போது இப்டி நடந்துக்க மாட்டான். அவங்கள பாத்தா டீசன்ட் ஆனா பேமிலி மாதிரி இருக்கு...

நான் : அப்டியா சொல்ற? ஆமா.. இருக்கலாம்... ஆனா?

மகா: சரி ... சரி... அப்டியே வா. போய்டலாம்...

அட ஆமா!... சாரி கேக்கணுமா??.. நான் பண்ணினது தப்பு தான்... ஆனா சாரி கேட்டு எனக்கு பழக்கம் இல்லியே...

அடடா! அவங்கள கிராஸ் பண்ணிதான் போகனுமா?அங்க நின்னு எவங்க எல்லாரும் என்னையே பாக்றாங்க...

ஐய்யயோ... அந்த அம்மா யாரு... அந்தப் பையனோட அம்மாவ இருக்குமோ?
என்ன நோக்கி வராங்களே!

அம்மா: என்னம்மா?! என் பையன் என்ன தப்பு செஞ்சான். இவ்ளோ பேருக்கு முன்னால அரஞ்சுட்ட....

ஐய்யயோ... இப்டிலாம் எனக்கு நடந்ததே இல்லையே!!

நான்: ஐயோ! சாரிமா! உங்க பையனுக்கு பதிலா வேற ஒரு பையன்ன அடிச்சுட்டேன்.

அம்மா : ம்ம்ம்!! ??

நான் : சாரி! வேற ஒரு பையனுக்கு பதிலா உங்க பையன்ன அடிச்சுட்டேன்.

அம்மா: அடிக்கிறது தான் உன் வேலையா?? எதுக்காக அடிச்சேன்னு சொல்லு.. அதுவும் நாலு பேருக்கு முன்னால...

நான் : அம்மா! நான் உங்கள இதுக்கு முன்னால எங்கயோ பாத்திருக்கேனோ?

அம்மா: பேச்ச மாத்தாத!! சொல்லு என் அடிச்ச என் பையன?? அவன் உன் கையா பிடிச்சு இழுத்திருந்தாலும் நீ பொது எடத்துல வச்சு அவன அடிச்சது தப்பு தான்...

அடடா! அவன அடிச்சது தப்பே இல்ல!!

நான் : அம்மா நீங்க பாக்யலக்ஷ்மி அக்கா'வோட கசின் சிஸ்டர் தான.... என்ன ஞாபகம் இல்லியா?

அம்மா : பாக்யவ உனக்கு எப்டி தெரியும்??!!

[அப்புறம் பாக்ய அக்காவ எனக்கு எப்டி தெரியும்னு சொன்னேன்

இப்படித்தான் என் காதல் கதை ஆரம்பித்தது!!!]

இப்படிக்கு,
ரம்யா

(மீதி கதை வாசகர்கள் கற்பனைக்கு :)

என் காதல் கதை I - பல்லவி

இன்னிக்கு ஏன் நான் பறக்குற மாதிரி இருக்கு?? இருக்காதா பின்ன, ஊர்ல அப்பாவோட டிவிஎஸ் 50 ய ஓட்டிட்டு, இப்ப புதுசா வாங்குன ஸ்கூட்டி பெப்'ப ஓட்டுறது, பிளைட் ஓட்டுறது மாதிரி தான் இருக்கும். இந்த
துப்பட்டா வேற, பறந்துட்டே இருக்கு...

இன்னிக்கு டீம்ல எல்லார்டையும் சொல்லியாச்சு, ரமா மட்டும் தான் பாக்கி. புதுசா குமார்னு ஒரு பையன் வரப்போறானாம்... அவனடையும் வண்டி வாங்குனத சொல்லிற வேண்டியது தான்.

அப்பா அந்த ஓட்ட வண்டிய செகண்ட்ஸ்ல இன்ஸ்டால்மன்ட்ல வாங்குனதா சொல்வாரு ...
இப்ப ரெடி கேஸ் குடுத்து...................................

ரோட்ல அந்தப் பையன், என்ன பண்றான்...... கிராஸ் பண்ண போறானா? இல்லியா? ........
போறானோ?... இல்ல... போறான்... போறான்... இல்ல... போறான் .... இல்ல... இல்ல .... இல்ல...போறான்.... டேய் நில்லுடா ...

ஐயோ! அம்மா!!!... என்ன ஆச்சு எனக்கு........

அப்பாடா .. என்னக்கு ஒன்னும் ஆகல... கைல தான் ஏதோ ஸ்க்ராச் மாதிரி இருக்கு...ஐயயோ என் அழகே கெட்டு போச்சு...

ஏன் இவங்க சத்தம் போடறாங்க ... அங்க ஏதோ கூட்டம் மாதிரி இருக்கே? ஐய்யயோ அந்த பையன்....

என்னாச்சு அவனுக்கு...

நான் : தள்ளுங்க ... தள்ளுங்க... என்னாச்சு ??!!

ஐய்யயோ கீழ விழுந்து கெடக்கானே....பக்கத்துல போய் பாப்போம்...
முருகா! என்ன ஆச்சு இவனுக்கு?....
[ சற்று முன் தோன்றிய சமூக சேவகர்களிடமிருந்து வசவு கிடைக்கிறது ]

இவங்க என்ன சொன்னாலும் பரவா இல்ல.. என் மேலயும் தப்பு இருக்குல ....

நான் : அண்ணே ஒரு ஆட்டோ கூப்டுங்க

இந்த அண்ணனும் ஆட்டோல வந்தா நல்லா இருக்கும் ...
ஆனா மூணு பேரா ஆட்டோல போக முடியாது... அதுவும் இவன படுக்க வச்சு போகணும்...

விதி ஏன் இப்டி என்னோட விளையாடுது .... கண்டவன எல்லாம் என் மடில படுக்க வச்சு.... கடவுளே...

ச்சே அப்டி நெனக்காத டி... உனக்கு உருப்படியா சைக்கிளே ஓட்ட தெரியாது...
காசு குடுத்து லைசன்ஸ் வாங்கி வண்டி ஓட்டுனா இப்டிதான், சனி பின் சீட்ல ஜம்முனு உக்காந்து வரும்....

இந்த ஆட்டோகாரன் ஏதோ நல்லவனா இருந்ததால வந்துட்டான்... இல்லாட்டி... போலீஸ கேசு அப்டி இப்டினு எதாச்சும் சொல்லி இருப்பாங்க...

இதே மாதிரி வருமே... அட நம்ம 'காக்க காக்க'...
மாயா அண்ட் .சி.பி அன்புச்செல்வன்.
மாயாக்கு அடி படாம.... அன்புச்செல்வன்' க்கு அடிபட்டிடுச்சு...
அன்புச்செல்வன் ஏன் யுனிபார்ம் போடாம இருக்கார்.
கேப்போமா ?!!
ஸ்டுபிட் கேர்ள்... எந்த நேரத்துல காமடி பண்ற.... இந்த ரண காலத்துலயும்.... ஹும்...

முதல்ல இவனோட சொந்தகாரங்களுக்கு சொல்லுவோம்....பையில மொபைல் இருக்கா? இல்லையே... பேண்ட் பையில வேற தேடணுமா....
ச்சே வேணாம்.... ஆட்டோகாரர் கிட்ட சொல்லி எடுக்க சொல்லுவோம்...
முதல்ல ஹாஸ்பிடல் போவோம்....

.
.
.
.
.
என்ன அட்மிட் பண்ண மாற்றங்களா?...
போலீஸ கேஸ் பயில் பண்ணனுமா?
என்ன சொன்றாங்க இவங்க... ஒருத்தர் உயிருக்கு போராடிட்டு இருக்கார்...

ஆட்டோ காரர் : சார் சட்டம் எல்லாம் மாறிடுச்சு... சட்டப்படி இப்ப கேஸ் பயில் பண்ணனும்னு அவசியம் இல்ல... மொதல்ல டாக்டர கூப்டுங்க... நா பேசறேன்...

அப்டியா ? இது எல்லாம் நமக்கே தெரியாம போச்சு...!!நாட்ல என்ன நடக்குதுன்னு தெரிய மாடிங்குதுப்பா....நமக்கு இத எல்லாம் சொல்றாங்களா??
.
.
.
.
._____

இப்படித் தான் எங்கள் காதல் கதை ஆரம்பித்தது...

இப்படிக்கு,
பல்லவி
(மீதி கதை வாசகர்கள் கற்பனைக்கு :)

கனவும் அவளும் (பாகம் - ஆ)

கனவும் அவளும் (பாகம் - அ)

மழையானாலும் பரவாயில்லை என மழை-கவசத்தை அணிந்து கொண்டு விரைவாக தான் நண்பர்களுடன் தங்கியிருக்கும் வீடு நோக்கி வண்டியை விட்டான் ரவி.

பிறகு தன் நண்பர்களோடு சேர்ந்து, கடந்த ஆறு மாதங்களாக ஒரு புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்க செய்துவரும் ஆயத்தப் பணிகளை அரைமனதுடன் தொடர்ந்தான்.
இவையெல்லாம் காயத்ரிக்கு தெரியாது. அவளிடம் காயத்ரி சொல்ல நினைத்ததும் இதுவே.

சிறிது நேரத்திற்கெல்லாம் காயத்ரியிடமிருந்து அழைப்பு வந்தது. சற்று நிதானித்தே அழைப்பை ஏற்றான்.

"என்ன ரவி தூங்கிட்டியா?"

"இல்லடா!"

"அட்டன் பண்றதுக்கு இவ்ளவு நேரமாச்சு?" என்று கோபித்துக்கொண்டாள் காயத்ரி.

பிறகு, "சரி!, இன்னிக்கு ஈவ்னிங் ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்னு சொன்னியே, இப்ப சொல்லு"

"அதுவா? அதுவந்து... ஒண்ணுமில்ல..." இவ்வாறு சமாளிக்க நினைத்துப் பிறகு ஒருவாறு ஆரம்பித்தான்.

"தேவி, எனக்கு நீ ரொம்ப பெரிய ஹெல்ப் பண்ணனும், பண்ணுவியா?"

"என்னடா... ? ஹெல்ப்னுலாம் கேக்குற புதுசா. எனிதிங் சீரியஸ்?"

"யா தேவி!"

"சரி சொல்லு..."

"அதாவது தேவி.... அடுத்த மாசத்துல இருந்து வேலைய விட்டுடலாம்னு இருக்கே"

"என்ன சொல்ற ரவி... ஆர் யு ஜோக்கிங். உனக்கு என்ன பைத்தியமா? லுசாபா நீனு?"

"ஆமா தேவி... நா முடிவெடுத்துட்டேன்.

"நானும், என்னோட காலேஜ் பிரான்சும் சேந்து சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கப் போறோம் ஆறு மாசமா ப்ரிபரேடரி வொர்க்ஸ் பண்ணிட்டு இருகோம். அடுத்து நாங்க போக போற பாத கொஞ்ச கஷ்டமானதா இருக்கும். ஆனா எங்களுக்கு முழு நம்பிக்க இருக்கு. நாங்க எல்லாருமே சொந்த கால்ல நிக்கணும்னு முடிவு பண்ணிடோம். இன்னும் ரெண்டு வருஷம் சமாளிச்சுடோம்னா அடுத்து கெடக்க போற பேர், புகழ், பணம் எல்லாமே நம்ம லைப மாத்திடும்..."
இவ்வாறு சொல்லிவிட்டு, பின்பு பின் வருமாறு தொடர்ந்தான் ரவி.

"இது எல்லாத்துக்கும் மேல எங்க அப்பாவோட ஆச.. எழ பிள்ளைங்க படிகிரதுகு ஒரு ஸ்கூல் ஆரம்பிக்றது நேரவேரிரும்....எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு தேவி... அப்ப என்னக்கு ஒரு பத்து வயசு இருக்கும். 'நா பெருசானது ஒரு கார் வாங்கி உங்களையு அம்மவயு கூட்டிட்டு போவே' அப்ப வெளையாட்டா அப்பா கிட்ட சொன்னது
அப்பாவுக்கும் வயச்சாயிடே போது.. நா சொன்னத செஞ்சு காட்ட வேண்டாமா?
என்ன சொல்ற தேவி...? "
இவ்வாறு சொல்லிமுடிக்கையிலே,
"கிங்.........கிங்...........கிங்..........", அழைப்பு துண்டிப்பானது.

கனவும் அவளும் (பாகம் - இ)

கனவும் அவளும் (பாகம் - அ)

(ஒரு குறுந்தொடர்கதை, பாகம் - அ)
எல்லா வார சனிக்கிழமை போலவே அன்று மாலையும் அவர்கள் கடற்கரைக்கு காற்று வாங்க சென்றிருந்தனர். வானம் சற்று கறுத்து தான் காணப்பட்டது. மழை வரலாம் போல இருந்தது.

அவன் ரவி என்ற ரவிவர்மன். அவள் காயத்ரி என்ற காயத்ரி தேவி. இவர்கள் இருவரும் கடந்த பதினாறு மாதங்களாக காதலித்து வருகின்றனர். சென்ற புதனோடு இவர்கள் இருவரும் சந்தித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. இருவரும் அந்தச் சிறு வளர்ந்துவரும் மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

எல்லா காதலர்கள் போல உண்டேன், உடுத்தினேன் என அவசியமல்லாவற்றை பேசிமுடித்து விட்டு ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்ல வாயெடுத்தான் ரவி. ஏனோ அவனுக்கு இன்று அவளிடம் அந்த விஷயத்தை சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது.

"தேவி, நேத்து ஒரு பார்வட் மெயில் படிச்சே. அதுல நம்ம இன்போசிஸ் நாராயண மூர்த்தி சாரோட ஒய்ப் சுதாவ பத்தி படிச்சேன்"

"ஆமா ரவி, நா கூட படிச்சிருக்கேன். முன்னாலேயே அந்த மெயில் எனக்கு வந்திருக்கு"

"ம்!. ஹவ் க்ரேட் ஷி இஸ், இல்ல ? ஒவ்வரு ஆணோட வெற்றிக்கு பின்னாலயும் ஒரு பொண்ணு இருப்பான்னு சொல்வாங்க. அது மூர்த்தி சார் விசயத்துல எவ்ளவு உண்ம தேவி"

"சரி தா ரவி! இது சாதாரண ஹவுஸ் ஓய்ப்ஸ்கும் அப்ளிகபில்"

"இருகலா தேவி ஆனா அவங்க எல்லாருமே ஒரு ஆண வெற்றி பெற வச்சாங்கன்னு சொல்ல முடியாது"

"அப்டினா சுதா மூர்த்தி போல எல்லா பொண்ணுங்கனால இருக்க முடியாதுன்னு சொல்றியா ரவி?"

"அப்டி இல்ல. அவங்க வாழ்க்கை முறை அதுக்கு ஒதுழக்காது.சுதா மூர்த்தி விசயத்துல அவங்க மூர்த்தி சாருக்ககவும் அவரோட கனவுக்காகவும் எவ்ளவோ த்யாகம் செஞ்சிருக்காங்க. உனக்கு தெரியுமா? , ஷி காட் ஹேர் எம்.டெக் ப்ரம் ஐ.ஐ.எஸ்.சி பங்ளூர் இன் 1975.

'பெண்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம்' ன்னு கண்டிசனோட இருந்த டாட்டா வோட டெல்கோ கம்பனி விளம்பரத்த படிச்சுட்டு கோபத்தோட ஜே.ஆர். டி டாட்டா வுக்கே லெட்டர் எழுதுனாங்கலாம். பின்ன கால் லெட்டர் அனுப்சு அவங்கள டாட்டா வேலைக்கு எடுத்துச்சாம்.

மூர்த்தி சார் இன்போசிஸ் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி அவர விட அதிகம் சம்பாதிச்சுட்டு இருந்தாங்களாம்! பின்ன அந்த வேலைய விட்டுட்டு மூர்த்தி சார்'உடையும் , அவரோட பிரண்ட்ஸ்'உடையும் சேந்து இன்போசிஸ் ஆரம்பிச்சாங்களாம். அவங்க எல்லாருமே ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம். அவங்களாம் அப்ப கஷ்டபட்டதால தா நமக்கு இப்ப இவ்ளவு ஆப்பர்சுனடீஸ்.இந்த மாதிரி நெறைய சொல்லிடே போலாம்."

இவ்வாறு கதை சொல்லிவிட்ட பிறகு ரவி,
"சுதா மூர்த்தி பல பேருக்கு ரோல் மாடலா இருக்கனும்" , என்று கூறிக்கொண்டே காயத்ரியை குறிப்பது போல பார்த்தான்.

பல மாதங்களாக பாரமாக மனதில் வைத்திருந்ததை அன்று காயத்ரியிடம் சொல்லிவிடவேண்டும் என எண்ணியிருந்தான் ரவி.

"தேவி, உன்கிட்ட ஒரு முக்கியமான விசயத்த பத்தி சொல்லணும்"
இவ்வாறு அவன் சொல்லிக்கொண்டே அண்ணார்ந்து வானத்தைப் பார்த்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. எனென்றால், அப்போது மலைச்சாரல் மெல்ல மெல்ல ஆரம்பித்திருந்தது.

"ரவி, இப்ப கேளம்பினாதான் நான் ஹாஸ்டல் போய் சேர முடியும் போல டா, என்ன ட்ராப் பண்ணிட்ரியா?"

பலமுறை இந்த விசயத்தை காயத்ரியிடம் சொல்ல வந்து, சொல்ல முடியாத படி இப்போது ஆகிவிட்டது.

மழையை திட்டி என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டே தன் இருசக்கர வாகனத்தில் காயத்ரியை அவள் தங்கியிருக்கும் விடுதியில் இறக்கிவிட்டான். அப்போது மழை நன்றாக பிடித்துக்கொண்டது.....

கனவும் அவளும் (பாகம் - ஆ)
கனவும் அவளும் (பாகம் - இ)

அதனை விட

உன் கரம் தழுவிய நிமிடத்தினும்,
உன் துப்பட்டா வருடிய ஸ்பரிசமே இனிக்கிறது.

நீ சூடும் மல்லிகை மணத்தினும்,
உன் மூச்சுக்காற்றே பிடிக்கிறது.

பிரிந்திருந்த பல நாட்களினும்,
பிரியும் அந்த ஒரு நொடியே அதிகம் வலிக்கிறது.

நீ பேசும் பல ஏச்சுக்களினும்,
நீ சாதிக்கும் மௌனமே வலிக்கிறது.

தாமரையின் பாடல் வரிகளினும்,
உன் உளறல்களே பிடிக்கிறது.

வைர நெஞ்சம்

அவள் வைர நெஞ்சத்தவள்,
எறும்பு ஊறக் கூட கல் தேயுமாம்!

உனக்கு பிடிச்சிருந்தா…எனக்கும் தான்

தொலைபேசி விடாமல் சிணுங்கியது…. எடுக்க ஆளில்லாமல் அல்ல. அவன் குளியல் அறையிலிருந்து வெளியே வருவதற்கும் மணியடிப்பது நிற்பதற்கும் சரியாய் இருத்தது. இவ்வளவு சீக்கிரம் எழுந்து அவனுக்குப் பழக்கம் இல்லை. அம்மாவின் வற்புறுதலினால் எழுந்தாலும், இன்று திருமணம் என்பதால் உற்சாகமாகிவிட்டான். ஏழு மணிக்குத் திருமணம்.

அவன் கை கடிகார முள் 7।35 எனக் காட்டியது, நேற்று மாலை நிலவரப்படி. பத்து ஆண்டுகளிருக்கும், அவன் பொதுத் தேர்வு எழுத வெறும் கையுடன் செல்வதைக் கண்டு அந்த கடிகாரத்தை அவள் பரிசளித்து. ஆனால் சுவர் கடிகாரம் 4।55 எனக் காட்டியது.

திறந்த மேனியுடன், உடல் முழுக்க நீர் மொட்டுக்களுடன், இடுப்பில் கட்டிய துண்டுடன், தலையைக் கூட காயவிடாமல், சோபாவில் அமர்ந்தான்। இன்று திருமணம் என்றாலும் விழிகள் இரண்டும் அரை நித்திரையில் கரைந்தன.

சில ஞாபகங்கள், சில கொண்டாட்டங்கள், சில துயரங்கள், சில சாதனைகள், சில சோதனைகள், இவ்வாறு பற்சில கண் முன் வந்து சென்றன. கடந்த கால நாட்கள் மொத்தத்தில் இனிமையாகவே தெரிந்தன. குழந்தைப்பருவம், பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம், வாழ்க்கைப்பருவம் ஆகியன அனைத்தும் கடந்து வந்தது அவர்களது பந்தம்.

எதிரெதிர் வீட்டில் குடியிருந்த அவர்கள் இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள்। ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் அவனால் அவளுக்கு அளிக்க முடிந்தது நாளனா ஆரஞ்சு புளிப்பு மிட்டாய் மட்டுமே। இன்றும் கூட அதையே கடைபிடிக்கிறான்। அவனால் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கேக்கை காணமுடிந்தது…॥ ருசிக்கவும் தான்।.

அவர்கள் நெருங்கிப்பழக விதை விதைத்த நிகழ்ச்சி: ஒரே பள்ளியில் படித்த அவர்களுக்கு அன்று பொதுத்தேர்வு। பள்ளிக்கு அவளை விட்டுச்செல்ல வந்த தந்தை, “வாட்சுல மணி சரியா இருக்காமா? ” எனக் கேட்டபோது அவள் நினைவுக்கு வந்தது ‘திருச்செந்தூர் முருகன் கோவில்’ செந்நிற காப்புக்கயிறு மட்டும் கட்டியிருக்கும் அவன் கைகளே।உடனே தந்தையிடம் மன்றாடி, அவர் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை அவனுக்கு பரிசளித்தாள்।இருவரும் படிப்பில் கெட்டி என்றாலும், அவளுக்கு கோவையிலும் அவனுக்கு மதுரையிலும் பட்டம் பயிலும் வாய்ப்பு கிடைத்தது।.

இடவேற்றுமையால் பிரிந்திருந்தாலும் மனவொற்றுமையால் சேர்ந்திருந்தனர். அதற்கு மின்னஞ்சல், தொலைபேசி , செல்போன், கல்லூரிகளுக்கிடையே நடக்கும் போட்டிகள் ஆகியவை உதவின. வாழும் யுக்திகளை இருவரும் பரிமாறிப் பயின்றனர். கல்லூரி வாழ்வில் இருவரும் பண்பட்டனர்.கல்லூரி வளாக நேர்முகத் தேர்வில் இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒரே துறையில் பணியமர்த்தப்பட்டனர். இருவரின் எண்ண்ங்களும், திறமையும், வளர்ச்சியும் ஒன்று போல் இருந்தன……இவ்வாறு ஒவ்வொரு நிகழ்வும் அவன் கண் முன் வந்து சென்ற அந்த தருணத்தில்…. க்ரீங்,க்ரீங்…..க்ரீங்,க்ரீங்….. என திரும்பவும் தொலைபேசி மணி அடித்தது. அது வரை உறவாடிக்கொண்டிருந்த இமைகள் இரண்டும் பிரிக்கப்பட்டன.அவன் ரிசீவரை எடுத்தான்…. ஆம்! அவளே தான். .

"என்னடா… எழுந்துட்டியா?… ".

" ஆமா சத்யா, இப்பதான் குளிச்சேன், … குளிச்சிட்டு சோபால உக்காந்து லேசா கண்ணசந்தே…"

" கிறுக்கா! குளிச்சா தொவட்ட மாட்டியா…. கல்யாணத்துல மூக்கு ஒலுகிட்டு யே பக்கத்துல போஸ் குடுக்க போரடா!! ".

" சரி, இத சொல்ல தான் போன் பன்னியா? "

" இல்ல… நா எடுத்து குடுத்த ட்ரஸ் பிடிச்சிருக்கு தான? "

"அதுக்கு என்ன….. உனக்கு பிடிச்சிருந்தா, எனக்குந் தா!"

"அப்றம்ம்… அப்பா சொன்னாரு… அவரு உள்ள வர்றதுக்கு முன்னாடி தங்க செய்ன் போட்டு வரவேற்பாங்களா"

"பொண்ணோட பெறந்த அண்ணன், தம்பி தான் போடுவாங்க….. அதுக்கு நா முன்னாடி நின்னு செய்ன் போட்டு வரவேற்கனும்…. அவ்லொ தான!… "

" டேய்! மதன்னா, மதன் தான்!…… வெரி குட்.. ஓகே… பய் டா…. சீக்கிரம் ஆறு மணிக்கெள்ளா வந்துறு சரியா…. தோ அவர்ட்ட இருந்து கால் வருது….. பய், கால் யூ லேட்டர்…"

" பய்…. ஹெவ் அ குட் டே "

அவன் மதன் என்ற மதன்குமார். அவள் ஜோதி என்ற சத்யஜோதி. இன்றைய மகிழ்ச்சி எண்ணியைத் தொடக்கிவைத்து ரிசீவரை வைத்தான். மெத்தை மீது அவளுக்கு பிடித்த, அவனுக்கு பொருத்தமான மெரூன் நிற சர்ட்டும், சான்ட்ல் நிற பேண்டும் மஞ்சளிட காத்திருந்தன.

மதனும் ஜோதியும் நண்பர்கள். இதை மனதில் கொண்டு திரும்ப ஒருமுறை இக்கதையை வாசியுங்கள்... என்ன உலகமடா இது!!

முழுக்கு

காதலுக்கு வருகை அளித்து,
சாதிக்கு முழுக்கு அளிப்போம்,
சமூகம் எனும் வகுப்பறையிலே!

மூன்றாம் காதல்

அவளைப் பார்த்து இன்புற்று,
அவள் சிரிப்பை ரசித்து.
அவள் பேச்சில் மயங்க இருந்த வேளையில்,

"இதற்குப் பெயர் இனக்கவர்ச்சி", என்று
தலையில் குட்டு வைத்தது முதல் காதல்.

"இதற்குப் பெயர் சலனம்", என்று
கன்னத்தில் அறைந்தது இரண்டாம் காதல்.

இரண்டு நிமிடக் காதல்

இரண்டொரு நிமிடத்தில் வரும் காதல்,
ஐந்து நிமிட இன்பத்தை எண்ணியே வருவது;
இரண்டொரு வருடம் நீடித்து காதல் ஆகும்
நட்பை விட அது கேவலமானது.

காதல்

விளக்க முடியாத சிலத் தலைப்புகளில் இதுவும் ஒன்று. எனவே முன்பின் தெரியாத ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்வோம். அது ஈர்ப்பு (attraction) தாம். அதற்கு மேல் வேறு ஏதுமில்லை. சுரப்பி(harmone) செய்யும் களங்கம் என ஒரு கவிஞன் சரியாய்ச் சொன்னான்.

“காதல் என்பது விக்கல், இருமல், கொட்டாவி, நல்லது, கேட்டது, பசி, பட்டினி, பதவி மாதிரி, எப்பவரும், எப்படிவரும் யாராலையும் சொல்லமுடியாது. வராதனாலும் ஏன்னு கேக்க முடியாது, வந்ததாலும் தடுக்க முடியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல சரியா வந்துரும் “, என்று தத்துவம் பேசுவாங்க பலர்.

கடவுள் படைத்த ஆதி மனிதன் ஒரு மலையின் சாரலில் வசித்தான். மழைக்கும், காற்றுக்கும் அவனுக்கு மலைக்குகை அடைக்கலம் தந்தது. வன விருட்சங்கள் அவனுக்குத் தேவையான கனி வர்க்கங்களை உணவாக அளித்தன. காட்டு மிருகங்கள் அவனைக் கண்டு நடுநடுங்கின. வானத்துப் பறவைகளைப் போல் அவன் சுயேச்சையாக ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்தான். ஆயினும் அவனுடைய உள்ளத்தின் உள்ளே ஏதோ ஒரு குறை, - இனந்தெரியாத ஒரு வகைத் தாபம், - இடைவிடாமல் குடிகொண்டிருந்தது. ஏதோ ஒரு காந்த சக்தி அவனைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஓர் அரிய பொருளை, - இது வரை பார்த்தும் அனுபவித்தும் அறியாத இன்பத்தை, - அவனுடைய இதயம் தேடிக் கொண்டிருந்தது. பகலில் அதைப் பற்றிக் கற்பனை செய்தான்; இரவில் அதைப் பற்றிக் கனவு கண்டான்.

“எனக்காகவே படைக்கப்பட்ட அந்த அற்புதப் பொருளை,- கற்பகக் கனியை, - என்னைக் கவர்ந்திழுக்கும் காந்தத்தை, எங்கே காண்பேன்? எப்போது காண்பேன்?” என்று அவன் இதயம் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது. ஆதி மனிதனைப் படைத்த அதே சமயத்தில் இறைவன் ஆதி ஸ்திரீயையும் படைத்தார். மலையின் மற்றொரு பக்கத்துச் சாரலில் அவள் வசித்து வந்தாள். பசிக்கு உணவும், தாகத்துக்குச் சுனை நீரும், தங்கியிருக்க மலைக்குகையும் அவளுக்கு இருந்தன. வெளிப்படையாகப் பார்த்தால் ஒரு குறையும் இல்லை. ஆனால் உள்ளத்தினுள்ளே ஒரு தீப்பிழம்பு ஜுவாலை விட்டு அவளை எரித்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு சக்தி அவளைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. அச்சக்தி எங்கிருந்து அவளை இழுக்கிறது, எந்தத் திசையை நோக்கி இழுக்கிறது என்பது ஒன்றும் தெரியவில்லை.

ஆதி மனிதனுக்கும் ஆதி ஸ்திரீக்கும் இடையில் ஒரு பெரிய மலை ஓங்கி நின்று ஒருவரையருவர் சந்திக்க முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

வெயிற் காலத்தில் ஒருநாள் இயற்கை நியதி காரணமாகக் காட்டில் தீ மூண்டு நாலாபுறமும் பரவத் தொடங்கியது. மலையைச் சுற்றி நெருப்பு அதிவேகமாகப் பரவி வந்தது. மனிதனும் ஸ்திரீயும் காட்டுக்குள் போனால் ஆபத்துக்குள்ளாவோம் என்று உணர்ந்து மலை மேல் ஏறினார்கள். மலையின் உச்சியில் அவர்கள் ஒருவரையருவர் பார்த்தார்கள். பார்த்த கண்கள் பார்த்தபடி கண் கொட்டாமல் நின்றார்கள். காட்டுத் தீயை மறந்தார்கள். எதற்காக மலை உச்சியில் ஏறினோம் என்பதையும் மறந்தார்கள். பசி தாகங்களை அடியோடு மறந்தார்கள். இத்தனை காலமும் தாங்கள் உயிர் வாழ்ந்ததெல்லாம் இந்த ஒரு சந்திப்புக்காகவே என்பதை உள்ளுணர்வினால் அறிந்தார்கள். தங்களைக் கவர்ந்திழுத்த இனந் தெரியாத சக்தி இதுதான் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். தங்களில் ஒருவரிடம் உள்ள குறையை இன்னொருவரால் இட்டு நிரப்பிப் பூர்த்தி செய்ய முடியும் என்பதை அறிந்தார்கள். இவ்விதம் ஒன்று சேர்ந்து விட்டவர்களை இனிப் பிரிக்கக் கூடிய சக்தி உலகில் வேறொன்றும் கிடையாது என்பதையும் உறுதியாக உணர்ந்தார்கள்.

இந்த அற்புதக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த படைப்புக் கடவுளான பிரம்மதேவர் தாம் ஆரம்பித்த வேலை நல்ல முறையில் தொடங்கி விட்டது என்பதை அறிந்து பரிபூரணத் திருப்தி அடைந்தார்!


(ஆதி : கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ )

இன்றையக் காதல் அகராதியின்படி, காதல் வருகிற அறிகுறியை ஒவ்வொரு இளைஞனும், இளைஞியும் இவ்வாறுதான் ஜீரணிக்கின்றனர்.

இதுத் தொடக்கம் மட்டும் தான். இது குறித்துப் பல கருத்துச் சிதறல்கள் வெளிப்படும். பார்த்தவுடன் காதல், நட்பிற்குப் பின் காதல், திருமணத்திற்குப் பின் காதல். இதில் எது சரியாக இருக்கும்.

முதல் வகையில், பலருக்கு குழப்பம். “அது எப்படிங்க பார்த்தவுடன் வரும்”. இவ்வாறு வரும் காதலை வெளிப்படுத்தும் இளைஞனுக்கு வசைமொழியே எதிரொலி, அவள் சிறந்த பெண்மகளாய் இருந்தால்.

நட்பிற்குப் பின் காதல்: “நா உன்ன பிரண்டா தா நெனச்சேன், என்ன உன் தங்கச்சிய நெனச்சுக்கோ”, இது தான் அநேகப் பெண்களின் பதில். மூன்றாவது ரகம் பற்றிப் பேசுவதற்கு இதுத் தகாத இடம்.

‘ஆணியே புடுங்கவேணாம்’, என்பது போல அல்லவா இருக்கிறது. வேறு எந்தப் பாணியில் தான் காதல் செய்வது. காதல், எவ்வாறு தொடங்கினால் இந்த கன்னியர் ஏற்றுக்கொள்வர்.

மேல் கூறிய வகைகள் போல, மேலும் சில வகைகளும் உண்டு. (எ.கா.) ‘பார்க்காமல் காதல்’. இதை எல்லாம் யார் தான் கண்டுபிடிபார்களோ?

இந்தக் காதலின் வெற்றி, படிப் படியாகவே செல்கிறது. ஒரு பால் , எதிர் பாலரிடம் மையல் கொள்ளுதல் முதற்படி, விண்ணபித்தல் இரண்டாம் படி, எதிர் பாலரிடமிருந்து பச்சைக் கொடி மூன்றாம் படி. சச்சரவு இன்றி திருமணம் வரை செல்லுதல் கடைசி.

எத்தகைய வகையில் காதல் செய்தாலும், இன்றைய இளைஞர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அறிவு, மனம் இதற்கு இடையே நடக்கும் போட்டியில் யார் வெல்கிறாரோ, அதைப் பொறுத்தே அவற்றை இயக்குபவரது வெற்றி, தோல்வி அமையும்.

அறிவு: பிறந்ததில் இருந்து நம்மைச் சுற்றி நடபனவற்றை சேமித்துவைக்கும் பெட்டகம்.

மனம்: அறிவை உபயோகித்து, தனக்கும் பிறருக்கும் தேவையானவற்றை பூர்த்தி செய்வது.

"அறிவிற்கு அதனையும் தெரியும், மனதிற்கு உன்னை மட்டும் தான் தெரியும், இக்கட்டான நேரத்தில் அறிவு சொல்வதை கேட்காதே, மனம் சொல்வதை மட்டும் கேள்" என்றார் விவேகனந்தர்.

அறிவு, பொது விதிகளை மதிப்பது, மனம் விதிகள் அற்றது. அறிவு, புலன்களை அடக்குவது; மனம், சலனப்படுவது; அறிவு, அளவுடையது. மனம், அளவுகள் கடந்தது.

‘சளி பிடித்திருக்கிறது’ என்று எச்சரிப்பது மனம். ‘ஐஸ்கிரீம்’ உண்ண வேண்டும் என்று ஆசைப்படுவது மனம். ஆசைபடுவதற்கு மட்டும் மனம் அல்ல.

புத்தர், "ஆசைகள் அற்ற இடத்தில் துன்பங்கள் அற்றுவிடும்" என்றார். அதே புத்தர், ‘ஆசைப்படாமல் இருபதற்கு ஆசைப்பட்டார்’. ஆசைப்படாமல் இருக்க முடியாது.

ஆசைபடு. சிலர் கூறுவதை போல ‘அத்தனைக்கும் ஆசைப்படு’. ஆசை நிறைவேறினால் மகிழுந்து கொள்.

அந்த மகிழ்ச்சியைத் தவிர வாழ்வில் வேறேன்ன வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆசைக்கு முற்ப்படு.
இப்போது காதலுக்கு வருவோம். முடியுமா? என எண்ணிப்பார். முடியும் என்றால் முற்ப்படு, இல்லாவிடில், அதே முயற்சியில் வாழ்க்கைப் பாதையில் சிலர் கல் போல உறைந்துக்கிடப்பர். உங்களுக்குத் தெரியுமா அவர்கள் நம் வழிகாட்டிகள்.

காதல்… கவர்ச்சி… ஈர்ப்பு… அறிவு… மனம்… ஆசை….. இந்தப் படைப்பின் முதல் வரியை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்