மூன்றாம் காதல்

அவளைப் பார்த்து இன்புற்று,
அவள் சிரிப்பை ரசித்து.
அவள் பேச்சில் மயங்க இருந்த வேளையில்,

"இதற்குப் பெயர் இனக்கவர்ச்சி", என்று
தலையில் குட்டு வைத்தது முதல் காதல்.

"இதற்குப் பெயர் சலனம்", என்று
கன்னத்தில் அறைந்தது இரண்டாம் காதல்.

2 comments:

Unknown said...

காதல விட்றதா இல்ல‌..!! :-)

Sateesh said...

அதான் இரண்டுடன் நிறுத்திக் கொண்டானல்லவா ?(அது நான் இல்லிங்கோ, பாட்டுடைத்தலைவன்)