Showing posts with label பாதி கதை. Show all posts
Showing posts with label பாதி கதை. Show all posts

என் காதல் கதை II - ரம்யா

519 டீலக்ஸ் பஸ்... நல்லா ஜம்முனு தான் இருக்கு! மெட்ராஸ் வந்ததுல இருந்து இனிக்கு தான் முதல முதல்ல படம் பாக்க வெளியே வர்றேன். ஈதோ மாயாஜாலாம். மல்டிப்லக்ஸ்னு சொன்னாங்க. எப்டி இருக்கும்னு கேட்டதுக்கு போய் பாருன்னு சொன்னாங்க.

ஸ்டாப் வந்திருச்சு... இறங்கி நடக்கனும் போலேயே!!.. சரி நடப்போம். அட.. நிறையா படத்துல பாத்திருக்கேன்!!..உன்னாலே... உன்னாலே... படத்துல வினய் இந்த தூணுக்குப் பின்னால ஒளிஞ்சு நின்னு தான சதாவோட போன் பேசிட்டு இருப்பான். இப்ப அந்த எடத்துல, கிரீன் சர்ட் போட்ட பையன் ஒருத்தன் நிக்கிறானே...சட்ட கலரப் பாரு.. ராமராஜன் மாதிரி! ரீமேக்க இருக்குமோ? கேட்டா பேசன்னு சொல்லுவானுங்க...போன் பேசிட்டு இருக்கானே!! அந்த பக்கம் அவனோட சதா இருப்பாளோ??

ச்ச நான் பாத்த பாத்துட்டான்! ஐய்யயோ இனிமே வச்ச கண்ணு வாங்காம என்னையே பாக்க போறான். அட ... என்ன பாத்தும் பாக்காதது போல இருக்கான்? நல்ல பையன் போல? இல்லாட்டி நாம அவ்வளோ அழகா இல்லியோ? இல்ல.. இல்ல.. அவன் அவனோட ஆளோட பேசிட்டு இருக்கான்...

ஹும். நாமளும் இப்படி எப்ப பேச போறோமோ? எங்க டா இருக்கே நீ?? எப்ப டா வருவே??

எனக்கும் காலம் வரும்.. டேய் கிரீன் சர்ட் அப்பா வச்சுக்குறேன் உன்ன.... இவன வச்சுக்கிட்டு நாம என்ன பண்ண போறோம்? இவன் தான அல்ரெடி என்கேஜ் ஆய்டான்ல!

ஓகே! மகா டிக்கெட் வாங்கிட்டு வந்துட்டா!! இங்க டிக்கெட் 120 ரூபாயாம்!! எம்மாடியோவ்! ... இதே எங்க ஊர்ல நாங்க மூணு பேர் படத்துக்கு போனா 120 வராது...சென்னை பயங்கர காஸ்ட்லியா தான் இருக்கு!! சரி... உள்ள போவோம்.... அட மெடல் டிடெக்டர்'லாம்? செக்குரிடியோ?

க்கும்... யாரது.. அந்த கிரீன் டி-சர்ட்... நாயே! நீ அக்கா தங்கச்சியோட பொறகால?... அவங்க பின்னால போய் இடிடா...

நான்: ஸ்டுபிட்!!
மகா: என்னடி ஆச்சு...??
நான் : ஒன்னும் இல்ல... வாடி ..

இதுக்குன்னே வரானுங்க... இவனுக்கு போய் சர்டிபிகேட் குடுத்தேனே....ச்ச மூட் அவுட் பண்ணிட்டான்.
.
.
.
.
.
.
[படம் முடிகிறது]
இப்பலாம் எந்த படத்துலயும் 'வணக்கம்' போட மாட்டாங்களா? சரி கெளம்புவோம்...

ச்ச.. படத்துக்கு வந்ததே வெஸ்ட் .. அந்த கிரீன் டி-சர்ட்.... இடிய ட்.. ச்சே...

மகா: என்னடி... படம் எப்டி...
நான் : வாய மூடிட்டு வாடி...

அம்மா! நல்லா தல வலிக்குது...

ம்ம்ச்... இப்ப எவன்........
டேய் நீயே தானாடா...

நான்: பொருக்கி நாயே! சோற தான திங்கிற...

[சட் என கன்னத்தில் ஒரு அரை விட்டதும், மழை காளான் போல சில சமூக சேவகர்கள் டோஸ் விட்டனர்]

நான்: என்னடா மொறக்கிற.. பண்றதையும் பண்ணிட்டு...

[அனைவரும் கலைந்தனர்]

மகா: ஏய்! என்னடி பண்ணிட்ட.. உன் இடுப்ப தொட்டது இவன் இல்லடி.. அதோ பின்னால திரும்பிடே நடக்குற மாதிரி ஓடுறான்ல.. அந்த தொப்பி போட்டவன் தான்...

நான் : அப்ப இவன் அவனோட பிரண்டா இருப்பன். ஒரு கேங்கா தான்'டி வரானுங்க...உள்ள வரும்போது இவன்.. வெளிய போகும் போது அவன்....

மகா : இல்லடி.. இருக்காது!! அங்க பாரு அவன் பேரன்ஸோட படம் பாக்க வந்திருக்கான். எவனா இருந்தாலும் பேரன்ஸோட இருக்கும் போது இப்டி நடந்துக்க மாட்டான். அவங்கள பாத்தா டீசன்ட் ஆனா பேமிலி மாதிரி இருக்கு...

நான் : அப்டியா சொல்ற? ஆமா.. இருக்கலாம்... ஆனா?

மகா: சரி ... சரி... அப்டியே வா. போய்டலாம்...

அட ஆமா!... சாரி கேக்கணுமா??.. நான் பண்ணினது தப்பு தான்... ஆனா சாரி கேட்டு எனக்கு பழக்கம் இல்லியே...

அடடா! அவங்கள கிராஸ் பண்ணிதான் போகனுமா?அங்க நின்னு எவங்க எல்லாரும் என்னையே பாக்றாங்க...

ஐய்யயோ... அந்த அம்மா யாரு... அந்தப் பையனோட அம்மாவ இருக்குமோ?
என்ன நோக்கி வராங்களே!

அம்மா: என்னம்மா?! என் பையன் என்ன தப்பு செஞ்சான். இவ்ளோ பேருக்கு முன்னால அரஞ்சுட்ட....

ஐய்யயோ... இப்டிலாம் எனக்கு நடந்ததே இல்லையே!!

நான்: ஐயோ! சாரிமா! உங்க பையனுக்கு பதிலா வேற ஒரு பையன்ன அடிச்சுட்டேன்.

அம்மா : ம்ம்ம்!! ??

நான் : சாரி! வேற ஒரு பையனுக்கு பதிலா உங்க பையன்ன அடிச்சுட்டேன்.

அம்மா: அடிக்கிறது தான் உன் வேலையா?? எதுக்காக அடிச்சேன்னு சொல்லு.. அதுவும் நாலு பேருக்கு முன்னால...

நான் : அம்மா! நான் உங்கள இதுக்கு முன்னால எங்கயோ பாத்திருக்கேனோ?

அம்மா: பேச்ச மாத்தாத!! சொல்லு என் அடிச்ச என் பையன?? அவன் உன் கையா பிடிச்சு இழுத்திருந்தாலும் நீ பொது எடத்துல வச்சு அவன அடிச்சது தப்பு தான்...

அடடா! அவன அடிச்சது தப்பே இல்ல!!

நான் : அம்மா நீங்க பாக்யலக்ஷ்மி அக்கா'வோட கசின் சிஸ்டர் தான.... என்ன ஞாபகம் இல்லியா?

அம்மா : பாக்யவ உனக்கு எப்டி தெரியும்??!!

[அப்புறம் பாக்ய அக்காவ எனக்கு எப்டி தெரியும்னு சொன்னேன்

இப்படித்தான் என் காதல் கதை ஆரம்பித்தது!!!]

இப்படிக்கு,
ரம்யா

(மீதி கதை வாசகர்கள் கற்பனைக்கு :)

என் காதல் கதை I - பல்லவி

இன்னிக்கு ஏன் நான் பறக்குற மாதிரி இருக்கு?? இருக்காதா பின்ன, ஊர்ல அப்பாவோட டிவிஎஸ் 50 ய ஓட்டிட்டு, இப்ப புதுசா வாங்குன ஸ்கூட்டி பெப்'ப ஓட்டுறது, பிளைட் ஓட்டுறது மாதிரி தான் இருக்கும். இந்த
துப்பட்டா வேற, பறந்துட்டே இருக்கு...

இன்னிக்கு டீம்ல எல்லார்டையும் சொல்லியாச்சு, ரமா மட்டும் தான் பாக்கி. புதுசா குமார்னு ஒரு பையன் வரப்போறானாம்... அவனடையும் வண்டி வாங்குனத சொல்லிற வேண்டியது தான்.

அப்பா அந்த ஓட்ட வண்டிய செகண்ட்ஸ்ல இன்ஸ்டால்மன்ட்ல வாங்குனதா சொல்வாரு ...
இப்ப ரெடி கேஸ் குடுத்து...................................

ரோட்ல அந்தப் பையன், என்ன பண்றான்...... கிராஸ் பண்ண போறானா? இல்லியா? ........
போறானோ?... இல்ல... போறான்... போறான்... இல்ல... போறான் .... இல்ல... இல்ல .... இல்ல...போறான்.... டேய் நில்லுடா ...

ஐயோ! அம்மா!!!... என்ன ஆச்சு எனக்கு........

அப்பாடா .. என்னக்கு ஒன்னும் ஆகல... கைல தான் ஏதோ ஸ்க்ராச் மாதிரி இருக்கு...ஐயயோ என் அழகே கெட்டு போச்சு...

ஏன் இவங்க சத்தம் போடறாங்க ... அங்க ஏதோ கூட்டம் மாதிரி இருக்கே? ஐய்யயோ அந்த பையன்....

என்னாச்சு அவனுக்கு...

நான் : தள்ளுங்க ... தள்ளுங்க... என்னாச்சு ??!!

ஐய்யயோ கீழ விழுந்து கெடக்கானே....பக்கத்துல போய் பாப்போம்...
முருகா! என்ன ஆச்சு இவனுக்கு?....
[ சற்று முன் தோன்றிய சமூக சேவகர்களிடமிருந்து வசவு கிடைக்கிறது ]

இவங்க என்ன சொன்னாலும் பரவா இல்ல.. என் மேலயும் தப்பு இருக்குல ....

நான் : அண்ணே ஒரு ஆட்டோ கூப்டுங்க

இந்த அண்ணனும் ஆட்டோல வந்தா நல்லா இருக்கும் ...
ஆனா மூணு பேரா ஆட்டோல போக முடியாது... அதுவும் இவன படுக்க வச்சு போகணும்...

விதி ஏன் இப்டி என்னோட விளையாடுது .... கண்டவன எல்லாம் என் மடில படுக்க வச்சு.... கடவுளே...

ச்சே அப்டி நெனக்காத டி... உனக்கு உருப்படியா சைக்கிளே ஓட்ட தெரியாது...
காசு குடுத்து லைசன்ஸ் வாங்கி வண்டி ஓட்டுனா இப்டிதான், சனி பின் சீட்ல ஜம்முனு உக்காந்து வரும்....

இந்த ஆட்டோகாரன் ஏதோ நல்லவனா இருந்ததால வந்துட்டான்... இல்லாட்டி... போலீஸ கேசு அப்டி இப்டினு எதாச்சும் சொல்லி இருப்பாங்க...

இதே மாதிரி வருமே... அட நம்ம 'காக்க காக்க'...
மாயா அண்ட் .சி.பி அன்புச்செல்வன்.
மாயாக்கு அடி படாம.... அன்புச்செல்வன்' க்கு அடிபட்டிடுச்சு...
அன்புச்செல்வன் ஏன் யுனிபார்ம் போடாம இருக்கார்.
கேப்போமா ?!!
ஸ்டுபிட் கேர்ள்... எந்த நேரத்துல காமடி பண்ற.... இந்த ரண காலத்துலயும்.... ஹும்...

முதல்ல இவனோட சொந்தகாரங்களுக்கு சொல்லுவோம்....பையில மொபைல் இருக்கா? இல்லையே... பேண்ட் பையில வேற தேடணுமா....
ச்சே வேணாம்.... ஆட்டோகாரர் கிட்ட சொல்லி எடுக்க சொல்லுவோம்...
முதல்ல ஹாஸ்பிடல் போவோம்....

.
.
.
.
.
என்ன அட்மிட் பண்ண மாற்றங்களா?...
போலீஸ கேஸ் பயில் பண்ணனுமா?
என்ன சொன்றாங்க இவங்க... ஒருத்தர் உயிருக்கு போராடிட்டு இருக்கார்...

ஆட்டோ காரர் : சார் சட்டம் எல்லாம் மாறிடுச்சு... சட்டப்படி இப்ப கேஸ் பயில் பண்ணனும்னு அவசியம் இல்ல... மொதல்ல டாக்டர கூப்டுங்க... நா பேசறேன்...

அப்டியா ? இது எல்லாம் நமக்கே தெரியாம போச்சு...!!நாட்ல என்ன நடக்குதுன்னு தெரிய மாடிங்குதுப்பா....நமக்கு இத எல்லாம் சொல்றாங்களா??
.
.
.
.
._____

இப்படித் தான் எங்கள் காதல் கதை ஆரம்பித்தது...

இப்படிக்கு,
பல்லவி
(மீதி கதை வாசகர்கள் கற்பனைக்கு :)