ஒரு அஞ்சு செகண்ட் இருக்கும்... நான் குடுத்தது லோயர் லிப்'ல   தான்'னு நெனக்கிறேன். சரியா ஞாபகம் இல்ல. ஹ்ம்ம்.. நைஸ் பன்ச்.  உங்க அப்பா கவனிச்ச மாதிரி காட்டிக்கல...  அப்றம் செம டோஸ் எனக்கு.  .. அதையும் போன்ல சொன்ன நீ. என்னதான் இருந்தாலும் ஒரு ஐயர் பொண்ண  ... சாரி.. .ஐயங்கார் பொண்ண அவளோட  அப்பா முன்னாலேயே பப்ளிக் ப்லேஸ்ல  
கிஸ்  பண்ண ஒரு தனி தைரியம் வேணும்.என்னோட தைரியத்த நிரூபிக்க நான்  அப்டி பண்ணல ப்ரியா... ஏதோ தோனுச்சு...  அதான் நீ வேற கேட்டியா. . . 
                  இதோ  கெளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு. நான் போக போறேன். செக்யுரிட்டி  செக். க்யூல எனக்கு பக்கத்துல நீ நிக்கிற.  முழங்கால் தெரியறமாதிரி கௌன் போட்ட       பொண்ணு வந்து "மேடம்.. ப்ளீஸ் கம் ஆன்  க்யூ" னு  உண்ட சொன்னா.
                நீ  அவள பாத்து சிரிச்சுட்டு என்ன பாத்த... எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு   ப்ரியா. உன்னோட ப்யூடிபுள் ஐஸ் . நான் இருக்கற ஹைட்டுக்கு நீ   என்ன அண்ணாந்து தான் பாக்கணும். 5.9' இருப்பேன் . என்ன அண்ணாந்து  பாக்கற   அளவு நீ உயரமா இருப்ப. ஆக்சுவலி உனக்கு கிஸ் குடுக்கறதுக்கு  கஷ்டமா தான்  இருந்து. ஆனா, நீ அப்டியே என்னோட நெஞ்சுல சாஞ்சா உன் உயரம்   சரியா  இருக்கும். நீ இன்னும் வளரனும்.
                 "ஐ'ம் லிவிங் ப்ரியா!"ன்னு சொல்லிட்டே செக்யுரிட்டி செக் பண்ண  போனேன். முடிஞ்சுது... போர்டிங் பே'ல உக்காராம அந்த பக்கம் நீ நிக்கிறத  பாத்துட்டு இருந்தேன்.
                 இப்பவே திரும்ப வந்துடலாம்னு தோனுச்சு... ஆனா முடியல.. முடியாது.. ஆமா  போய் தான் ஆகணும். இது தான் உங்க அப்பா பேசுனதுக்கு எல்லாம் பதில்.  அவருக்கு இப்ப சந்தோசமா இருக்கலாம். நாம ரெண்டு பெரும் பிரிஞ்சு இருக்க  போறோம்ல.
               எனக்கு பயமே இல்ல.. இந்த சான்ஸ யூஸ் பண்ணி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க  முடியாது. உன்னோட அனுமதி இல்லாம என்னோட நிழல் கூட உன்ன டச் பண்ண முடியாது. அப்டி இருக்கும்  போது நான் எதுக்கு பயப்படனும். நாடோடிகள்'ல   வர்ற அப்பா போல மிரட்டினா , நீ பருத்திவீரன்'ல  வர்ற ப்ரியாமணி   மாதிரி பேச  மாட்டேனாலும்,  பிரச்சனைய சமாளிக்க கூடிய  சாதுர்யம் உண்ட இருக்கு.
               ரெண்டு பேருக்கும் 20 அடி தான் டிஸ்டன்ஸ்.  ஆனாலும் ரொம்ப தூரம் தள்ளி போயிட்ட  மாதிரி இருந்தது. உன்னோட இடது  கண்'ல இருந்து  ரெண்டு சொட்டு கண்ணீர்  விழுந்தது ஞாபகம் இருக்கு . உன்ன அப்டி பாக்க பிடிகல எனக்கு.
                 "ஒரு தடவ போயிட்டு வந்துடறேன்னு"  சொன்னா இந்த சர்தார் போலிஸ்காரர் என்ன சொல்வார்னு தெரியாது. அப்டி கேட்டா  விட கூடாதானு தோனுச்சு. 
                  கேட்டேன்...  முடியாது'ன்னு சொல்லிட்டார். உலகத்துல இருக்கற ஒட்டுமொத தலப்பா கட்டின சர்தார் மேலையும் கோபம்  வந்துச்சு.
                கடைசில காத்துலயே  "ஐ மிஸ் யூ" னு சொன்னேன். நீயும்  பதிலுக்கு "மீ டூ"ன்னு  சொன்ன. சைகைளையும் வாய் அசைவுளயும்  ஏதேதோ பேசிகிட்டோம். பெருவிரலையும், சுண்டுவிரலையும் நீட்டி மத்த விரல மடக்கி காதுகிட்ட  வச்சு லேன்ட் ஆனதும் போன் பண்ண சொன்ன.
                  இது என்ன ரெஸ்ட்றிக்டியன் , ப்ளைட்ல போன் பேசகூடாது'ன்னு... வாட்  டெக்னாலாஜி, வாட் சென்ட்ரல் கவர்மன்ட், வாட் ஸ்டேட் கவர்மன்ட்.
                  ஏதோ உண்ட சொல்ல வர கைய விரிச்ச போது, அந்த சர்தார் போலிஸ் மேல தடார்னு  பட்டுடுச்சு. மனுசர் இந்தில முறைச்சுட்டு இந்திலயே சொன்னார், "பீச்சே சல்.. சேர் பர்  பைட் ஜா...  "
                  "சாரி சர்.. ஜஸ்ட் டூ மினிட்ஸ்"னு சொல்லிடு அங்கயே நின்னேன்.
(பகுதி II முற்றும்.... தொடரும்...) 
1 comment:
இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல.
இவை இதுநாள் வரை நடக்கவில்லை. ஆனால், இனிமேல் நடகலாகாது எனக் கூற இயலாது.
Post a Comment